• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"என்னங்க இது?.. அவங்களை காணோமே".. இபிஎஸ் நடத்திய மீட்டிங்கில்.. செம கடுகடுப்பு.. சீக்கிரமே டிவிஸ்ட்?

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக அலுவலகத்தில் இன்று எடப்பாடி பழனிசாமி நடத்திய மீட்டிங் ஏன், திடீரென குறைந்த நிர்வாகிகளுடன் இந்த மீட்டிங் நடத்தப்பட்டது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது.

அதிமுக கட்சிக்குள் நிலவும் கோஷ்டி மோதல் தற்போது பெரிதாக தொடங்கி உள்ளது. தேர்தல் தோல்விக்கு பின் கட்சி நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் எல்லோரும் ஒவ்வொரு பக்கம் பிரிந்து சென்று உள்ளனர். கட்சிக்குள் நடக்கும் தொடர் மாற்றங்கள் எல்லாம் இந்த மோதலை பெரிதாக்கிக் கொண்டே செல்கிறது.

அதிலும் அதிமுகவில் இத்தனை நாட்கள் ஓபிஎஸ் ஆதரவு, இபிஎஸ் ஆதரவு என்று இரண்டு தரப்பு மட்டுமே பிரிந்து மோதிக்கொண்டு இருந்தது. தற்போது சசிகலா ஆதரவும் மூன்றாவதாக உருவாகி உள்ளதால் மோதல் பெரிதாகி இருக்கிறது.

திமுக என்ன பண்ணுதோ பண்ணட்டும்.. வெயிட் பண்ணுவோம்.. அப்ப தெரியும் கதை.. எடப்பாடி பழனிசாமி பலே திட்டம்திமுக என்ன பண்ணுதோ பண்ணட்டும்.. வெயிட் பண்ணுவோம்.. அப்ப தெரியும் கதை.. எடப்பாடி பழனிசாமி பலே திட்டம்

முதல் டீம்

முதல் டீம்

ஒரு பக்கம் எடப்பாடி பழனிசாமி தரப்பு கட்சிக்குள் தனக்கு இருக்கும் ஆதரவை தக்க வைத்துக்கொள்ள முயற்சி செய்து வருகிறது. கட்சியில் தற்போது பல எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்களும், கொங்கு மண்டல நிர்வாகிகள் எல்லோருரும் இபிஎஸ்ஸுக்குத்தான் சப்போர்ட். சசியோ அல்லது ஓபிஎஸ் தரப்போ கட்சிக்குள் வலிமை பெற்றால் தனது லகான் கைநழுவிவிடும் என்று இபிஎஸ் தரப்பு நினைக்கிறது.

 இரண்டாவது டீம்

இரண்டாவது டீம்

இரண்டாவதாக ஓபிஎஸ் தரப்போ.. கட்சிக்குள் தங்களுக்கு போதிய வாய்ஸ் இல்லை என்று நினைக்கிறது. அதிலும் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறோம். ஆனால் பெயருக்குத்தான் பொறுப்பு எல்லாம். கட்சியில் முக்கிய முடிவுகளில் ஆதிக்கம் செலுத்தவே முடியவில்லை என்ற கவலையில் ஓபிஎஸ் தரப்பு உள்ளது. எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைக்காத விரக்தி இன்னும் ஓபிஎஸ்ஸுக்கு இருப்பதாக தெரிகிறது.

மூன்றாவது டீம்

மூன்றாவது டீம்

மூன்றாவதாக சசிகலா தரப்பு. அதிமுகவில் நிலவும் மோதலை வைத்து எப்படியாவது கட்சிக்குள் கம்பேக் கொடுக்கும் முடிவில் இருக்கிறார். இபிஎஸ் - ஓபிஎஸ் மோதலை பயன்படுத்தி உள்ளே வரலாம்.. பட்டதெல்லாம் போதும்.. இனியும் சைலண்ட்டாக இருக்க கூடாது. கட்சியை கைப்பற்ற இதுதான் சரியான நேரம் என்று இன்னொரு பக்கம் சசிகலா தரப்பு நினைக்கிறது.

மீட்டிங்

மீட்டிங்

இந்த நிலையில்தான் முதல் ஆளாக நிர்வாகிகளை தன் பக்கம் இழுக்கும் வகையில் எடப்பாடி பழனிச்சாமி இன்று சென்னை அதிமுக அலுவலகத்தில் மீட்டிங் நடத்தினார். இபிஎஸ் மட்டுமே மீட்டிங்கில் கலந்து கொண்டார். ஓபிஎஸ் கலந்து கொள்ளவில்லை. முக்கியமான 9 மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

செயலாளர்

செயலாளர்

இதில் சிக்கல் என்னவென்றால் இபிஎஸ் அழைத்த சில நிர்வாகிகள் மீட்டிங்கிற்கு வரவில்லை என்று தெரிகிறது. பலரை அழைத்த நிலையில் 9 மாவட்ட நிர்வாகிகள் மட்டுமே வந்ததாக கூறப்படுகிறது. சிலர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட போதும், அவர்கள் கடைசி நேரத்தில் கழன்று கொண்டதாக கூறப்படுகிறது.

இபிஎஸ்

இபிஎஸ்

ஆனால் இதை இபிஎஸ் எதிர்பார்த்துதான் இருந்தார். நிர்வாகிகளை தன் பக்கம் எப்படி இழுக்க வேண்டும் என்று அவருக்கு தெரியும். இந்த மீட்டிங் டீசர்தான் என்றும் இபிஎஸ் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். இந்த மீட்டிங்கிற்கு முக்கியமான சிலர் வராததை பார்த்து, மீட்டிங்கிற்கு வந்த மற்ற நிர்வாகிகள் கடுகடுப்பில் இருந்துள்ளனர். அவங்க எங்கே காணோம் என்பது பல பல மாவட்ட செயலாளர்கள் குறித்து விசாரித்துள்ளனர்.

 காரணம்

காரணம்

ஆனால் இபிஎஸ் இதை பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. எனக்கான ஆதரவு கண்டிப்பாக கட்சிக்குள் இருக்கிறது. வந்தவர்கள் வரட்டும், மீதமுள்ளவர்கள் விரைவில் வருவார்கள், சசிகலா தரப்பால் எதுவும் செய்ய முடியாது என்ற நம்பிக்கையில் இபிஎஸ் இருப்பதாக கூறுகிறார்கள். அதிமுகவில் நடக்கும் முத்தரப்பு மோதல் இப்போதுதான் தீவிரம் அடைய தொடங்கி உள்ளது... இதுவரை நடந்தது எல்லாம் டீசர்தான்.. இனிமேல்தான் மெயின் பிக்சர் என்கிறார்கள்.

English summary
Why only fewer secretaries attended the Edappadi Palanisamy meeting in AIAMDK HO today in Rayapettah
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X