சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வருமான வரி சோதனைக்கும் 18 எம்எல்ஏக்கள் தீர்ப்புக்கும் தொடர்பு இருக்குமோ?... பகீர் பின்னணி!

Google Oneindia Tamil News

Recommended Video

    வி.வி. மினரல்சுக்கு சொந்தமான இடங்களில் ஐடி சோதனை- வீடியோ

    சென்னை: 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகும் நிலையில் அதிமுகவிற்கு நெருக்கமான தொழிலதிபர் வைகுண்டராஜனுக்கு சொந்தமான 100 இடங்களில் வருமான வரி சோதனை நடப்பதற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    தமிழகத்தில் ஆளும் கட்சிக்கு ஒரு பிரச்னை என்றால் உதவி செய்வதில் முதல் இடத்தில் இருப்பவர்களில் முக்கியமானவர் வைகுண்ட ராஜன். ஆனால், அதிமுகவில் பிளவு ஏற்பட்ட பிறகு, வைகுண்ட ராஜனின் நிலைப்பாட்டில் பல மாற்றங்கள் இருந்தது. சில தருணங்களில் டிடிவி தினகரனுக்கு உதவி செய்தார், சில நேரங்களில் ஈ.பி.எஸ், ஓபிஎஸ் முகாமுக்கு உதவி செய்தார்.

    இதையும் தாண்டி திடீரென மத்தியில் ஆளும் பாஜகவுடன் நெருக்கம் காட்டினார். ஆனால் இப்போது அவருடைய வீடு அலுவலகங்களில் நடக்கும் வருமானவரித்துறைச் சோதனை பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

    தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு எதிரொலி.. அதிமுக எம்எல்ஏக்கள் சென்னை வர கட்சித் தலைமை உத்தரவு? தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு எதிரொலி.. அதிமுக எம்எல்ஏக்கள் சென்னை வர கட்சித் தலைமை உத்தரவு?

    எதற்காக திடீர் சோதனை?

    எதற்காக திடீர் சோதனை?

    18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்புக்கும், வைகுண்டராஜனுக்கு எதிரான வருமானவரித்துறை சோதனைக்கும் என்ன தொடர்பு எனக்கேட்டால் பல சுவாரஸ்யமான தகவல்கள் கூறப்படுகிறது. எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கவேண்டிய சூழல் ஏற்பட்டாலோ, அல்லது பெரியளவு பணம் தேவைப்பட்டாலோ இரு தரப்புக்கும் உதவி செய்யும் நிலையில் இருப்பவர் வைகுண்டராஜன். அவரின் கையைக் கட்டிப்போடும் முயற்சியாக வருமானவரித்துறை சோதனை இருக்கிறது என்கிறார்கள் மூத்த அரசியல்பார்வையாளர்கள்.

    ஓபிஎஸ்-டிடிவி சந்திப்புக்கு ஏற்பாடு செய்தவர்

    ஓபிஎஸ்-டிடிவி சந்திப்புக்கு ஏற்பாடு செய்தவர்

    டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் இடையே நிகழ்ந்த சந்திப்பை ஏற்பாடு செய்ததே வைகுண்டராஜன் என்று தகவல் கசிந்துள்ளது. தமிழக அரசியல் தளத்தில் எதுவும் நடக்கலாம் என்ற நிலையில் வைகுண்டராஜனுக்கு எதிரான வருமானவரித்துறை சோதனை முக்கிய கவனம் பெற்றுள்ளது.

    மத்திய அரசை எதிர்த்து பேசும் தம்பிதுரை

    மத்திய அரசை எதிர்த்து பேசும் தம்பிதுரை

    அதேபோல், ஆளும் அதிமுகவின் மக்களவை துணைத்தலைவர் தம்பிதுரையின் அண்மைக்கால ஊடகத்தினருக்கும் அளித்துள்ள பேட்டிகளில் மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்கள் தெறித்துவிழுவதையும் மறந்துவிட முடியாது. இதுவும் சோதனைக்கு காரணமாக இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

    தமிழக மக்கள் எதிர்பார்ப்பு

    தமிழக மக்கள் எதிர்பார்ப்பு

    அதிமுகவில் எதுவும் நிரந்தரம் இல்லை என்பதை ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகான விஷயங்கள் உணர்த்த வருகின்றன. எது எப்படியோ, தீர்ப்பும், தீர்ப்பிற்கு பிறகு நடக்கவுள்ள சம்பவங்களையும் காண தமிழகமே காத்திருக்கிறது.

    English summary
    Is any connection between V.V.minerals IT raid and 18 MLAs disqualification case judgement today?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X