சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

3 பிளான் + 2 குறி.. ஸ்டாலின் கணக்கு நொறுங்குகிறதா.. திமுகவை டேமேஜ் செய்ய போகும் எடப்பாடி.. பாஜக குஷி

எடப்பாடி பழனிசாமி திமுகவுக்கு எதிராக புது வியூகத்தை கையில் எடுக்க போகிறாராம்

Google Oneindia Tamil News

சென்னை: சசிகலாவின் அரசியலை சமாளித்து கொண்டே, திமுகவையும் டேமேஜ் செய்யும் முயற்சியில் இறங்கி உள்ளாராம் எடப்பாடி பழனிசாமி.. அதற்காக புது பிளானை கையில் எடுத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

பொதுச்செயலாளர் குறித்த கோர்ட் தீர்ப்பு வந்தபிறகு, மேல்முறையீடு செய்ய போவதாக சசிகலா அறிவிப்பார் என்று எடப்பாடி தரப்பு நிஜமாகவே எதிர்பார்க்கவில்லை.

அதனால்தான், அதற்கு செக் வைக்க வேண்டிய கட்டாயம் அதிமுக மேலிடத்துக்கு உடனடியாக எழுந்துள்ளது.. எனவே, பொதுச்செயலாளர் பதவி விஷயத்தில் மீண்டும் ஆர்வம் காட்டபோவதாகவும் கூறப்படுகிறது.

“ஸ்டாலின்தான் வாராரு.. சேலம் குலுங்கணும்.. எடப்பாடி அதிரணும்”- நேரு தலைமையில் ஸ்கெட்ச் போட்ட திமுக! “ஸ்டாலின்தான் வாராரு.. சேலம் குலுங்கணும்.. எடப்பாடி அதிரணும்”- நேரு தலைமையில் ஸ்கெட்ச் போட்ட திமுக!

 எடப்பாடி பிளான்

எடப்பாடி பிளான்

எதிர்க்கட்சி தலைவர் பதவியை தவிர்த்து, கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் உள்ளார் எடப்பாடி பழனிசாமி.. எனினும், கட்சியை மொத்தமாக தன் கட்டுப்பாட்டில் வைத்துகொள்வதே அனைத்து பிரச்சனைக்கும் தீர்வு என்று உறுதியாக நம்புகிறார்.. அதற்காகத்தான், 2 விதமான பிளானையும் கையில் எடுத்துள்ளார்.. முதலாவதாக, கிராமம் கிராமமாக சென்று அதிமுகவை பலப்படுத்த போகிறாராம்..

 திமுகவுக்கு சிக்கல்?

திமுகவுக்கு சிக்கல்?

ஒவ்வொரு ஊராட்சி வாரியாக சென்று கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களை சந்திக்கவும் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளதாக கூறுகிறார்கள். மேலும், பிரதமர் மோடி வருகிற 26-ந்தேதி சென்னை வர உள்ள நிலையில், அவரை நேரடியாகவேசந்தித்து ஆலோசனை நடத்தவும் முடிவு செய்துள்ளாராம்.. அப்போது, திமுக பற்றின புகார் லிஸ்ட் ஒன்றையும் பிரதமரிடம் தருவதற்காக, அதற்கான தயாரிப்பு பணியிலும் இறங்கிவிட்டாராம்.

 எடப்பாடி பிளான்

எடப்பாடி பிளான்

மோடி மூலம் திமுகவுக்கு செக் வைப்பது ஒரு வகை என்றால், திமுகவை நேரடியாகவே டேமேஜ் செய்வது இன்னொரு வகையாம்.. அதாவது, திமுக திமுக ஆட்சி ஓராண்டு நடந்து முடிந்த நிலையில், அதை அக்கட்சியினர் கொண்டாடி வருகிறார்கள் இல்லையா.. இதுதான் அதிமுகவுக்கு எரிச்சலை கிளப்பி வருகிறது.. தமிழகம் முழுக்க திமுக தலைவர்கள் மேடை போட்டு, ஆட்சியின் சாதனைகளை விவரித்து வரும் நிலையில், அதை நாடு முழுவதும், மாநில மொழிகளில் விளம்பரப்படுத்தும் முயற்சியிலும் இறங்கி உள்ளதாக தெரிகிறது.

 விளம்பரங்கள்

விளம்பரங்கள்

இதற்குதான் ஆப்பு வைக்க அதிமுக யோசித்து வருகிறதாம்.. எனவே, "திமுக அரசின் 365 நாள் வேதனை" என்ற தலைப்பில் திமுகவை விமர்சித்து வடமாநில பத்திரிகைகளில் வெளியிட அதிமுகவும் பிளான் செய்து வருவதாக தெரிகிறது.. அந்த விளம்பரங்களில், திமுக ஆட்சியின் சட்ட ஒழுங்கு, ரவுடிகளின் ஆதிக்கம், மின் தட்டுப்பாடு, நிறைவேற்றாத வாக்குறுதிகள் என அனைத்தையும் புட்டு புட்டு வைக்க போகிறார்களாம் ஓபிஎஸ்ஸூம் எடப்பாடியும்..

 ஸ்பெஷல் ஐட்டம்

ஸ்பெஷல் ஐட்டம்

இதைவிட இன்னொரு ஸ்பெஷல் ஐட்டம் ஒன்று இருக்கிறது.. அதாவது, இவர்கள் இருவருமே யூடியூப்பில் தோன்றி, திமுகவை விமர்சித்து பேச போகிறார்களாம். திமுக தேசிய அளவில் தன்னுடைய சாதனை விளம்பரங்களை கொண்டு செல்லும் அதே நாளில், அதிமுகவும் இந்த வேதனை விளம்பரங்களை கொண்டு செல்ல போவதாக திட்டமிட்டு வருகிறதாம்.. இந்த இரு தரப்பு நடவடிக்கைகளையும் டெல்லி மேலிடம் கம்மென்று வேடிக்கை பார்த்தபடியே இருக்கிறது.. அன்றைய தினம் என்ன நடக்க போகிறது என்று தெரியவில்லை.. பார்ப்போம்..!

English summary
Why is Edapadi palanisamy starting new two strategies and Will DMK defeat AIADMK's plan எடப்பாடி பழனிசாமி திமுகவுக்கு எதிராக புது வியூகத்தை கையில் எடுக்க போகிறாராம்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X