• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

அந்த அவலம் மீண்டும் நடக்க கூடாது.. சிக்கலில் கோலி.. உடனே சுதாரிக்க வேண்டும்.. ரூத்துராஜுக்கு லக்?

Google Oneindia Tamil News

சென்னை: உலகக் கோப்பை 50 ஓவர் தொடரில் கடந்த முறை இந்திய அணிக்கு நேர்ந்த அதே கொடுமை மீண்டும் உலகக் கோப்பை டி 20 தொடரில் நேர்ந்துவிடுமோ என்ற அச்சம் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இடையே எழுந்துள்ளது. பல வருடமாக இந்திய அணியில் சரி செய்யப்படாமல் இருக்கும் ஒரு பிரச்சனை மீண்டும் இந்த முறை இந்திய அணிக்கு எதிராக திரும்பும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியில் மிடில் ஆர்டர் ஜாம்பவான்களாக பார்க்கப்பட்ட யுவராஜ், தோனி போன்றவர்களின் ஓய்விற்கு பின் மொத்தமாக இந்திய அணி மிடில் ஆர்டர் பலம் இழந்தது. முக்கியமாக யுவராஜ் சிங் இடத்தை நிரப்ப முடியாமல் இந்திய அணி பல வருடமாக திணறி வருகிறது. மிடில் ஆர்டரில் 4 அல்லது 5வது இடத்தில் ஆடுவதற்கு இன்னும் சரியான வீரர் கிடைக்கவில்லை.

புள்ளிங்கோ ஹேர்ஸ்டைல், காதில் தோடு.. இனி இந்த ரவுடி கெட்டப் கூடாது.. திண்டுக்கல் போலீஸ் அதிரடி! புள்ளிங்கோ ஹேர்ஸ்டைல், காதில் தோடு.. இனி இந்த ரவுடி கெட்டப் கூடாது.. திண்டுக்கல் போலீஸ் அதிரடி!

கடந்த உலகக் கோப்பை 50 ஓவர் தொடரில் இந்தியா தோல்வி அடைய மிடில் ஆர்டர்தான் காரணமாக அமைந்தது. இந்த மிடில் ஆர்டரில் விஜய் சங்கர், தினேஷ் கார்த்திக், கேதார் ஜாதவ், மணீஷ் பாண்டே என்று பலரை இந்திய அணி சோதனை செய்து பார்த்துவிட்டது. ஆனாலும் யாரும் பெரிதாக மிடில் ஆர்டரில் ஆடவில்லை.

மிடில் ஆர்டர்

மிடில் ஆர்டர்

இதுவே இந்திய அணி அந்த தொடரில் தோல்வி அடைய முக்கிய காரணமாக இருந்தது. இந்த டி 20 தொடரில் அதே மிடில் ஆர்டர் பிரச்சனை தொடருமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. தோனி விட்டு சென்ற இடத்தை இந்த முறை பண்ட் பிடித்துவிட்டார். 5வது பேட்ஸ்மேனாக பண்ட் களமிறங்குவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து தொடரில் இருந்த பார்மை ஐபிஎல்லிலும் பண்ட் தொடர்ந்து வருகிறார். இதனால் அவரின் இடம் பெரிய சிக்கலில் இல்லை.

யார் இறங்குவார்

யார் இறங்குவார்

எப்படியும் ஓப்பனிங் ராகுல், ரோஹித்தான் ஆடுவார்கள். ஒன் டவுன் கோலி ஆடுவார். 6வது இடத்தில் ஜடேஜா அதன்பின் ஒரு பவுலிங் ஆல் ரவுண்டர் ஆடுவது உறுதி. இதில் நான்காவது இடம்தான் சிக்கலாக உள்ளது. ஏனென்றால் நான்காது இடத்திற்கு என்று உறுதியாக நம்பப்பட்டவர் சூர்யா குமார் யாதவ். இவர் இல்லை என்றால் இஷான் கிஷான். இந்திய அணி பல வருட தேடலுக்கு பின் இவர்கள் இருவரையும் கண்டுபிடித்து தேர்வு செய்தது. மும்பை அணியில் கடந்த 3 சீசன்களாக சிறப்பாக ஆடியதால் இந்திய அணிக்குள் இவர்கள் வந்துள்ளனர்.

ஏன் இப்படி?

ஏன் இப்படி?

ஆனால் இந்திய அணிக்கு வந்த பின், இப்போது ஐபிஎல்லில் இவர்கள் இருவருமே சொதப்பி வருகிறார்கள். அதாவது இந்திய அணிக்கு தேர்வாக வேண்டும் என்பதற்காக துடிப்பாக விளையாடிய இருவரும் தற்போது ஐபிஎல்லில் சொதப்பி வருகிறார்கள். சூர்யா குமார் யாதவ், கிஷான் இருவரிடமும் அந்த பழைய வேகம் இல்லை. அந்த பழைய ஃபயர் இல்லை என்றுதான் கூற வேண்டும்.இதுவே இப்போது இந்திய அணிக்கு சிக்கலாக முடிந்துள்ளது. 50 ஓவர் உலகக் கோப்பையில் மிடில் ஆர்டர் சொதப்பியது போல சூர்யா குமார் யாதவ் போன்றவர்களை மட்டும் நம்பி இந்திய அணி இறங்க கூடாது.

கோலிக்கு சிக்கல்

கோலிக்கு சிக்கல்

அதேபோல் கோலிக்கு டி 20 கேப்டனாக இது கடைசி தொடர் என்பதால் அவருக்கும் இது சிக்கலை ஏற்படுத்தும். இதனால் இப்போது ஷ்ரேயஸ் ஐயர் போன்ற மாற்று வீரர்களை ஸ்டான்ட் பை வீரர்களாக கோலி அறிவிக்க வேண்டும். முக்கியமாக ஓப்பனிங் வீரர் ராகுலை மிடில் ஆர்டரில் இறக்கி சோதனை செய்து பார்க்கலாம். அவர் அனைத்து இடங்களிலும் ஆட கூடியவர். ஓப்பனிங்கில் ரூத்துராஜ் போன்றவர்களை களமிறக்கலாம். இந்த தொடர் அமீரகத்தில் நடக்கிறது. அமீரகத்தில் மிக சிறந்த ஓப்பனிங் வீரர் என்றால் அது ரூத்துராஜ்தான். அவரை அணியில் ஸ்டான்ட் பை வீரராக அறிவிக்கலாம்.

  Chahals Send-off to Ishan Kishan in MI vs RCB Match | IPL 2021 | OneIndia Tamil
  மாற்றம் இருக்கும்

  மாற்றம் இருக்கும்

  அதேபோல் புவனேஷ்வர் குமார் சரியான பார்மில் இல்லாததால் ஹர்ஷல் பட்டேல், அர்ஷ்தீப் சிங் போன்றவர்களையும் மாற்று ஸ்டான்ட் பை வீரர்களாக அழைக்கலாம். முன்பு 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் பண்டை தேர்வு செய்யாமல் சென்றுவிட்டு, கடைசி கட்டத்தில் அவசர அவசரமாக அவருக்கு அழைப்பு சென்றது. அதுபோல் இப்போது செய்ய முடியாது. ஏனென்றால் இது கொரோனா காலம். உடனே ஒரு மாற்று வீரர் வெளியில் இருந்து அணியில் இணைக்க முடியாது.

  பிசிசிஐ

  பிசிசிஐ

  இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின்படி பிசிசிஐ அணியில் சில மாற்றங்களை செய்ய இருப்பதாகவே கூறப்படுகிறது. சில முக்கியமான வீரர்களுக்கு மாற்று வீரர்கள் அறிவிக்கப்படலாம் என்றே கூறப்படுகிறது. முக்கியமாக ஹர்திக் பாண்டியா போன்ற ஆல் ரவுண்ட் செய்யாத ஆல் ரவுண்டர்களுக்கு பதிலாக சில ஸ்டான்ட் பை வீரர்கள் களமிறக்கப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

  English summary
  Why Skipper Kohli should look for some alternative options for India middle-order in the T20 world cup team?
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X