சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என்னங்க இது? அமித் ஷா மகன்.. பொது இடத்தில் இப்படியா பண்ணுவது.. சிஎஸ்கே மேட்சில் ஷாக்கிங்

Google Oneindia Tamil News

சென்னை: நேற்று பெரிய களேபரத்திற்கு இடையில் சிஎஸ்கே குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் பைனலை வென்றது. இதே போட்டியில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவின் செயல் காரணமாக வேறு ஒரு களேபரமும் நடந்தது.

நேற்று சிஎஸ்கே - குஜராத் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக சென்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவரில் 214-4 ரன்கள் எடுத்தது. சும்மா தார் ரோடு மாதிரி பிளாட்டாக இருந்த பிட்சில் குஜராத் அணி எளிதாக 214 ரன்களை எடுத்தது.

Why Jay Shah reaction during the final over of CSK IPL 2023 match against GT creates controversy?

இதையடுத்து சிஎஸ்கே அணி களமிறங்க.. இருங்க பாஸ் தோனிக்கு இது கடைசி மேட்சா இருந்தாலும் இருக்கும் என்று கூறி.. மழையும் ஒருமுறை அவரை விசிட் அடித்துவிட்டு சென்றது. கடும் மழை காரணமாக இடையில் ஆட்டம் தடைபட்டது. அதன்பின் தண்ணீரை வெளியேற்ற முடியாமல் அதிகாரிகள் திணற ஈரமான மைதானம் காய்ந்த பின் ஆட்டம் 15 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

இதையடுத்து சிஎஸ்கே அணி 15 ஓவரில் 170 ரன்கள் எடுக்க வேண்டும் என்று ஆட்டம் மாற்றப்பட்டது. இதில் கடைசி இரண்டு பந்தில் 10 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இருந்தது. அப்போது ஒரு சிக்ஸ், பவுண்டரி அடித்து ஜடேஜா சிஎஸ்கே அணிக்கு வெற்றி தேடிக்கொடுத்தார்.

நேற்று பெரிய களேபரத்திற்கு இடையில் சிஎஸ்கே குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் பைனலை வென்றது. இதே போட்டியில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவின் செயல் காரணமாக வேறு ஒரு களேபரமும் நடந்தது.

Why Jay Shah reaction during the final over of CSK IPL 2023 match against GT creates controversy?

ஆட்டத்தின் போது பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா செய்த சைகை இணையத்தில் பேசுபொருள் ஆகியுள்ளது!
சி.எஸ்.கே. 4 பந்துகளில் 12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இருந்தபோது, இந்நிகழ்வு நடந்துள்ளது. அவர் கையை வைத்து அசிங்கமாக இங்கும் அங்கும் ஆட்டியது பெரிய அளவியல் சர்ச்சையானது.

நெட்டிசன்கள் பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். அமித் ஷா மகன் இப்படி செய்யலாமா.. அதுவும் பொது இடத்தில் இப்படி செய்யலாமா என்ன இது? என்றெல்லாம் கேட்டு கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இன்னும் சிலரோ.. உயரிய பதவியில் இருப்பவர்கள் பொது இடங்களில் நாகரீகமாக செயல்பட வேண்டும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

நேற்று இந்த சம்பவம் நடந்ததில் இருந்தே இணையத்தில் ஜெய் ஷாவின் அந்த வீடியோதான் வைரலாகி வருகிறது. ஜெய் ஷா நடந்து கொண்ட விதம் அருவருப்பை அளிப்பதாக இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

சிஎஸ்கே வெற்றி: குஜராத் அணிக்கு எதிராக நேற்று நடந்த ஐபிஎல் இறுதிப்போட்டியில் சிஎஸ்கே அணி அபாரமாக வென்று 2023 ஐபிஎல் சாம்பியன் ஆகி உள்ளது. 2023 ஐபிஎல் சீசன் திருவிழா போல நடந்து முடிந்துள்ளது. பல திருப்பங்களுடன், எதிர்பாராத வெற்றி தோல்விகளுடன் இந்த சீசன் நடந்து முடிந்துள்ளது. 2023 ஐபிஎல் சீசன் சாதாரண ஐபிஎல் என்பதை தாண்டி சிஎஸ்கே அணிக்கு மிகவும் ஸ்பெஷல் ஐபிஎல் என்றுதான் கூற வேண்டும்.

நேற்று சிஎஸ்கே டாஸ் வெல்ல குஜராத் முதலில் பேட்டிங் செய்தது. 39 பந்துகள் பிடித்த சாகா 54 ரன்கள் எடுத்தார். இன்னொரு பக்கம் கில் 20 பந்தில் 39 ரன்கள் எடுத்தார், ஆனால் அதிரடி குறையாமல் ஆடிய தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சன் 96 ரன்களை 47 பந்துகளில் எடுத்தார். 8 சிக்ஸ், 6 பவுண்டரி என்று சிஎஸ்கே அணியை இவர் புரட்டி எடுத்தார். சிஎஸ்கேவில் கான்வே 47, ரஹானே 27 எடுக்க கடைசியில் டேஜா - துபே இருவரின் ஆட்டமும் நேற்று சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. இருப்பினும், ஜடேஜா ( 6 பந்தில் 15 ) மற்றும் சிவம் துபே ( 21 பந்தில் 32* ) எடுத்தனர்.

இருவரின் ஆட்டம் சிஎஸ்கேவின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

பவர் பிளேவை பக்காவாக பயன்படுத்திய சென்னை.. ரஷித் கான் டார்கெட்.. சிஎஸ்கே வென்றது இப்படித்தான் பவர் பிளேவை பக்காவாக பயன்படுத்திய சென்னை.. ரஷித் கான் டார்கெட்.. சிஎஸ்கே வென்றது இப்படித்தான்

English summary
Why Jay Shah reaction during the final over of CSK IPL 2023 match against GT creates controversy?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X