சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நெருப்பில் கைவைத்துவிட்டதா பாஜக.. குடியுரிமை சட்டத்துக்கு மட்டும் இவ்வளவு போராட்டம் ஏன்!

Google Oneindia Tamil News

Recommended Video

    நெருப்பில் கைவைத்துவிட்டதா பாஜக ? என்ன செய்ய போகிறது ?

    சென்னை: நெருப்பில் கைவைத்து விட்டதா பாஜக.. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு மட்டும் இவ்வளவு போராட்டம் ஏன்.. மாணவர்கள் போராட்டம் நடத்துவது ஏன்.. நாட்டின் எல்லா பக்கமும் பேராடுவதற்கு காரணம் என்ன.. இந்த நான்கு கேள்விகளுக்கான பதில்களும் வெவ்வேறு காரணங்களாக இருக்கின்றன. அவற்றை இப்போது பார்ப்போம்.

    பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அண்டை இஸ்லாமிய நாடுகளிலிருந்து 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு வரை மததுன்புறுத்தல் காரணமாக இந்தியாவுக்கு வந்து அகதிகளாக குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்கள், பார்சி இனத்தவர்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு நிரந்தர குடியுரிமை அளிக்கப்படும் குடியுரிமை திருத்த சட்டத்தை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாஜக நிறைவேற்றியது.

    இந்த மசோதாவுக்கு ஆரம்பம் முதலே வடகிழக்கின் ஏழு மாநிலங்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டம் நாடாளுமன்றத்தின்இரு அவைகளில் நிறைவேற்றப்பட்ட உடனேயே வடகிழக்கு மாநிலங்களில் தான் போராட்டம் வெடித்தது.

    மத்திய அரசின் சட்டம் சிறுபான்மையினரின் குடியுரிமையை நிச்சயம் பறிக்காது: அமித்ஷா திட்டவட்டம்மத்திய அரசின் சட்டம் சிறுபான்மையினரின் குடியுரிமையை நிச்சயம் பறிக்காது: அமித்ஷா திட்டவட்டம்

    வடகிழக்கு மக்கள்

    வடகிழக்கு மக்கள்

    அங்கு போராட்டம் நடைபெறுவதற்கு காரணம் வடகிழக்கு மாநில மக்களின் வாழ்வாதாரம், உரிமைகள் குறித்த அச்சம் தான். அவர்களை பொறுத்தவரை சட்டவிரோதமாக குடியேறிய யாருக்கும் குடியுரிமை தரக்கூடாது என்பதுதான். ஏனெனில் வங்கதேசம் நாடு முழுவதுமே வடகிழக்கு மாநிலங்களை பிளந்து கொண்டு தான் அமைந்துள்ளது. அங்கிருந்து வசதி வாய்ப்புக்காவும், மத துன்புறுத்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காகவும் பல ஆண்டுகளுக்கு முன்பே (1970களில் இருந்து ) பல்லாயிரம் மக்கள் வந்துவிட்டனர்.

    வடகிழக்கு அச்சம்

    வடகிழக்கு அச்சம்

    இந்த சூழ்நிலையில் புதிது புதிதாக பலரும் சட்டவிரோதமாக வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை குடியேறினார்கள். இப்போது அவர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்பட்டால் தஙகளின் வாழ்வாதாரம், உரிமை , சலுகை அனைத்தும் பாதிக்கப்படும் என்பது வடகிழக்கு மாநில மக்களின் அச்சம். என்னதான் வடகிழக்கு மாநில மக்களுக்கு விலக்கு அளித்தாலும் அங்கு வசித்து வரும் அகதிகள் குடியுரிமை பெற்றுவிடுவார்கள் என்பதே அவர்களின் அச்சம்.

    மத பாகுபாடு

    மத பாகுபாடு

    நாட்டின் பிற பகுதிகளில் குடியுரிமை சட்டம் வேறுவிதமாக பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளுமே இச்சட்டத்தை முஸ்லீம்களுக்கு பாகுபாடு காட்டும் வகையில் மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ளதாக குற்றம்சாட்டுகின்றன. நாட்டின் அரசியல் அமைப்பு சட்டத்தை கேள்விகுறியாக்குவதாவும், நாட்டின் மதசார்பின்மை கொள்கைக்கு எதிராக இருப்பதாகவும் குற்றம்சாட்டுகின்றன.

    மாணவர் போராட்டம்

    மாணவர் போராட்டம்

    இதே குற்றச்சாட்டை முன்வைத்துதான் டெல்லியில் மாணவர்கள் அமைப்பினர் போராட்டங்களை முன்னின்று நடத்தி வருகின்றனர். மாணர்களின் போராட்டங்களுக்கு முக்கிய காரணம் இந்த மசோதா முஸ்லீம் அகதிகளுக்கு மட்டும் ஏன் குடியுரிமை இல்லை என்கிறீர்கள் என்பதே. டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலையில் துவங்கிய போராட்டம் நாடு முழுவதும் பரவி இருக்கிறது. நாடு முழுவதும் பரவ காரணம் டெல்லியில் போலீசார் மாணவர்களை தாக்கியதாக கூறி, அவர்களுக்கு ஆதரவாகவே போராட்டம் அதிகரிக்க ஆரம்பித்தது.

    இலங்கை தமிழர்கள்

    இலங்கை தமிழர்கள்

    தமிழகத்தில் இந்த போராட்டம் கொஞ்சம் வித்தியாசமானது. இலங்கையில் இருந்து சிங்கள இனவாத அச்சுறுத்தல்களால் வந்த தமிழர்களுக்கு குடியுரிமை அளிக்கும் ஷரத்து குடியுரிமை சட்டத்தில் சேர்க்கப்படவில்லை. எனவேதான் இங்கு போராட்டம் நடந்து வருகிறது. அத்துடன் இஸ்லாமியர்களுக்கு பாகுபாடு காட்டப்படுவதாகவும் கூறி இங்கு போராட்டங்கள் நடந்து வருகிறது.

    பிரதமர் விளக்கம்

    பிரதமர் விளக்கம்

    ஆனால் இவற்றுக்கு எல்லாம் பதில் அளித்து வரும் பாஜக, நாட்டில் உள்ள இஸ்லாமியர்களுக்கு இந்த மசோதாவால் எந்த பாதிப்பும் இல்லை என்று விளக்கம் அளித்து வருகிறது ஒரு முஸ்லீமும் பாதிக்கப்பட மாட்டார்கள் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா பலமுறை இந்த விளக்கத்தை அளித்துவிட்டனர். ஆனாலும் மக்கள் போராட்டத்தை இதுவரை கைவிட்ட பாடில்லை. இதேபோல் அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களின் உரிமைகள், கலாச்சாரங்கள் பாதுக்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்த போதிலும் வடகிழக்கில் போராட்டங்கள் குறையவில்லை. எதிர்க்கட்சிகளின் சதி பின்னால் இருக்கலாம் என பாஜக சந்தேகிக்கிறது.

    நெருப்பில் கை

    நெருப்பில் கை

    இதனிடையே குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராட்டம் தீவிரம் அடைய காரணம், மதரீதியாக, இன ரீதியாக, கலாச்சார ரீதியாக , அரசியல் ரீதியாக பாரபட்சமாக இருப்பதாக மக்கள் ஆதங்கப்படுகிறார்கள். எனவே இதில் முதல் மூன்று பிரச்னைக்கு தெளிவு கிடைத்தால், அரசியல் ரீதியான நான்காவது பிரச்சனை காணாமல் போய்விடும். அப்போது தான் பாஜகவுக்கு இதில் முழு வெற்றி கிடைக்கும். இல்லாவிட்டால் குடியுரிமை சட்ட பிரச்சனை என்பது பாஜகவுக்கு நெருப்பில் கைவிட்டதற்கு சமம் தான்.

    English summary
    why indian people protest against Citizenship Amendment Act : four reasons like Religious, racially, culturally and politically.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X