• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

பெட்ரூம் வரை உறவு.. அடங்காத காமங்கள்.. லாரி ஏற்றியும், தூக்கிட்டும்.. பரிதாப கள்ள காதல்கள்

|

சென்னை: பெட்ரூம் வரை வரவழைத்து, கட்டிலுக்கு அடியில் கள்ளக்காதலனை பதுக்கி வைக்கும் அளவுக்கு சில பெண்கள் துணிந்துவிடுகின்றனர்.. சில பெண்கள் கொலை செய்யும் வரை தங்கள் கள்ளக்காதலை வளர்த்து வருகின்றனர்.. இந்த 3 நாளில் மட்டும் நடந்த 3 மரணங்கள் மக்களை நிலைகுலைய வைத்து வருகிறது.

  திண்டுக்கல்: கட்டிலுக்கு அடியில் கள்ளக்காதலன்: மனைவி தூக்கிட்டு தற்கொலை.. பகீர் சம்பவம்!

  திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூரை அடுத்த குஜிலியாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன்... இவர் ஒரு கம்பெனியில் டெய்லராக வேலை பார்க்கிறார்.. மனைவி பெயர் தனலட்சுமி.. 2 குழந்தைகள் உள்ளனர்.கம்பெனியில் அதிக நேம் வேலை பார்ப்பவராம் வேல்முருகன்..

  அதனால் தினமும் லேட்டாகத்தான் வருவாராம்.. இதனிடையே தனலட்சுமிக்கு ரமேஷ் என்பவருடன் கள்ளக்காதல் வந்துவிட்டது.. ரமேஷ் பெட்ரூம் வரை வந்து போயிருக்கிறார். சம்பவத்தன்றும் இப்படித்தான் ரமேஷ் தனலட்சுமி பெட்ரூமில் இருந்துள்ளார்.. அன்றைய தினம் வீட்டுக்கு வர லேட்டாகும் என்று சொல்லிவிட்டு போன வேல்முருகன், சீக்கிரமாகவே வந்துவிட்டார்..

   கள்ள ஜோடி

  கள்ள ஜோடி

  அதற்குள் பதறிப்போன ரமேஷ் கட்டிலுக்கு கீழே ஒளிந்து கொண்டார். பெட்ரூமுக்கு சென்று வேல்முருகன் கீழே குனிந்து பேண்ட்டை கழட்டியபோதுதான், கட்டிலுக்கு அடியில் ரமேஷ் பதுங்கி இருப்பதை பார்த்து அதிர்ந்துவிட்டார். அங்கேயே அந்த கள்ள ஜோடியை தாக்கியும் உள்ளார்.ரமேஷ் தப்பி ஓடிவிடவும், தனலட்சுமியின் பெற்றோரக்கு விஷயத்தை சொல்லி உள்ளார் வேல்முருகன்.. அவர்களும் அதிர்ச்சியுற்று மகளை கண்டித்தனர்.. ஆனால் அவமானம் தாங்காமல் தனலட்சுமி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

   கீதா

  கீதா

  அதேபோல, நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையம் பகுதியில் வசித்து வந்த கறிகடைக்காரர் சரவணனுடன் கீதா என்பவருக்கு தொடர்பு இருந்துள்ளது.. கீதாவுக்கு 39 வயசு.. கறிக்கடைக்காரருக்கு 36 வயசு.. வீட்டில் விஷயம் தெரிந்து கீதாவின் மகன்கள் கொந்தளித்துள்ளர்.. கள்ளக்காதலை கண்டித்தும் உள்ளனர்.. இதனால் ஏற்பட்ட தகராறில், சரவணன் அடித்து கொல்லலப்பட்டார்.. சரவணின் உடலை ஒரு சாக்குப்பையில் கட்டி ஆம்னி வேனில் வைத்து ஆவாரங்காடு அருந்ததியர் காலனி மயான பகுதியில் கொண்டு வந்து வீசிவிட்டு போனார்கள்.

   கணக்கு வாத்தியார்

  கணக்கு வாத்தியார்

  அதேபோல, 2 நாளைக்கு முன்பு திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்துள்ள பகுதி ராமகிருஷ்ணாபுரத்தில் ஒருவர் மிக கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.. அவரது தலை நசுங்கி இருந்தது.. கை கால்கள் எல்லாம் ரத்த காயங்கள் கிடந்தன..பிறகுதான் விசாரணையில், அவர் பெயர் சிவக்குமார் என்பதும் 37 வயசாகிறது என்பதும், ஊத்தங்கரை அடுத்த ஜோதிநகர் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் கணக்கு வாத்தியாராக வேலை பார்த்து வருபவர் என்பதும் தெரியவந்தது.

   ஆசிரியர்

  ஆசிரியர்

  இவருக்கு அதே பள்ளியில் வேலை பார்க்கும் சயின்ஸ் டீச்சர் லட்சுமியுடன் கள்ளக்காதல் இருந்துள்ளது. டீச்சரின் கணவர் எவ்வளவோ சொல்லி பார்த்தும் 2 பேருமே திருந்தாததால், சிவக்குமாரை கூலிப்படையை வைத்து ஏவி, தலையில் கார் மோதி கொன்றுள்ளனர்.இன்னும் இது போல பல சம்பவங்கள் இந்த 3 நாளில் மட்டும் நடந்துள்ளன.. ஒன்று கொலையில் போய் முடிகிறது.. இல்லையானால், தற்கொலையில் போய் முடிகிறது..

  மழலைகள்

  மழலைகள்

  இதில் தொடர்புடைய சம்பந்தப்பட்ட பெண்களையும், கைது செய்ய வேண்டும் என்று ஆங்காங்கே போராட்டங்களையும் பாதிக்கப்பட்டோர் நடத்தி வருவதையும் காண முடிகிறது. இதில் கடுமையாக பாதிக்கப்பட்டு அம்போவென நிற்பது இந்த கள்ளக்காதலர்களின் பிஞ்சுகள்தான்.. தாய் தகப்பன் என்ன தவறு செய்கிறார்கள் என்பதைகூட புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு மழலைகள் மலங்க மலங்க விழித்து கொண்டிருக்கிறார்கள்!

   கைது

  கைது

  நாளுக்கு நாள் பெருகி வரும் இந்த குற்றங்களை தடுக்க நடவடிக்கை தேவையானதாக இருக்கிறது.. கைதாகுபவர்களுக்கும் தண்டனையை தீவிரப்படுத்த வேண்டி உள்ளது.. வெறும் கள்ளக்காதல் தானே என்று இவைகளை கடந்து போய்விட முடியாது.. என்னதான், சட்டம், தண்டனை, ஆயிரம் இருந்தாலும், திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பதைதான் இந்த கள்ளக்காதல் விஷயத்திலும் சொல்ல வேண்டி உள்ளது.

   
   
   
  English summary
  Why Illegal love and suicide cases increasing nowadays in Tamilnadu
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X