சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

3 காரணங்கள்.. 2 வல்லரசுகள்.. சிவப்பு கொடிக்கு சிவப்பு கம்பளம் விரிக்கும் காவி கொடி.. என்ன காரணம்?

இந்தியா மற்றும் சீனா ஆகிய இரண்டு வல்லரசு நாடுகளின் தலைவர்கள் இன்று ஒன்றாக ஆலோசனை நடத்துவது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    சீன அதிபர் வருகை... உச்சகட்ட பரபரப்பில் சென்னை

    சென்னை: இந்தியா மற்றும் சீனா ஆகிய இரண்டு வல்லரசு நாடுகளின் தலைவர்கள் இன்று ஒன்றாக தமிழகத்தில் ஆலோசனை நடத்துவது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

    இந்த வருட தொடக்கத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் ஆகியோர் சந்தித்துக்கொண்டனர். எலியும், பூனையுமாக அடித்துக் கொண்ட இவர்கள் இருவரும் சந்தித்து, பார்க்கில் வாக்கிங் போனார்கள்.

    அதேபோல்தான் அமெரிக்காவின் பிரபலமான கேம்ப் டேவிட் பகுதிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தாலிபான்களை அழைத்தார். அமெரிக்கா வாருங்கள் சமாதானம் பேசுவோம் என்று அழைத்தார்.

    சீனா அதிபர் ஜின்பிங் இன்று வருகை- மோடியுடன் பேச்சு- கோலாகல வரவேற்புடன் காத்திருக்கும் தமிழகம்சீனா அதிபர் ஜின்பிங் இன்று வருகை- மோடியுடன் பேச்சு- கோலாகல வரவேற்புடன் காத்திருக்கும் தமிழகம்

    அரசியல் மாற்றங்கள்

    அரசியல் மாற்றங்கள்

    சிரியாவில் ராணுவத்தை குவித்த அமெரிக்கா தற்போது அதை வாபஸ் வாங்க தொடங்கி உள்ளது. இப்படி உலக அரசியலில் நடக்கும் மாற்றங்கள் உணர்த்துவது எல்லாம் ஒரே உண்மைதான்.. அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கும். அதிலும் உலக அரசியல் இதெல்லாம் சாதாரணமப்பா என்று சொல்லும் அளவிற்கு எப்போது வேண்டுமானாலும் திருப்பங்கள் நிகழும்!

    திருப்பம்

    திருப்பம்

    அப்படி ஒரு திருப்பம்தான் தற்போது தெற்காசியாவில் நடக்கிறது. ஆசியாவின் இரண்டு மிகப்பெரிய வல்லரசு நாடுகள். உலகில் அதிக மனித வளத்தை கொண்ட நாடுகள் என்றால் சீனாவும், இந்தியாவும்தான். 2030ல் உலகை கட்டுக்குள் வைத்திருக்கும் நாடாக இரண்டு நாடுகள் மாறிவிடும் என்று கணித்து இருக்கிறார்கள். இந்த இரண்டு நாடுகள்தான் தற்போது கைகோர்க்க உள்ளது.

    இப்போதே அப்படித்தான்

    இப்போதே அப்படித்தான்

    இப்போதே சீனாவின் ஜாக் மாவும், இந்தியாவும் அம்பானியும் உலகம் முழுக்க முக்கிய தொழிலதிபர்களாக மாறி
    இருக்கிறார்கள். சீனாவின் எலக்ட்ரானிக் பொருட்கள் உலக சந்தையை ஆக்கிரமிக்க தொடங்கி உள்ளது. இந்தியாவின் ஆட்டோமொபைல் சாதனங்கள், மருத்துவ ஏற்றுமதிகள் உலகம் முழுக்க விற்பனையாகிறது.

    என்ன வேற்றுமை

    என்ன வேற்றுமை

    இந்த நிலையில்தான் இரண்டு நாட்டின் பெரும் தலைவர்களும் இன்று சென்னையில் சந்திக்க உள்ளனர். இந்தியாவில் வலதுசாரி கொள்கை கொண்ட பாஜக கட்சி ஆட்சி செய்து வருகிறது. சீனாவில் இடதுசாரி கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. இரண்டு நாடுகளுக்கும் இருக்கும் பெரும் வேறுபாடு என்று இதை கூறலாம்.

    என்ன ஒற்றுமை

    என்ன ஒற்றுமை

    ஆனால் சட்டங்கள், ஆட்சி முறைகள், பொருளாதார கொள்கைகள் என்று பார்த்தால் இரண்டு நாடுகளும் ஒரே மாதிரிதான் இருக்கிறது. பொருளாதார கொள்கைகளில் சீனாவை இந்தியா தீவிரமாக பின்பற்ற தொடங்கி உள்ளது. இணையதள முடக்கம், தனிமனித கண்காணிப்பிலும் இரண்டு நாடுகளும் ஏறத்தாழ ஒரே மாதிரிதான் இருக்கிறது.

    இஸ்லாம் எப்படி

    இஸ்லாம் எப்படி

    இரண்டு நாடுகளும் தற்போது தீவிரமாக சில நடவடிக்கைகளை செய்து வருகிறது. அதில் முதல் விஷயம் என்றால் இஸ்லாம் எதிர்ப்பு என்று கூட கூறலாம். சீனாவில் இஸ்லாம் மதத்தை பின்பற்ற கடுமையாக கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. இந்தியாவில் நேரடியாகவும், மறைமுகமாகவும் நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.

    மூன்று கோரிக்கை

    மூன்று கோரிக்கை

    இந்த நிலையில் மூன்று முக்கியமான விஷயங்களுக்காக இந்த சந்திப்பு அதிக முக்கியத்துவம் பெறுகிறது. சீனா, அமெரிக்கா, இலங்கை என்று எல்லா நாடுகளும் தற்போது மாமல்லபுரம் கடற்கரையை நோக்கி தங்கள் ரேடாரை திருப்பி உள்ளது. மோடியும் - ஜின்பிங்கும் என்ன பேச போகிறார்கள் என்று பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    வரி விதிப்பு

    வரி விதிப்பு

    இந்த ஆலோசனையில் முக்கியமாக இரண்டு நாட்டு ஏற்றமதி - இறக்குமதி கொள்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. சீனாவில் இந்திய பொருட்களுக்கு விதிக்கப்படும் வரியும், இந்தியாவில் சீன பொருட்களுக்கு விதிக்கப்படும் வரி குறித்தும் இதில் முக்கிய ஆலோசனை செய்யப்பட உள்ளது.

    சீன பட்டாசு

    சீன பட்டாசு

    சீன பட்டாசு, சீன உடைகள், எலக்ட்ரானிக் பொருட்கள் என்று பல்வேறு விஷயங்கள் குறித்து இதில் பேசுவார்கள். இந்தியாவின் பொருட்களுக்கு சீனா அதிகமாக வரி விதித்து வருகிறது. அது இந்த சந்திப்பின் மூலம் குறைக்கப்படும் என்கிறார்கள். அதேபோல் சீனா இந்தியாவில் மொபைல் நிறுவனங்களை தொடங்க வாய்ப்புள்ளது.

    பாகிஸ்தான் பிரச்சனை

    பாகிஸ்தான் பிரச்சனை

    இந்த சந்திப்பில் மிக முக்கியமான பிரச்சனை என்றால் அது பாகிஸ்தான் பிரச்சனைதான். காஷ்மீர் விவகாரத்தில் சீனா இந்தியாவிற்கு எதிராக நிலைப்பாடு எடுத்தது. அது தொடர்பாக இன்று விவாதிக்கப்படும் என்கிறார்கள். ஆசியாவில் சீனா - இந்தியா ஆகிய நாடுகளின் ஒற்றுமை எப்படி இருக்கிறது, காஷ்மீர் இரண்டு நாடுகளையும் பிரிக்குமா என்று இந்த சந்திப்பில் தெரிந்துவிடும்.

    இந்தியா யோசனை

    இந்தியா யோசனை

    காஷ்மீர் பிரச்சனையில் கிட்டத்தட்ட இந்தியாவானது அமெரிக்கா, சவுதி, ரஷ்யா உள்ளிட்ட முக்கிய நாடுகளை தன் பக்கம் இழுத்துவிட்டது. தற்போது சீனாவையும் தன் பக்கம் கொண்டு வரும் முயற்சியில் பிரதமர் மோடி இறங்கியுள்ளார். அது இன்று நிறைவேற கூட வாய்ப்புள்ளது.

    எல்லை பிரச்சனை

    எல்லை பிரச்சனை

    அடுத்த பிரச்சனையாக அருணாச்சல பிரதேச எல்லை பிரச்சனை குறித்தும் இதில் ஆலோசிக்க வாய்ப்புள்ளது. காஷ்மீரில் சீனாவில் சில பகுதிகளை ஆக்கிரமித்துள்ளது. அதை பற்றியும் விவாதம் நடக்க வாய்ப்புள்ளது. மேலும் இலங்கை தேர்தல், அந்நாட்டு பாதுகாப்பு குறித்தும் இதில் பேச வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

    English summary
    All you need to know about importance of PM Modi - Xi Jinping Meet in South Asian politics.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X