சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எகிப்து வெங்காயம் எண்ணெய் குடிக்குமாம்.. விலை குறைவாக இருந்தாலும் சீண்டாத மக்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    விலை குறைவாக இருந்தாலும் சீண்டாத மக்கள்

    சென்னை: குண்டு குண்டாக அளவில் பெரியதாக இருக்கும் எகிப்து வெங்காயத்தை வாங்க யாரும் ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில் இந்த வெங்காயம் எண்ணெய் குடிக்கும் என்றும், நம்மூர் வெங்காயதைத்தை போல் ருசியாக இருக்காது என்றும் பொதுமக்களில் சிலர் கூறினார்கள். ஆனால் இந்த கூற்றை வியாபாரிகள் மறுக்கிறார்கள்.

    வெங்காய விலை ரூ.150க்கும் அதிகமாக விற்பதால் மக்கள் வெங்காயம் வாங்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். நாடு முழுவதுமே வெங்காய தட்டுப்பாடு நிலவுவதால் எகிப்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

    பிஇ படித்தவர்கள் இனி 6 முதல் 8 வகுப்புகளுக்கு ஆசிரியர் ஆகலாம்.. தமிழக அரசு அரசாணை வெளியீடுபிஇ படித்தவர்கள் இனி 6 முதல் 8 வகுப்புகளுக்கு ஆசிரியர் ஆகலாம்.. தமிழக அரசு அரசாணை வெளியீடு

    மொத்த மார்க்கெட்

    மொத்த மார்க்கெட்

    இந்த எகிப்து நாட்டு வெங்காயம் கோவை, சென்னை திருச்சி உள்பட பல்வேறு நகரங்களின் மொத்த மார்க்கெட்டுக்கு நேற்று வந்திறங்கியது.

    60டன் வெங்காயம்

    60டன் வெங்காயம்

    கோவை எம்ஜிஆர் காய்கறி மார்க்கெட்டுக்கும், 60 டன் பெரிய வெங்காயம் இரண்டு கண்டெய்னர் லாரியில் இருந்து வந்தது. 19 கிலோ எடை கொண்ட நைலான் சாக்குப்பையில் நிரப்பிக் கொண்டு வரப்பட்டன.

    ஆர்வம் காட்டவில்லை

    ஆர்வம் காட்டவில்லை

    திருச்சியில் விற்பனைக்கு வந்த எகிப்து வெங்காயத்தை வாங்க மக்களிடையே பெரிதும் ஆர்வம் இல்லை. இதனால் 120 ரூபாயில் இருந்து 90 ரூபாயாக குறைக்கப்பட்ட போதிலும் மக்கள் வாங்க தயாராக இல்லை.

    ருசி எப்படி

    ருசி எப்படி

    வெங்காய தட்டுப்பாடு நிலவினாலும் எகிப்து வெங்காயத்தை வாங்காததற்கு என்ன காரணம் என்று விசாரித்தால், எகிப்து வெங்காயம் இந்திய வெங்காயத்தை போல் ருசி இருக்காது என்கிறார்கள். மேலும் நம்மூர் வெங்காயம் பெரியதாக எண்ணெய் குடிக்காது என்றும் இந்த வெங்காயம் எண்ணெய் குடிக்கும் என்றும் சொல்கிறார்கள். ஆனால் இதனை வெங்காய வியாபாரிகள் மறுக்கிறார்கள்.

    ருசி இருக்கும்

    ருசி இருக்கும்

    எகிப்து வெங்கயாம் குறித்து வெங்காய இறக்குமதியாளர் கூறுகையில், எகிப்து வெங்காயம் நல்ல காரத்தன்மை கொண்டது நம்ம ஊர் வெங்காயம்-2 பயன்படுத்துவதற்கு பதிலாக அரை அல்லது ஒரு வெங்காயம் பயன்படுத்தினால் போதும் உணவின் சுவை மேலும் கூடும் தற்போது கிலோ 130 ரூபாய்க்கு விற்கிறது வரத்து அதிகரித்து அதிகரிக்க விலை குறையும் என்றார்.‘

    English summary
    onion price hike: why tamilnadu people not willing to buy in egypt onion in market, reason listed here
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X