• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

ஓஹோ இதுதான் காரணமா.. சீமானுக்கும், தினகரனுக்கும் "யெஸ்".. கமலுக்கு மட்டும் "நோ".. விஸ்வரூபம் வருமோ?

|

சென்னை: டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம், சீமானுக்கும் அதே சின்னம், ஆனால் கமலுக்கு ஏன் டார்ச் லைட் சின்னம் வழங்கப்படவில்லை என்ற கேள்வி தமிழக அரசியலில் முன்வைக்கப்பட்டு வருகிறது.

  அ.ம.மு.கவுக்கு குக்கர்.. நா.த.கவுக்கு கரும்பு விவசாயி.. ம.நீ.ம டார்ச் லைட்… ஆனா காண்டான கமல்..!

  நேற்று முன்தினம், நாம் தமிழர் கட்சி, அமமுக., போன்ற கட்சிகளுக்கு கடந்த தேர்தலைப்போல, இம்முறையும் விவசாயி சின்னம், பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கிடப்பட்டுள்ளன... ஆனால் கமலின் மக்கள் நீதி மையம் கட்சிக்கு மட்டும் "டார்ச் லைட்" சின்னத்தை வழங்க மறுத்துள்ளது.

  அதிலும் புதுச்சேரியில் மட்டும் டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கிய தேர்தல் ஆணையம், தமிழகத்தில் அக்கட்சிக்கு மறுத்துள்ளது. இதுதான் தற்போது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.. இது சம்பந்தமாக கமலும், "சாதாரண ரூபத்தை விஸ்வரூபம் எடுக்க வைக்கிறார்கள்" என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார். தேர்தல் ஆணையத்தை யாரும் கேள்வி கேட்க முடியாது என்றாலும், இதற்கு என்ன காரணம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

  மீண்டும் வந்தாச்சு குக்கர்.. செம திருப்பங்கள்.. இனி பொங்கல்தான்.. டிடிவி தினகரன் செம

   சர்ச்சைகள்

  சர்ச்சைகள்

  இது சம்பந்தமான சோஷியல் மீடியாவில் பலவித கருத்துக்கள் யூகங்களாக வந்து கொண்டிருக்கின்றன.. கமல் கடந்த காலங்களில் பாஜகவை அதிக அளவு பகைத்து கொண்டார் என்பதாலேயே சின்னம் மறுக்கப்பட்டுள்ளதா? அப்படியானால் கட்சியை துவங்காத ரஜினிக்கு மட்டும் ஏன் இப்போதே ஆட்டோ சின்னம் தர வேண்டும்? என்று கேட்கின்றனர்.

   பாஜக

  பாஜக

  சீமானுக்கு விவசாயி சின்னம், தினகரனுக்கும் அதே குக்கர் சின்னம் தந்துவிட்டு, கமலுக்கு மட்டும் சின்னம் வழங்க மறுப்பது பாரபட்சம் என்றும் கூறுகிறார்கள். அதுமட்டுமல்ல, சென்ற முறை கமல் அதிக அளவு வாக்கு சதவீதத்தை பெற்றது சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில்தான்.. இதில், பெருமளவு பாஜகவுக்கு சேர வேண்டிய வாக்குகள்தான் கமலுக்கு சென்றுள்ளதாக தெரிகிறது.. இந்த முறையும் அப்படி எதுவும் நடந்துவிடக்கூடாதே என்ற ரீதியில் இப்படி சின்னம் விஷயத்தில் ஏதாவது நடந்திருக்கலாம் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

   டிடிவி தினகரன்

  டிடிவி தினகரன்

  இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது.. கடந்த முறை டிடிவி தினகரன், அதிமுகவுக்கே டஃப் தருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஓரளவு வெற்றியை மட்டுமே பெற முடிந்தது.. அதே சமயம், அதிமுகவின் வாக்குகளையும் கணிசமாக அவர் பிரித்தார்.. அப்படி அதிமுக வாக்குகளையே பிரிப்பார் என்றால், இந்த முறை எப்படியும் திமுகவுக்கு செல்லும் அதிமுக எதிர்ப்பு, பாஜக எதிர்ப்பு வாக்குகளை வலுவாகவே பிரிப்பார் என்று பாஜக கணக்கு போடுவதாகவும், அதனாலேயே அவர் கேட்ட சின்னத்தை ஒதுக்கியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

  கமல்

  கமல்

  ஆனால், இன்னொரு தரப்பினர் இதை மறுக்கிறது.. உண்மையிலேயே கமலைவிட, பாஜகவை அதிகம் விமர்சித்ததும், விமர்சித்து வருவதும் சீமான்தான்.. ஒருவேளை காழ்ப்புணர்ச்சி இருந்தால், சீமானுக்கு ஏன் அதே சின்னத்தை தர வேண்டும்.. எனவே, இந்த சின்னம் ஒதுக்கீடு எல்லாம் யதேச்சையாக நடந்த ஒன்றுதான், திட்டமிட்ட செய்வது கிடையாது என்று கூறப்படுகிறது.

   நிலைப்பாடு

  நிலைப்பாடு

  எனினும், கமல் ஒருவேளை ரஜினியுடன் கூட்டணி சேர்ந்தால், அப்போதைய நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது... மற்றொரு பக்கம், சின்னம் எல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை, வேட்பாளர்தான் முக்கியம்.. கொள்கையும், உறுதிப்பிடிப்பும் மக்களை ஈர்த்துவிட்டால் புது சின்னம் தந்தாலும் ஒருபிரச்சனையும் இல்லை என்கின்றனர் இன்னொரு தரப்பினர்... இப்படி பலபல வியூகங்களை நாள்தோறும் கிளப்பி வருகிறது கமலின் "டார்ச் லைட்"!

   
   
   
  English summary
  Why Kamalhasans Torch Light Symbol has been denied
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X