சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2000 வருட பந்தம்.. தமிழர் பெருமை.. சீன அதிபர் வருகைக்கு மகாபலிபுரத்தை தேர்வு செய்தது ஏன்?

சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் மோடியுடன் ஆலோசனை செய்யும் கூட்டம் ஏன் மகாபலிபுரத்தில் நடக்க உள்ளது என்ற உண்மை வெளியாகி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Watch Video : PM Modi will meet china General Secretary Xi Jinping in Tamilnadu

    சென்னை: சீன அதிபர் ஜி ஜின்பிங் பிரதமர் மோடியுடன் ஆலோசனை செய்யும் கூட்டம் ஏன் மகாபலிபுரத்தில் நடக்க உள்ளது என்ற உண்மை வெளியாகி உள்ளது. சீனாவிற்கும் மகாபலிபுரத்திற்கும் இடையில் இருக்கும் வரலாற்று பந்தம்தான் இதற்கு காரணம் என்கிறார்கள்.

    பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் வரும் 11ம் தேதி தமிழகம் வருகிறார். அவர் பிரதமர் மோடியை காஞ்சிபுரத்தில் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

    மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் இந்த ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது. 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை இந்த ஆலோசனை நடக்க உள்ளது.

    சிரியாவில் இருந்து ராணுவம் வாபஸ்.. டிரம்ப் அதிர்ச்சி முடிவு.. மீண்டும் உயரப்போகும் ஐஎஸ் கொடி!சிரியாவில் இருந்து ராணுவம் வாபஸ்.. டிரம்ப் அதிர்ச்சி முடிவு.. மீண்டும் உயரப்போகும் ஐஎஸ் கொடி!

    என்ன காரணம்

    என்ன காரணம்

    இந்த நிலையில் மகாபலிபுரத்தை இந்த சந்திப்பிற்கு தேர்வு செய்ததற்கு நிறைய காரணம் இருக்கிறது. இந்தியாவின் பிற பகுதியில் திபெத்தியர்கள் அதிகம் இருக்கிறார்கள். தென்னிந்தியாவில் திபெத்தியர்கள் குறைவு. இதனால் சீன அதிபர் ஜி ஜின்பிங் வரும் போது போராட்டங்கள் குறைவாக நடக்கும். பிரச்சனைகள் இருக்காது.

    எப்படி இருக்கிறது

    எப்படி இருக்கிறது

    அதேபோல் பாதுகாப்பு ரீதியாகவும் சென்னையை பரிந்துரை செய்துள்ளது மத்திய அரசு. தென்னிந்தியாவில் அதிக பாதுகாப்பான சூழ்நிலை நிலவுகிறது. சீன அதிபர் போன்று உலகின் சக்தி வாய்ந்த நபர் வரும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதனால் சென்னைதான் சரியாக இருக்கும் என்று முடிவு செய்துள்ளனர்.

    சீனா எப்படி

    சீனா எப்படி

    இதெல்லாம் போக மகாபலிபுரத்திற்கும் சீனாவிற்கும் வரலாற்று ரீதியாக நிறைய தொடர்பு உள்ளது. சீன துறவி யுவாங் சுவாங் இங்கு வந்திருக்கிறார். சீன துறவிகள் பலர் மகாபலிபுரத்திற்கு வந்து தியானம் செய்துள்ளனர். இதற்கான வரலாற்று ஆவணங்கள் உள்ளது.

    2000 வருடம்

    2000 வருடம்

    அதேபோல் மகாபலிபுரத்தில் இருந்துதான் சீனாவிற்கு 2000 வருடங்கள் முன் கடல் போக்குவரத்து இருந்துள்ளது. மகாபலிபுரம் துறைமுகம்தான் சீனாவுடன் வர்த்தக ரீதியாக தொடர்பில் இருந்துள்ளது. இரண்டு பகுதிகளும் வரலாற்று ரீதியாக, பொருளாதார ரீதியாக நிறைய பந்தங்களை கொண்டுள்ளது. இங்கு ஆலோசனை செய்தால் இந்தியா - சீனா உறவு இன்னும் நெருக்கம் அடையும் என்று கூறுகிறார்கள்.

    அதிபர்

    அதிபர்

    மேலும் சீன அதிபர் தமிழகம் வந்தால், தமிழர்கள் பெருமை அடைவார்கள். அதை தேர்தல் ரீதியாக பயன்படுத்த முடியும் என்று பாஜக நினைப்பதாகவும் கூறுகிறார்கள். ஆகவே இங்கு கூட்டம் நடத்துவதே சரியாக இருக்கும் என்றும் மத்திய அரசு முடிவு செய்து உள்ளது என்கிறார்கள்.

    English summary
    Why Mahabalipuram was chosen for Modi- Xi-Jin Ping meet? - The historical connection.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X