சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிமுக கூட்டணி தொகுதிகள் அறிவிப்பு.. ஆப்சென்ட்டான பாமக, தேமுதிக.. காரணம் என்ன.. பரபர தகவல்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    தொகுதி ஒதுக்கீட்டில் திருப்தியடையாத தேமுதிக, பாமக ?

    சென்னை: கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்து அதிமுக அறிவிப்பின்போது அதை பாமகவும் தேமுதிகவும் புறக்கணித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, பாமக, பாஜக, புதிய நீதி கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், என். ஆர். காங்கிரஸ் , தேமுதிக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.

    இந்நிலையில் பாமகவுக்கு 7 தொகுதிகளும், பாஜகவுக்கு 5 தொகுதிகளும், தேமுதிகவுக்கு 4 தொகுதிகளும் , புதிய நீதி கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ், புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

    தலித்துகளின் மனதை மொத்தமாக அள்ளிய அதிமுக.. 5 தனி தொகுதிகளில் போட்டி.. திமுகவுக்கு நெருக்கடி! தலித்துகளின் மனதை மொத்தமாக அள்ளிய அதிமுக.. 5 தனி தொகுதிகளில் போட்டி.. திமுகவுக்கு நெருக்கடி!

    அதிமுக அறிவிப்பு

    அதிமுக அறிவிப்பு

    கூட்டணிகளுக்கு ஒதுக்கீடு செய்தது போக மீதமுள்ள 20 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. இந்த நிலையில் இன்றைய தினம் அதிமுக கூட்டணி கட்சிகள் எங்கு எங்கு போட்டியிடுகின்றன என்பது குறித்து அதிமுக தனியார் ஹோட்டலில் வெளியிட்டது.

    பரபரப்பு

    பரபரப்பு

    இந்த நிகழ்ச்சியில் அதிமுக, பாஜக தலைவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். தேமுதிக, பாமக தலைவர்கள் யாரும் பங்கேற்கவில்லை. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பாமகவின் ஜி கே மணி

    பாமகவின் ஜி கே மணி

    இந்த நிலையில் பாமகவும், தேமுதிகவும் கேட்ட தொகுதிகளை அதிமுக கொடுக்காததால்தான் இவர்கள் இருவரும் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது. சேலம் ஓமலூரில் அதிமுக சார்பில் நடந்த கூட்டத்தில் சம்பந்தமேயில்லாமல் பாமகவின் ஜி.கே. மணி கலந்து கொண்டார்.

    தேமுதிகவுக்கு

    தேமுதிகவுக்கு

    ஆனால் இன்று தொகுதி அறிவிப்பின் போது இருவரது பிரதிநிதிகளும் பங்கேற்கவில்லை. தென் சென்னை, ஆரணி தொகுதியை பாமக கேட்டது. ஆனால் தற்போது அதில் அதிமுக போட்டியிடுகிறது. அது போல் கள்ளக்குறிச்சியை பாமக கேட்டது, ஆனால் அது தேமுதிகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    புறக்கணிப்பு

    புறக்கணிப்பு

    அது போல் தருமபுரி, அரக்கோணம், கிருஷ்ணகிரி ஆகிய தொகுதிகளை தேமுதிக கேட்டது. ஆனால் அவற்றில் தருமபுரியும், அரக்கோணமும் பாமகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அது போல் கிருஷ்ணகிரியும் கிடைக்கவில்லை. இதனால் இரு கட்சிகளும் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இதனால் அந்த இரு கட்சிகளும் புறக்கணித்துள்ளதாக கூறப்படுகிறது.

    English summary
    ADMK announces the list of LS constituencies where itself and its allies are going to contest. But PMK and DMDK boycotted this meeting because of disappointment.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X