சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"முடியாது".. கண்டிப்பாக சொன்னா அமித் ஷா? கொங்கில் என்ன நடக்கும்? எடப்பாடிக்கு எல்லா பக்கமும் இடி!

Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் ஸ்டாலின் அடுத்த வாரம் கோவைக்கு செல்ல உள்ள நிலையில் இந்த மாத இறுதியில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவும் தமிழ்நாடு வர இருக்கிறார். முதல்வர் ஸ்டாலின் கோவை சென்ற சில நாட்களில் அமித் ஷாவும் கோவைக்கு செல்ல உள்ளார்.

Recommended Video

    முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணத்தின் பின்னணி Live

    அடுத்த வாரம் 3 நாள் பயணமாக முதல்வர் ஸ்டாலின் கொங்கு மண்டலம் செல்கிறார். கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களுக்கு 24, 25, 26 ஆகிய நாட்களில் செல்கிறார்.

    இதில் இரண்டாம் நாள் நடக்கும் மாற்று கட்சியினர் இணைப்பு விழாவில் அதிமுக, பாஜகவை சேர்ந்த பல்வேறு நிர்வாகிகள் மொத்தமாக திமுக பக்கம் செல்ல இருக்கிறார்கள். இதற்கான மாபெரும் இணைப்பு விழா நடக்க உள்ளது.

    அதிமுகவில் மோதல் நிலவி வரும் நிலையில்.. அமைச்சர் செந்தில் பாலாஜி இந்த அசைன்மென்டை எடுத்து எடுத்து செய்துள்ளார். இதற்கு இடையில்தான் அமித் ஷா பயணமும் திட்டமிடப்பட்டுள்ளது.

    ஆன்லைன் ரம்மி சூதாட்டத்திற்கு தடை விதிக்கப்படுகிறதா?.. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை ஆன்லைன் ரம்மி சூதாட்டத்திற்கு தடை விதிக்கப்படுகிறதா?.. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை

     அமித் ஷா கோபம்

    அமித் ஷா கோபம்

    அமித் ஷா வரும் 29ம் தேதி கோவை வருகிறார். பாஜக அலுவலகங்களை அவர் திறக்க வருவதாக சொல்லப்படுகிறது. திருச்சி, விழுப்புரம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பாஜக மாவட்ட அலுவலகங்கள் கட்டப்பட்டு உள்ளன. இதில் கோவை அலுவலகத்தை அவர் நேரில் திறக்க உள்ளார். மீதம் உள்ள அலுவலகங்களை கோவையில் இருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைக்க இருக்கிறார். அதன்பின் கோவையில் பல்வேறு பாஜக நிர்வாகிகளை அவர் சந்தித்து ஆலோசனை செய்ய உள்ளார்.

     டென்சன்

    டென்சன்

    தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் மீது அமித் ஷா அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம்.. எதிர்பார்த்த அளவிற்கு பாஜக அடிமட்ட அளவில் முன்னேற்றம் அடையவில்லை என்ற ரிப்போர்ட் அமித் ஷாவிற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. பாஜகவில் உட்கட்சி தேர்தல் நடத்தி, புதிய நிர்வாகிகளை போட்டோம். ஆனால் அவர்கள் அமைப்பு ரீதியாக இதுவரை கட்சியை பலப்படுத்தவில்லை. எங்கும் நிர்வாகிகள் எண்ணிக்கை உயரவில்லை.

    கட்சி அப்படியே இருக்கிறது

    கட்சி அப்படியே இருக்கிறது

    கட்சி அப்படியேதான் இருக்கிறது. டிவியில் மட்டும் பிரபலமாக இருந்தால் வாக்குகள் வராது. பாஜகவின் பலமே களப்பணிதான். அது கம்மியாக இருக்கிறது என்ற ரிப்போர்ட் அமித் ஷாவிற்கு சென்றதாக கூறப்படுகிறது. இதை பற்றி விசாரிக்கவும், மாவட்ட நிர்வாகிகளுக்கு டோஸ் விடவும் அமித் ஷா கோவை வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் பல்வேறு பாஜக நிர்வாகிகள் வெவ்வேறு விவகாரங்களில் கைதானது, பிடிஆர் விவகாரம், சரவணன் கட்சி மாறியது ஆகியவை பற்றியும் அமித் ஷா விசாரிப்பார் என்கிறார்கள்.

    அதிமுக முடியாது

    அதிமுக முடியாது

    இது போக 2024ல் அதிமுகவுடன் கூட்டணி வைக்காலமா? எடப்பாடி - ஓபிஎஸ் மோதல் விவகாரத்தில் என்ன நிலைப்பாடு எடுப்பது? சசிகலாவை ஆதரிக்கலாமா? என்றும் இவர்கள் ஆலோசனை செய்ய உள்ளனர். இந்த பயணத்தில் அமித் ஷாவை சந்திக்க எடப்பாடி முயன்றதாக கூறப்படுகிறது. ஆனால் அதிமுக தலைகளுக்கு அவர் நேரம் கொடுக்கவில்லை. இது முழுக்க முழுக்க பாஜக ரீதியிலான பயணம் மட்டுமே.

    கண்டிப்பு காட்டுவார்

    கண்டிப்பு காட்டுவார்

    அதனால் அதிமுக தலைவர்களை அவர் சந்திக்க மாட்டார் என்று கூறப்படுகிறது. முன்னதாக பிரதமர் மோடியை டெல்லியிலும், பின்னர் சென்னையிலும் சந்திக்க எடப்பாடி முயன்றார். இரண்டு முறையும் எடப்பாடியை தனியாக சந்திக்க மோடி அனுமதிக்கவில்லை. இந்த நிலையில்தான் அடுத்த இடியாக அமித் ஷாவும் எடப்பாடியை சந்திக்க தயாராக இல்லை என்று கூறப்படுகிறது. இந்த பயணம் முழுக்க கட்சி ரீதியிலான பயணமாக இருக்கும் என்றே பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    English summary
    Why is Minister Amit Shah coming to Tamil Nadu? Will he meet Edappadi?முதல்வர் ஸ்டாலின் அடுத்த வாரம் கோவைக்கு செல்ல உள்ள நிலையில் இந்த மாத இறுதியில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவும் தமிழ்நாடு வர இருக்கிறார்
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X