• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

கவனிச்சீங்களா? ஓப்பனாக பெயர் வைத்த கமல்.. தோண்டி எடுத்த நெட்டிசன்ஸ்.. ஜெய் பீமால் சிக்கலில் கமலா?

Google Oneindia Tamil News

சென்னை: ஜெய் பீம் பட சர்ச்சை இன்னும் ஓயாத நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் குறித்து நெட்டிசன்கள் பலர் ட்வீட் செய்து வருகிறார்கள்.

நடிகர்கள் சூர்யா, லிஜோ மோல், மணிகண்டன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி அமேசானில் ஹிட் அடித்த படம் ஜெய் பீம். வெளியான முதல் நாளில் இருந்தே பாசிட்டிவ் ரிவ்யூக்களை பெற்று இந்த படம் சர்வதேச அளவில் வைரலாகி உள்ளது. ஐஎம்டிபி ரேட்டிங்கில் இப்போதும் கூட இந்த படம் முதல் இடத்தில்தான் தொடர்ந்து நீடித்து வருகிறது.

சென்னைவாசிகள் கவனத்திற்கு.. இன்னும் 3 நாட்களுக்கு கனமழை இருக்காம்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு! சென்னைவாசிகள் கவனத்திற்கு.. இன்னும் 3 நாட்களுக்கு கனமழை இருக்காம்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு!

த. செ ஞானவேல் இயக்கத்தில் ராஜ்கண்ணு என்பவரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டு இருக்கும் இந்த படம் வன்னியர் இன மக்களை புண்படுத்துவதாக சில விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

விமர்சனம்

விமர்சனம்

முக்கியமாக இந்த படத்தின் காட்சி ஒன்றில் வன்னியர்களின் குல சின்னமான அக்னி கலசம் பயன்படுத்தப்பட்டது. வில்லனாக வரும் போலீஸ் அதிகாரியின் வீட்டில் இருக்கும் காலண்டரில் இந்த அக்னி கலசம் பயன்படுத்தப்பட்டது சர்ச்சையானது. அதோடு வில்லனுக்கு உண்மையான பெயரான அந்தோணி சாமி என்று வைக்காமல் குருமூர்த்தி என்று வைத்ததையும் பாமகவினர், வன்னியர் சங்கங்கள் விமர்சனம் செய்தனர்.

அன்புமணி

அன்புமணி

பாமக அன்புமணி இந்த படத்தில் வரும் காட்சிகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். சூர்யாவிடம் தயாரிப்பாளர் என்ற வகையில் 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வன்னியர் சங்கம் வழக்கு தொடுத்தது. காடுவெட்டி குருவின் குடும்பத்தினர் குருவை அவமதித்துவிட்டதாக கூறி இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் இந்த படம் சர்ச்சை மேல் சர்ச்சைகளை சந்தித்து வருகிறது.

வைரல்

வைரல்

இந்த சர்ச்சைகளுக்கு நேற்று படத்தின் இயக்குனர் ஞானவேல் விளக்கம் அளித்தார். அதில், படம் நடக்கும் காலத்தை குறிப்பதற்காகவே அந்த காலண்டர் பயன்படுத்தப்பட்டது. இதனால் யாருடைய மனமாவது புண்பட்டு இருந்தால் அதற்கு வருத்தம் தெரிவிக்கிறோம் என்று குறிப்பிட்டு இருந்தார். அதோடு சூர்யாவை இதில் விமர்சிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் இயக்குனர் ஞானவேல் குறித்து இருந்தார்.

கமல்ஹாசன்

கமல்ஹாசன்

இந்த நிலையில்தான் ஜெய் பீம் பட சர்ச்சை இன்னும் ஓயாத நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் குறித்து நெட்டிசன்கள் பலர் ட்வீட் செய்து வருகிறார்கள். அவர் நடித்து ஹிட்டான அன்பே சிவம் படம் தற்போது நெட் பிளிக்சில் நேரம் பார்த்து வெளியாகி உள்ளது. இந்த படம் நெட் பிளிக்சில் வெளியாகி உள்ளதால் பலர் இதை ஆர்வமுடன் பார்க்க தொடங்கி உள்ளனர்.

காட்சிகள்

காட்சிகள்

இந்த படத்தில் வரும் காட்சிகளை மீண்டும் பார்க்கும் நெட்டிசன்கள் அதில் பல குறியீடுகளை கண்டுபிடித்து வெளியிட்டு வருகிறார்கள். அதில் ஒன்றுதான் வில்லனாக வரும் நாசரின் பெயர். படத்தின் வில்லன் சிவ பக்தனாக காட்டப்பட்டு இருப்பது ஏற்கனவே சர்ச்சையானது வேறு விஷயம். இதில் நாசரின் பெயர் குறிப்பிட்ட ஜாதி பெயரை குறிப்பிட்டு இருக்கும். அதுவும் வன்னியர் ஜாதி பிரிவை சேர்ந்த ஜாதிதான்.

சர்ச்சை

சர்ச்சை

இதுதான் சர்ச்சையாகி உள்ளது. ஜாதி பெயரை கமல் ஹாசன் இதில் ஓப்பனாக வைத்து இருக்கிறார். அதோடு படம் அப்போது தியேட்டரில் கூட வெளியானது. அப்போது இதை யாரும் பெரிதாக எதிர்க்கவில்லை. இந்த நிலையில்தான் இப்போது இதை பலரும் நோட் செய்து இணையத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.

விமர்சனம்

விமர்சனம்

ஜாதி பெயரை வெளிப்படையாக சொல்லி வில்லனை கொடூரமாக காட்டி இருப்பார் கமல்ஹாசன் என்று சிலர் விமர்சனம் வைத்து வருகிறார்கள். இன்னும் சிலரோ கமல் இதை எல்லாம் அப்போதே துணிச்சலாக செய்துவிட்டார். அதைத்தான் சூர்யாவும் செய்துள்ளார்.

  Jai Bhim Controversy! வருத்தம் தெரிவித்த Director Gnanavel | OneIndia Tamil
  எதிர்க்கவில்லை

  எதிர்க்கவில்லை

  படத்தை படமாக பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இன்னும் சிலர் சூர்யாவிடம் நஷ்ட ஈடு கேட்டது போல கமல்ஹாசனிடமும் 5 கோடி ரூபாய் கேட்க முடியுமா என்று கேள்வி எழுப்பி உள்ளனர். நேரம் பார்த்து இந்த படம் நெட் பிளிக்சில் வெளியானதால் பலர் அதை பற்றி ட்வீட் செய்து வருகிறார்கள்.

  English summary
  Why Kamal Haasan's Anbe Sivam OTT release is going viral amid Jai Bhim controversy in social media?
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X