சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இருந்த இடத்திலிருந்து ஒரே ஜம்ப்.. திமுகவை விட்டு என்ஆர்டி அதிமுகவுக்கு தாவியது ஏன்

Google Oneindia Tamil News

சென்னை: திமுக கூட்டணியில் இருந்து வந்த பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என். ஆர். தனபாலன் தடாலடியாக அதிமுகவுக்குத் தாவி விட்டார். இதற்கான காரணம் தற்போது தெரிய வந்துள்ளது.

திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் திடீர் திருப்பமாக அதிமுக கூட்டணிக்கு தாவியுள்ளார்.

why nrd switched over to admk

வடசென்னை பகுதியில் நாடார் சமுதாய வாக்குகளை கணிசமாக வைத்திருப்பவர் தனபாலன். அவர் அதிமுக முகாமுக்கு சென்றதற்கான காரணம் குறித்து விசாரித்தபோது சுவாரஸ்யமான தகவல் கிடைத்தது.

இதுகுறித்து அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகையில், 'அண்ணன் கடந்த சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் நின்று சொற்ப வாக்குகளில் வெற்றிவேலிடம் தோல்வியை தழுவினார். அதற்கு பின்னரும் எவ்வளவோ இக்கட்டான நேரத்திலும் கூட திமுக அணியில் தான் இருந்து வந்தார்'.

இப்ப பிரிஞ்சு பாஜகவை அடிப்போம்.. பிறகு சேர்ந்து ஆட்சியைப் பிடிப்போம்.. காங். செம பிளான்! இப்ப பிரிஞ்சு பாஜகவை அடிப்போம்.. பிறகு சேர்ந்து ஆட்சியைப் பிடிப்போம்.. காங். செம பிளான்!

இந்நிலையில், இடைத்தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட அண்ணன் என்.ஆர்.டி. போட்டியிட ஆர்வம் காட்டி அதற்கான பணிகளில் ஈடுபட்டு வந்தார். ஆனால் திமுக தரப்போ முகத்தில் அடித்தது போல் பெரம்பூரில் போட்டியிட நோ சொல்லியதால் அதிமுக கூட்டணிக்கு சென்றுள்ளார் என்.ஆர்.டி. என்றனர்.

சரி அதிமுக சார்பில் பெரம்பூரில் போட்டியிட என்.ஆர்.தனபாலனுக்கு சீட் கிடைக்குமா? கொடுப்பார்களா? எனக் கேள்வி எழுப்பியதற்கு, பொறுத்திருந்து பாருங்கள் என புன்னகையோடு பேச்சை முடித்தார் பெருந்தலைவர் மக்கள் கட்சி முக்கிய நிர்வாகி ஒருவர்.

என்னவோ போங்க சாமி.. கொள்கையாவது கோட்பாடாவது!

English summary
NRD has switched his side to ADMK from DMK
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X