திடீர்னு "பழனிசாமி" பக்கத்தில் போய் நின்ற மோடி.. திகைத்த ஆளுநர் ரவி.. திக்குமுக்காடிய அதிமுக..!
சென்னை: அதிமுக மேலிடம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த அதிமுக கூடாரமே மகிழ்ச்சியுடன் காணப்படுகிறது.. எல்லாம் பிரதமர் மோடி சென்னை வருகையினால்தான்...!
பொதுச்செயலாளர் குறித்த கோர்ட் தீர்ப்பு வந்தபிறகு, மேல்முறையீடு செய்ய போவதாக சசிகலா அறிவிப்பார் என்று அதிமுக தரப்பில் எதிர்பார்க்கவில்லை..
அதைவிட, சமீப காலமாகவே சசிகலா தந்து பேட்டிகளும் அதிமுகவை நிலைகுலைய வைத்து வருகின்றன... கட்சியை கைப்பற்றுவது என்ற தன்னுடைய முடிவில் இருந்தும், சசிகலா இப்போது வரை பின்வாங்கவில்லை.
எடப்பாடி பிரதமரை வரவேற்க ஏர்போர்ட் போனாலும்.. இது 'மிஸ்ஸிங்’.. எங்கப்பா தொண்டர்களும், கொடியும்?

30 பேர்
இதனிடையே, அதிமுகவின் 30 எம்எல்ஏக்களை சசிகலா தரப்பினர் தட்டி தூக்க போவதாக, செய்திகள் கசிந்துவிடவும், எடப்பாடி லேசான கலக்கம் அடைந்ததாக சொல்லப்பட்டது.. எல்லாவற்றுக்கும் மேலாக, "அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் தன்னுடன் இன்னமும் தொடர்பில் உள்ளனர்" என்று சசிகலா செய்தியாளர்களிடம் பேசியது எடப்பாடிக்கே ஷாக் தானாம்.. அதனால்தான் அவர் மும்முரமாக களத்தில் இறங்கிவிட்டதாக சொல்கிறார்கள்.

எடப்பாடிக்கு டென்ஷன்
ஜெ.இருந்தபோது, மொத்தம் 61 எம்எல்ஏக்கள் இருந்தனர்.. இதே வாக்குவங்கியை இப்போதுவரை எடப்பாடி பழனிசாமி தக்க வைத்து வருகிறார்.. அதாவது கட்சியை பலமாக இறுக்கி பிடித்து தன்னுள் வைத்துவருவதே இவரது சக்சஸ் ஆகும்.. இவர்கள்தான் எடப்பாடிக்கான பலமாகவும் இன்றுவரை உள்ளனர்.. அதேசமயம், இவர்களில் யாருமே சசிகலா பக்கம் தாவிவிடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வும் எடப்பாடி பழனிசாமிக்கு அதிகமாகவே உள்ளது.. ஆகவே, பொதுச்செயலாளர் பதவி விஷயத்தில் மீண்டும் ஆர்வம் காட்டி வருவதாக தெரிகிறது.

மோடி வருகை
இதனிடையே, பிரதமர் மோடி சென்னை வரும்போது, அவரை ஸ்டிரைட்டாக சந்தித்து ஆலோசனை நடத்தவும் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்திருந்ததாக தகவல்கள் வெளிவந்தன.. அப்படி மோடியை சந்திக்கும்போது, கையோடு திமுக பற்றின புகார் லிஸ்ட் ஒன்றையும் கொண்டுபோக முடிவு செய்துள்ளதாகவும், அதைவைத்து திமுகவுக்கு செக் வைக்க போவதாகவும் பரபரத்தன.. எனவே, பிரதமரின் சென்னை வருகையானது அதிமுகவில் பெரிதும் எதிர்பார்ப்பை கிளப்பியது.

ஏர்போர்ட்
அதன்படியே, அரசு விழாவில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி நேற்று முன்தினம் சென்னை வந்தார்... அவரிடம் நெசவாளர்கள் நலனை கருத்தில் கொண்டு நூல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உதான் திட்டத்தின் கீழ் சென்னை- சேலம் இடையே மீண்டும் விமான சேவையை தொடங்க வேண்டும் என்றும், கோதாவரி- காவிரி இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை தேவை என்றும் நடந்தாய் வாழி காவிரி திட்டத்தை தொடங்க மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்றும், எடப்பாடி பழனிசாமியும், ஓபிஎஸ்ஸூம் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தனர்.

எடப்பாடி பழனிசாமி
முன்னதாக, ஏர்போர்ட்டில் பிரதமரை வரவேற்பதற்காக, ஆளுநர் ரவி, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி ஆகியோர் வரிசையாக நின்றனர்... ஃபிளைட்டில் இருந்து இறங்கிய பிரதமர், ஆளுநர், மற்றும் அமைச்சர்களை வணங்கியபடி, நேராக எடப்பாடி பழனிசாமி அருகே சென்று நின்றார் பிரதமர் மோடி.. அவர் கைகளை இறுக்கமாக பிடித்தபடி நலம் விசாரித்தார். இதனால் திக்குமுக்காடிய எடப்பாடி பழனிசாமி, மகிழ்ச்சி பொங்க மோடிக்கு பதில் அளித்தார்...

கெத்து பழனிசாமி
இதை அருகில் இருந்த அமைச்சர்கள் வியந்து போய் பார்த்தனர்.. இந்த வீடியோதான் தற்போது வைரலாகிறது.. இந்த வீடியோவை வைரலாக்கி கொண்டிருப்பவர்கள் அதிமுகவினர்தான்.. "மரியாதையை தேடி போய் வாங்கக் கூடாது, தானாக கிடைக்க வேண்டும்" என்று அந்த கமெண்ட்களையும் பதிவிட்டு வருகின்றனர். அதேபோல, ஐஎன்எஸ்., அடையார் கடற்படை தளத்தில், பிரதமரை ஓபிஎஸ் வரவேற்று, திருக்குறள் புத்தகம் பரிசளித்தார்... அதை பெற்றுக் கொண்ட பிரதமர், அவரது தோளில் தட்டிக் கொடுத்து நலம் விசாரித்தார்...

போட்டோ
இந்த போட்டோவையும் அதிமுகவினர் ஷேர் செய்து வருகின்றனர்.. திமுக விழாவுக்கு பிரதமர் வந்திருந்தாலும், அதிமுகவினரை கனிவுடன் பிரதமர் விசாரித்ததும் கவனத்தை பெற்றுள்ளது.. ஆனால், பிரதமரிடம், எடப்பாடி பழனிசாமி, திமுக பற்றி புகார் லிஸ்ட் தர போவதாக சொன்னார்கள்.. அது என்ன ஆச்சு என்றே தெரியவில்லை.. ஒருவேளை பிரதமர் வந்ததே, திமுக அரசின் அழைப்பை ஏற்றுதான் என்பதால், புகார் தெரிவிக்கப்படவில்லையா? அல்லது மேடையில் பிரதமரும், முதல்வரும் ஒரே மேடையில் பங்கேற்றதால் புகார் தெரிவிக்கப்படவில்லையா? தெரியவில்லை.. பார்ப்போம்..!