• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

விழித்தெழுங்கள் தீபா.. திருவாரூர் களம் தயார்.. ஆர்.கே. நகரில் விட்டதை இங்காவது பிடியுங்கள்!!!

|
  திருவாரூர் இடைத்தேர்தலில் ஜெ.தீபா போட்டியிருவாரா?- வீடியோ

  சென்னை: திருவாரூர் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இரு நாட்கள் ஆகிறது. ஆனால் ஜெ தீபாவிடம் இருந்து பேச்சு மூச்சு ஒன்னையும் காணோமே!

  திருவாரூர் இடைத்தேர்தல் தேதி அறிவித்தாலும் அறிவித்தார்கள், நாடே அல்லோகலப்பட்டு கொண்டிருக்கிறது. தங்கள் இருப்பை காண்பிக்கும் தேர்தல் என்பதால் இதை எந்த அரசியல்வாதிகளும் விடுவதாக தெரியவில்லை.

  இன்று முதல் வேட்புமனு தாக்கல் செய்ய தொடங்கிவிட்டார்கள். அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் யாரை வேட்பாளராக அறிவிக்கலாம் என ஆலோசித்து வருகின்றனர். நாம் தமிழர் கட்சி கூட தன் பங்குக்கு வேட்பாளரை அறிவித்துவிட்டு விட்டது. மற்ற தொகுதிகளை காட்டிலும் திருவாரூர் தொகுதியில் வெற்றி பெற்றால் அதற்கு தனி மரியாதை, மவுசு உண்டு என்பதால் கட்சிகள் ஓடியாடி வேலை செய்கின்றனர்.

  திருவாரூர் இடைத்தேர்தல்... திமுகவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு திருவாரூர் இடைத்தேர்தல்... திமுகவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு

  வேட்புமனு தாக்கல்

  வேட்புமனு தாக்கல்

  ஆனால் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் பொதுச் செயலாளர் ஜெ தீபா இதுவரை பேச்சு மூச்சு இல்லாமல் இருப்பது ஏன் என தெரியவில்லை. ஆர் கே நகர் இடைத்தேர்தலின் போது ஜெ தீபா வேட்புமனு தாக்கல் செய்தார்.

  பிஸி

  பிஸி

  ஆனால் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கணவர் மாதவனுடனான பிரச்சினை, போயஸ் கார்டனில் தம்பி தீபக்குடன் பிரச்சினை, கணவருக்கும் -டிரைவர் ராஜாவுக்கும் இடையேயான மோதல் என பிஸியாக இருந்தார்.

  ஒய் சைலன்ட்

  ஒய் சைலன்ட்

  ஜெயலலிதாவின் நினைவு தினம் அன்று கணவர் மாதவனுடன் சமாதிக்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து அவரது கட்சி சார்பில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் நடத்தப்பட்டது. எப்போதாவது தலை காட்டும் தீபா தற்போது திருவாரூர் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டும் பேசாமல் இருப்பது ஏன் என தெரியவில்லை.

  இருப்பு

  இருப்பு

  ஆர் கே நகரில் விட்டதை இங்கு பிடிக்க வேண்டாமா என அவரது நிர்வாகிகள் அங்கலாய்த்து கொள்கின்றனர். ஜெயலலிதாவின் வாரிசு என்று தன்னை கூறிக் கொள்ளும் ஜெ தீபா இங்கு போட்டியிட்டு தனது இருப்பை காட்டிக் கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

  களத்தில் இருந்து எஸ்கேப்

  களத்தில் இருந்து எஸ்கேப்

  தேர்தலில் போட்டியிட்டு நோட்டாவைவிட அதிக ஓட்டுகளை பெறுவாரா. அப்படியென்றால் பாஜகவை விட அவர் அதிக வாக்குகள் பெற்றதாகவே கருதப்படுவார். இல்லாவிட்டால் எந்த கட்சிக்காவது ஆதரவு தெரிவிப்பாரா, இல்லை இந்த முறையும் வேட்புமனுவை தவறாகவே நிரப்பி களத்தில் இருந்து எஸ்கேப் ஆவாரா.

  பொறுத்திருந்துதான்

  பொறுத்திருந்துதான்

  ஜெ. தீபாவுக்கு இத்தனை ஆப்ஷன்கள் உள்ளன. இதில் ஏதேனும் ஒன்றை தீபா தேர்வு செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும். மேலும் கட்சியை மட்டும் விண்ணப்பப் படிவங்களுக்கு காசு வசூலித்தால் மட்டும் போதாது, கட்சி தொடங்கியதற்கான நோக்கத்தை நிறைவேற்றுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

   
   
   
  English summary
  Thiruvarur byelection date announces, but J.Deepa is silent over this.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X