• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

வெளியேறிய கமீலா.. "மய்யத்தில்" வீசிய புயலுக்கு.. இதுதான் காரணமா.. அப்ப சரத்குமார்..?

|

சென்னை: மநீய்யத்தின் கமீலா நாசர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.. தனிப்பட்ட காரணங்களுக்காக விலகல் என்று கூறினாலும், இதன் பின்னணி காரணம் வேறு ஏதாவது இருக்குமோ என்ற சந்தேகமும், அதையொட்டிய யூகமும் வலம் வர ஆரம்பித்துள்ளன.

  சென்னை: கமீலா நாசருக்கு கமல் ‘கல்தா’…. மக்கள் நீதி மையத்தில் இருந்து விடுவிப்பு!

  கமலை பொறுத்தவரை, வித்தியாசமான வேட்பாளர்களைதான் ஒவ்வொரு முறையும் நிறுத்துவார்.. அவர்களில் பெரும்பாலானோர் படித்தவர்கள்.. அறிவுஜீவிகள்.. நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள்.. அப்படித்தான் 2 முறை தேர்தலை சந்தித்து முடித்துள்ளார்.

  அந்த வகையில்தான் கமீலாகவுக்கு சென்ற முறை வாய்ப்பு தரப்பட்டது.. இதற்கு மிக முக்கிய காரணம் நாசர் ஆவார்.. நாசருடன் கமலுக்கு உள்ள நட்பினை தமிழகம் நன்கறியும்.. இருவருமே மெத்த படித்தவர்கள்.. இருவருமே அறிவாளிகள்.. இருவருமே ரசனை மிகுந்தவர்கள்.. இருவருமே இலக்கிய ரீதியாகவும் ஆழமாக இறங்கி விமர்சனங்களை பரிமாறி கொள்பவர்கள்.

  ஒரே நாளில் பரபரப்பு.. ஒருத்தர் மாஸ்க்.. இன்னொருத்தர் சைக்கிள்.. ரஜினி, கமலை ஓரங்கட்டிய.. ஒரே நாளில் பரபரப்பு.. ஒருத்தர் மாஸ்க்.. இன்னொருத்தர் சைக்கிள்.. ரஜினி, கமலை ஓரங்கட்டிய..

   3வது இடம்

  3வது இடம்

  மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட சீட் தரப்பட்டது.. மக்களுடன் நேரடியான அறிமுகம் கமீலாவுக்கு இல்லை என்றாலும், நாசரின் மனைவி என்ற ரீதியில்தான் நெருங்கினார்.. ஓட்டும் கேட்டார்.. இறுதியில் 92 ஆயிரத்து 249 வாக்குகள் பெற்றார்.. அதாவது 3வது இடத்துக்கு இந்த தொகுதியில் முன்னேறியிருந்தார்.. இது மய்யத்துக்கு ஒரு பிரதான கவுரவமான ஓட்டு வங்கியை, அந்தஸ்தை பெற்று தரவும் செய்தது.

   என்ன காரணம்?

  என்ன காரணம்?

  இந்த அளவுக்கு கட்சியில் பிரதான ஸ்தானத்தில் இருந்த கமீலா இன்று திடீரென கட்சியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.. அதுவும் தேர்தல் ரிசல்ட் வர உள்ள நிலையில், மய்யத்தில் இதற்கான பூகம்பம் இன்று வெடித்துள்ளது.. கமீலா விலகல் பின்னணியில் இரண்டுவிதமான காரணங்கள் சொல்லப்படுகின்றன.

   விருப்ப மனு

  விருப்ப மனு

  முதல் காரணம், நடந்து முடிந்த தேர்தலில், விருகம்பாக்கம், மதுரவாயில் தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனுவினை கமீலா தாக்கல் செய்திருந்தார்.. ஆனாலும் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.. இதனாலேயே விரக்தியடைந்த கமீலா, கடந்த வாரமே தன்னுடைய ராஜினாமா லெட்டரை கட்சிக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.

   கூட்டணி

  கூட்டணி

  இரண்டாவது காரணம், 2015-ல் நடந்த நடிகர் சங்க தேர்தலும், சரத்குமாரை கூட்டணியில் சேர்த்ததும்தான் என்கிறார்கள்.. என்கிறார்கள்.. அன்று, சங்கத்தின் தலைவர் ராதாராவி, பொது செயலாளர் சரத்குமாரை எதிர்த்துதான் நாசர் - விஷால் அணியினர் போட்டியிட்டனர்.. அப்போதைய பிரச்சாரத்தில் நாசரை, ராதிகாவும், சரத்குமாரும் மிக கடுமையாக விமர்சித்தனராம்.. இது நடிகர் சங்க மோதலையும் தாண்டி தயாரிப்பாளர்கள் சங்கத்திலும் எதிரொலித்து வெடித்தது.. அப்போதிருந்தே இது புகைந்தும் வந்துள்ளது.

  சரத்குமார்

  சரத்குமார்


  இந்த சமயத்தில்தான் கமல், சரத்குமாரை கூட்டணியில் திடுதிப்பென்று இணைத்து சீட் தந்துவிடவும், இது கமீலாவுக்கு அதிர்ச்சி கலந்த அதிருப்தியை தந்ததாக சொல்கிறார்கள்.. சினிமா வேறு, அரசியல் வேறு, எதையும் முடிச்சு போட்டு பார்க்ககூடாது என்று கமல் பலமுறை இதுகுறித்து சொல்லியும், கமீலா தரப்பு சமாதானம் அடையாமல், இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் கசிந்து வருகின்றன.

  கமீலா

  கமீலா

  இதற்கு நடுவில், உண்மையிலேயே எதற்காக விலகல் என்று தெரியவில்லை.. அதேசமயம், கமீலாவே இதற்கான தனிப்பட்ட காரணத்தை தெரிவித்துள்ளார்.. தன்னுடைய மகனை கவனித்துகொள்ள வேண்டிய சூழலில் இருப்பதால், குடும்பம், அரசியல் என இரண்டையும் ஒரே நேரத்தில் கவனிக்க முடியாத நிலைமை காரணமாகவே ராஜினாமா செய்ததாக காரணம் சொல்லப்படுகிறது. சொந்த விருப்பத்தின் பேரில் கட்சி தலைமையின் அனுமதியுடன் தான் பதவியை ராஜினாமா செய்ததாகவும், தேர்தல் பிரச்சனை காரணம் இல்லை என்றும் கமீலா தெளிவுபடுத்தியும் வருகிறார்...!

  English summary
  Why Kameela Nassar fired from Kamalahasans MNM party
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X