சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஓஹோ.. தனிச்சின்னத்தில் மதிமுக போட்டியிட விரும்ப இதுதான் காரணமா.. வைகோ செம டிரிக்!

தனிச்சின்னத்தில் போட்டி என்று வைகோ உறுதிபட தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: தனிச்சின்னத்தில்தான் மதிமுக போட்டியிடும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அதிரடியாக அறிவித்துள்ளது திமுக கூட்டணியை அதிர வைத்துள்ளது. இதை திமுக எதிர்பார்க்கவில்லை. ஆனால் வைகோவின் கணக்கே வேறாக உள்ளது.

தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், திமுக, அதிமுக போன்ற திராவிட கட்சிகள் அதற்கான வேலைகளில் இறங்கி வருகின்றனர்.. ஒரு பக்கம் கூட்டணி, மறுபக்கம் சீட் விவகாரம், இவைகளுக்கு நடுவில் கட்சியை பலப்படுத்துவது, அதிருப்திகளை களைவது போன்ற பணிகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிமுக எப்படி கூட்டணி பற்றி வாய் திறக்கவில்லையோ, அதுபோலவேதான் திமுகவும் கமுக்கமாக இருந்து வருகிறது.. அந்த வகையில் கூட்டணியில் தற்போது உள்ள கட்சிகள் கூட்டணியில் இருக்கிறோமோ, இல்லையா என்று கூட தெரியாமல் ஏகத்துக்கும் குழம்பி போய் உள்ளனர்.

மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடாது.. தனிச்சின்னத்தில்தான்.. வைகோ திட்டவட்டம்மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடாது.. தனிச்சின்னத்தில்தான்.. வைகோ திட்டவட்டம்

சிக்கல்

சிக்கல்

அதேசமயம், இந்த முறையாவது தங்களுக்கு தவையான சீட்களை பெற்று விடுவது என்றும் உறுதியாக உள்ளன. இதில், சிக்கலே விசிக, மதிகவுக்கும்தான் அதிகமாக உள்ளது.. காரணம், இந்த கட்சி வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.

 உதயசூரியன்

உதயசூரியன்

இந்நிலையில், கடந்த எம்பி தேர்தலைபோலவே, மதிமுக இந்த முறையும் சட்டசபை தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியானது... இதைதான் இன்று அதிரடியாக மறுத்திருக்கிறார் வைகோ.. செய்தியாளர்களிடம் பேசும்போது, "அதிமுக ஆட்சியை வீழ்த்தி, திமுக தலைமையில் ஆட்சி அமைய மதிமுக திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது... திமுக கூட்டணி வெற்றி பெறுவதுடன் திமுக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். வரப்போகிற தேர்தல் அதிமுகவுக்கு மரண அடியாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

வைகோவின் இந்த பேட்டி திமுகவை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளதாக தெரிகிறது.. காரணம், வரும் தேர்தலில் கூட்டணியே வேண்டாம் என்று, தனித்து நிற்கலாம் என்று திமுகவுக்கு அக்கட்சியின் அட்வைசர்கள் சொல்லி வந்ததாக ஒரு தகவல் கசிந்தது.. அதனால் தனித்து போட்டி அல்லது ஒன்றிரண்டு கூட்டணிகளுக்கு ஒதுக்கிவிட்டு, பெரும்பாலான இடங்களில் திமுகவே நின்று களம் காணுவது என்ற முடிவில் உள்ளதாகவே கூறப்படுகிறது.

 யோசனை

யோசனை

அது மட்டுமல்ல, வரும் தேர்தலில் 4 சட்டமன்ற தொகுதிகளை மட்டுமே மதிமுகவுக்கு தரலாம் என்ற யோசனையில் திமுக உள்ளதாக தெரிகிறது.. இது தெரிந்து தான், தனிச்சின்னம் என்பதை வைகோ அறிவித்திருப்பதாகவும் யூகமாகவும் கருத்துக்கள் வெளியாகி வருகின்றன.

மறுப்பு

மறுப்பு

ஏற்கனவே ஈரோட்டில் கணேசமூர்த்தி திமுகவின் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.. எம்பி தேர்தலுக்கு பிறகும் வைகோவின் செயல்பாடுகள் குறைந்து காணப்பட்டன.. மேலும், ஒரு சீட், 2 சீட்டுக்காக தனித்தன்மையை இழந்துவிடக்கூடாது என்ற கட்சி தொண்டர்களின் ஆதங்கமும் அவ்வப்போது எழுந்து வருகிறது.

பரபரப்பு

பரபரப்பு

இதையெல்லாம் மனதில் வைத்துதான் வைகோ தனிச்சின்னம் என்று சொல்லியிருக்கலாம், அல்லது கூடுதல் சீட் கேட்பதற்காக வழக்கமாக அரசியல் கட்சிகள் மேற்கொள்ளும் யுக்தியாகவும் இது இருக்கலாம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். இப்போது திமுக தரப்புதான் அதிர்ந்து போய் காணப்படுகிறதாம்.. ஏற்கனவே கூட்டணியில் உள்ள விசிக தனிச்சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்த நிலையில், இப்போது மதிமுகவும் அதே முடிவை தெரிவித்துள்ளது அரசியல் தரப்பில் பெரும் பரபரப்பை கிளப்பி வருகிறது.

English summary
Why MDMK wants to contest in its own symbol
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X