சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னை கத்திபாரா ஹோட்டல் ராயல் லீ மெரிடியன்.. வெறும் 423 கோடிக்கு விற்றது ஏன்? பரபர காரணங்கள்!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் உள்ள பெரிய ஹோட்டல்களில் ஒன்றான ஹோட்டல் ராயல் லீ மெரிடியன் விற்பனைக்கு ஏன் சென்றது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னையில் கிண்டி கத்திபாரா சந்திப்பில் உள்ள லீ மெரிடியன் ஹோட்டல் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டது.

அரசியல்வாதிகள் முதல் சினிமா பிரபலங்கள் வரை இந்த ஹோட்டலில் தங்குவதும் சுப நிகழ்ச்சிகள், பிறந்தநாள் பார்ட்டிகளை நடத்தியும் வந்தனர். உயர் பதவியில் வகிக்கும் இந்தியர்கள், வெளிநாட்டினரும் இங்கு தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்.

ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்.. வெள்ளி வென்ற மீராபாய் சானுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து! ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்.. வெள்ளி வென்ற மீராபாய் சானுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

கேள்வி

கேள்வி

இந்த ஹோட்டலை எம்ஜிஎம் ஹெல்த்கேர் நிறுவனம் வாங்கிவிட்டது. அதிலும் ரூ 1600 கோடி மதிப்புள்ள இந்த ஹோட்டலை ரூ 423 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது ஏன் என்பதற்கான காரணங்கள் வெளியாகியுள்ளன.

அப்பு ஹோட்டல்ஸ்

அப்பு ஹோட்டல்ஸ்

அந்த ஹோட்டலை நிர்வகித்து வரும் அப்பு ஹோட்டல்ஸ் நிறுவனம் இந்திய சுற்றுலா நிதி கழகத்திற்கு ரூ 18 கோடி நிலுவைத் தொகை கொடுக்க வேண்டியிருந்தது. இந்த தொகையை கொடுக்க உத்தரவிட வேண்டும் என தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தில் இந்திய சுற்றுலா நிதிக் கழகம் மனு ஒன்றை தாக்கல் செய்தது.

இந்திய சுற்றுலா நிதி கழகம்

இந்திய சுற்றுலா நிதி கழகம்

இந்த வழக்கில் இந்திய சுற்றுலா நிதி கழகத்திற்கு கொடுக்க வேண்டிய தொகையை கொடுக்குமாறு அப்பு ஹோட்டல்ஸுக்கு தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயம் உத்தரவிட்டு கால அவகாசம் வழங்கியது. ஆனால் இந்த தொகையை அப்பு ஹோட்டல்ஸ் நிர்வாகம் கொடுக்காததால் கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த தொகையை வாராக்கடனாக தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயம் அறிவித்தது.

கொரோனா சூழல்

கொரோனா சூழல்

அதன் பின்னர் கொரோனா சூழலால் இந்த தொகையை அப்பு ஹோட்டல்ஸ் கொடுக்காததால் அந் நிறுவனத்திற்கு எதிராக தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயம் திவால் நடவடிக்கையை எடுத்தது. அப்பு ஹோட்டல் நிர்வாகம் பாதுகாக்கப்பட்ட நிதி நிறுவனங்களுக்கு ரூ. 340 கோடி ரூபாயும், பாதுகாப்பற்ற நிதி நிறுவனங்கள் அல்லது தனிநபர்களுக்கு ரூ. 49.13 கோடி ரூபாய் அளவிலான கடன்கள் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

குறைந்த விலைக்கு

குறைந்த விலைக்கு

இதனால் அப்பு ஹோட்டல்ஸ் தங்களது சொத்துகளை விற்கும் முயற்சியில் ஈடுபட்டது. இதற்காக பல நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மற்றும் கோடாக் ஸ்பெஷல் சிச்சுவேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் லீ மெரிடியன் ஹோட்டலை வாங்க முன்வந்தன. இறுதியில் வெறும் ரூ 423 கோடிக்கு எம்ஜிஎம் ஹெல்த்கேர் நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளது.

150 கோடி

150 கோடி

இந்த 423 கோடியில் 150 கோடியை எம்ஜிஎம் உரிமையாளர் எம் கே ராஜகோபாலன் திரட்டிவிட்டார். மீதமுள்ள 273 கோடி ரூபாய்க்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கடன் பெறுவார் என தெரிகிறது. கடந்த 2019 இல் மதிப்பீடு செய்யப்பட்ட அளவைவிட மிகக் குறைந்த விலைக்கு மதிப்பீடு செய்ததற்கு லீ மெரிடியன் ஹோட்டல் உரிமையாளர் ஜி பெரியசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

English summary
Here are the reasons for why Hotel Le Royal Meridien is sold for only Rs 423 crore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X