சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாஜக கூட்டணியிலிருந்து நாங்கள் விலகியதற்கு காரணம் பாமக.. பாரிவேந்தர் பரபர பேட்டி

Google Oneindia Tamil News

Recommended Video

    Parivendhar Pressmeet: திமுக உடன் கூட்டணி-பாரிவேந்தர் பரபர பேட்டி- வீடியோ

    சென்னை: இந்திய ஜனநாயக கட்சி, வரும் லோக்சபா தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிக்க உள்ளதாக அக்கட்சி தலைவர் பாரிவேந்தர் தெரிவித்தார்.

    கடந்த லோக்சபா தேர்தலில், பாஜக கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சி, அங்கம் வகித்தது. இந்த நிலையில், திடீரென இப்போது, திமுகவிற்கு ஆதரவு அளிப்பதாக இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் அறிவித்துள்ளார்.

    Why Indhiya Jananayaka Katchi is supporting DMK? - Parivendhar

    இன்று காலை சுமார் 11 மணிக்கு பாரிவேந்தர், அறிவாலயம் சென்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பொன்னாடை போர்த்தி சந்தித்து பேசினார். சுமார் 20 நிமிட சந்திப்புக்கு பிறகு, நிருபர்களிடம் பாரிவேந்தர் பேட்டியளித்தார்.

    பாரிவேந்தர் கூறியதாவது: ஸ்டாலினை சந்தித்து, எங்கள் கட்சி ஆதரவை தெரிவிக்க பற்றி மட்டுமே வந்தோம். தொகுதி பங்கீடு தொடர்பாக பேசவில்லை. திமுகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பது எங்கள் கட்சியின் பொதுக்குழு முடிவு. அதை ஸ்டாலினை நேரில் சந்தித்து தெரிவித்தேன்.

    பாஜகவில் முயன்று.. மய்யமாக திரும்பி.. திமுக பக்கம் பாய்ந்த பாரிவேந்தர்!பாஜகவில் முயன்று.. மய்யமாக திரும்பி.. திமுக பக்கம் பாய்ந்த பாரிவேந்தர்!

    எங்களுடன் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பாக, பேச, திமுக அழைப்புவிடுக்கும்போது, தொகுதி பங்கீட்டு குழு பேச்சுவார்த்தை நடத்தும். தமிழகத்திற்கு, இப்போதுள்ள சூழ்நிலையில், மாற்றம் தேவை. அந்த மாற்றத்தை ஸ்டாலினால்தான் கொடுக்க முடியும். எனவே திமுகவிற்கு ஆதரவு தருகிறோம் என்றார்.

    Why Indhiya Jananayaka Katchi is supporting DMK? - Parivendhar

    பாஜக கூட்டணியிலிருந்து திடீரென நீங்கள் விலக காரணம் என்ன என்ற நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்த பாரிவேந்தர், "பாஜக கூட்டணியிலிருந்து நாங்கள் விலக காரணம் பலருக்கும் தெரிந்திருக்கும். எங்களை தொடர்ந்து இம்சித்தும், பல்கலைக்கழகத்திற்கு தொல்லை கொடுத்தும் வந்த பாமக அந்த கூட்டணியில் இருப்பதால் எங்களால் அந்த கூட்டணியில் தொடர முடியாது" என்றார் அவர்.

    English summary
    Why Indhiya Jananayaka Katchi is supporting DMK and stay away from BJP alliance, Parivendhar replied.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X