சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திருவாரூர் இடை தேர்தல் ரத்து... இதற்காகத்தான் கமுக்கமாக இருந்ததா அதிமுக??

திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு காரணம் என்ன?

Google Oneindia Tamil News

Recommended Video

    Thiruvarur Election cancelled | நம்பகத்தன்மையை இழக்கிறதா தேர்தல் ஆணையம்?

    சென்னை: திருவாரூர் இடைத் தேர்தல் ரத்தானதைப் பார்க்கும்போது, இதெல்லாம் முன்கூட்டியே தெரிந்துதான் இவ்வளவு இழுபறி செய்து கொண்டிருந்ததா அதிமுக என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இந்த அறிவிப்பை பொறுத்தவரை 2 விஷயங்களில் மாற்றுக் கருத்து இல்லை. ஒன்று, கஜா நிவாரண பணிகள் தரப்படவில்லை என்று சொல்லப்பட்டிருப்பது.

    மற்றொன்று மக்கள் இன்னும் அந்த பாதிப்பு வலிகளிலிருந்து மீளவில்லை போன்றவைகளை உணர்ந்து மதிப்பு தர வேண்டியது உள்ளது. அதில் மாற்றுக் கருத்து இல்லை.

    சரியான நடவடிக்கை.. நல்லது.. திருவாரூர் தேர்தல் ரத்துக்கு தமிழிசை வரவேற்பு! சரியான நடவடிக்கை.. நல்லது.. திருவாரூர் தேர்தல் ரத்துக்கு தமிழிசை வரவேற்பு!

    பொதுவான கேள்வி

    பொதுவான கேள்வி

    திமுக தலைவர் ஏற்கனவே கேட்டபடி, எதற்காக திருவாரூரை தவிர மற்ற தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்படவில்லை என்பது பொதுவான கேள்வியாகவே உள்ளது. அறிவிக்கப்பட்ட தொகுதியும் திமுகவின் ஒரே ஒரு தொகுதி, அறிவிக்கப்படாத மற்ற 19 தொகுதிகளும் அதிமுக தொகுதி என்தபால் அங்கெல்லாம் தேர்தல் அறிவிக்கப்படவில்லையா? என்ற நியாயமான சந்தேகமும் எழுந்தது.

    ஆளும் தரப்பு

    ஆளும் தரப்பு

    ஆனால் ஜெயலலிதா இறந்து இந்த வருடங்களில் ஒரே ஒரு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலைதான் அரசு சந்தித்திருக்கிறது. அதுவே மிகப்பெரிய அமர்களத்துக்கு இடையில்தான் நடந்து முடிந்தது. இப்போது மற்ற 20 தொகுதிகள் இல்லாவிட்டாலும் எதற்காக ஒரே ஒரு தொகுதியில்கூட தேர்தலை நடத்த ஆளும் தரப்பு விரும்பவில்லை?

    தலைமை செயலாளர்

    தலைமை செயலாளர்

    தேர்தல் அறிவிப்பு என்றாலே, தேர்தல் ஆணையம் தலைமை செயலாளரை கலந்தோசித்துதான் முடிவு எடுத்திருக்க முடியும். அப்படி என்றால், தலைமை செயலாளர் எதற்காக இடைத்தேர்தலை நடத்த அனுமதி தந்தார்? தலைமை செயலாளருக்கு கஜா புயல் நிவாரண பாக்கியோ, பாதிக்கப்பட்ட மக்களின் மன நிலையோ தெரியாதா என்றும் விளங்காமல் உள்ளது.

    கள நிலவரம்

    கள நிலவரம்

    ஒருவேளை தலைமை செயலாளருக்கே முழு விவரம் தெரியாவிட்டாலும், கண்டிப்பாக அவர் சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டருடன் ஆலோசித்தோ, தொகுதி கள நிலவரம் குறித்து விவாதித்தோதான் முடிவெடுத்திருப்பார், அப்படித்தான் முடிவும் எடுக்கப்பட வேண்டும்.

    இழுத்தடிப்பு

    இழுத்தடிப்பு

    ஆனால் திருவாரூர் விஷயத்தில் ஆளும் தரப்பு, தலைமை செயலாளர், மாவட்ட ஆட்சியர் போன்றோரின் நிலைப்பாடு என்னவென்றே தெரியவில்லை. ஜெயலலிதா இருந்தபோது முதல் ஆளாக வேட்பாளரை அறிவிக்கும்போது, இவ்வளவு நாள் வேட்பாளரை சொல்லாமல் அதிமுக இழுத்தடிப்பு செய்தது இதற்காகத்தானோ என்று எண்ண தோன்றுகிறது.

    விளங்கிவிட்டது

    விளங்கிவிட்டது

    அப்படியென்றால், தேர்தல் சர்க்கரை பொங்கல் என்பதும், எப்போது இடைத்தேர்தல் வந்தாலும் நாங்கள்தான் ஜெயிப்போம் என்று ஆளும் தரப்பு சொன்னதையும் எப்படி பார்ப்பது என்றும் தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக புரிகிறது.. முந்தாநாள் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் எதற்காக முதல்வரை சந்தித்துவிட்டு போனார் என்பதற்கு அர்த்தம் இன்று விடிகாலை அர்த்தம் விளங்கிவிட்டது.

    English summary
    Why did the TN government not provide relief assistance in Thiruvarur Constitution? Is the AIADMK not announcing the candidate for this?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X