சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இதுதான் காரணமா? சிபிஐ இயக்குனரை திடீரென்று நீக்கியது ஏன் தெரியுமா?

சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து அலோக் வெர்மாவை நீக்கியதற்கு காரணம் என்ன என்று தேர்வு கமிட்டி அறிக்கை வெளியிட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Alo verma press meet | அலோக் வெர்மாவின் மத்திய அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்

    சென்னை: சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து அலோக் வெர்மாவை நீக்கியதற்கு காரணம் என்ன என்று தேர்வு கமிட்டி அறிக்கை வெளியிட்டுள்ளது.

    சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து அலோக் வெர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பியது தவறு என்று உச்ச நீதிமன்றம் இரன்டு நாட்களுக்கு முன் தீர்ப்பு வழங்கியது. ஆனாலும் உச்ச நீதிமன்றம் இந்த விடுப்பு குறித்து இறுதி முடிவை சிபிஐ அதிகாரிகளை தேர்வு செய்யும் அமைப்பான விஜிலென்ஸ் அமைப்புதான் எடுக்க வேண்டும் என்று கூறியது.

    Why PM Modi-led panel removed Alok Verma as CBI Director?

    இந்த விஜிலென்ஸ் தேர்வு கமிட்டியின் உறுப்பினராக பிரதமர் மோடி, காங்கிரஸ் லோக் சபா தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, உச்ச நீதிமன்றம் நீதிபதி ஏ.கே சிக்ரி ஆகியோர் உள்ளனர். இந்த நிலையில் இந்த கமிட்டியின் மீட்டிங் நேற்று மாலை நடந்தது.

    இதில் ஆலோசனையின் முடிவில்,சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து அலோக் வெர்மாவை நீக்குவதாக முடிவெடுக்கப்பட்டது. பிரதமர் மோடி, உச்ச நீதிமன்றம் நீதிபதி ஏ.கே சிக்ரி ஆகியோர் இதற்கு ஆதரவாக வாக்களித்தனர். காங்கிரஸ் லோக் சபா தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே இதற்கு எதிராக வாக்களித்தார்.

    சிபிஐயின் நேர்மை சுக்குநூறாக உடைந்துவிட்டது.. கலங்கும் முன்னாள் சிபிஐ இயக்குனர்.. குற்றச்சாட்டு! சிபிஐயின் நேர்மை சுக்குநூறாக உடைந்துவிட்டது.. கலங்கும் முன்னாள் சிபிஐ இயக்குனர்.. குற்றச்சாட்டு!

    இந்த நிலையில் அலோக் வெர்மாவை பதவியில் இருந்து நீக்கியதற்கு 6 காரணங்கள் சொல்லப்பட்டு இருக்கிறது. பிரதமர் மோடி தலைமையிலான தேர்வு கமிட்டி இது குறித்து 6 காரணங்கள் உள்ள அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து அலோக் வெர்மாவை நீக்கியது ஏன் என்று விரிவாக இதில் விளக்கப்பட்டுள்ளது.

    1) அலோக் வெர்மாவிற்கு எதிராக கொண்டு வரப்பட்டு இருக்கும் புகார்கள் சில மிக முக்கியமானவை. இந்த புகார்கள் அவரின் பதவிக்கும், சிபிஐக்கும் இழுக்கு விளைவிக்க கூடியவை.

    2) அலோக் வெர்மா தொடர்ந்து சிபிஐ இயக்குனராக இருந்தால், அவருக்கு எதிரான வழக்குகளை விரிவாக விசாரிக்க முடியாது.

    3) அவர் சிபிஐ அமைப்புடன் பெரிய அளவில் ஒத்துழைப்பு வழங்கவில்லை, அதேபோல் அவர் முழு திறமையுடன் பணியாற்றவில்லை.

    4) தேர்வு கமிட்டியிடம் அவர் அளித்து இருக்கும் தவறான, முறையற்ற ஆதாரங்களே அவர் நேர்மையானவர் கிடையாது என்று அறிவிக்கிறது. இது குறித்து விசாரிக்க வேண்டும்.

    5) இவருக்கு எதிராக இன்னும் சில முக்கிய குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளது.(ஆனால் குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கப்படவில்லை)

    6) சிபிஐ அமைப்பின் இயக்குனராக இவர் இருப்பது, சிபிஐ மீதான நம்பகத்தன்மையை குழைக்க வாய்ப்புள்ளது, என்று 6 காரணங்கள் இதில் கூறப்பட்டுள்ளது.

    English summary
    Why PM Modi-led panel removed Alok Verma as CBI Director? Here is the reason.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X