சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

7 தொகுதிகளிலும் பாமக படுதோல்வி.. அதிரவைக்கும் காரணங்கள் என்ன?

Google Oneindia Tamil News

Recommended Video

    பாமக-வை ஓரங்கட்டும் அதிமுக | பாமக மீது தவறு இருந்தால் திருத்திக்கொள்வோம்... அன்புமணி ராமதாஸ்

    சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் பாமக போட்டியிட்ட 7 தொகுதிகளிலும் பாமக தோல்வியுற்றது கூட்டணி கட்சியினரும், சொந்த கட்சி நிர்வாகிகளும் பாமகவுக்கு பணியாற்றாததே காரணம் என சொல்லப்படுகிறது.

    நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி என பாமக அறிவித்தவுடன் அங்கிருந்த ராஜேஸ்வரி பிரியா, நடிகர் ரஞ்சித் உள்ளிட்ட ஏராளமானோர் கட்சியிலிருந்து விலகினர். இன்னும் பலர் விலகாமல் அதிருப்தியில் இருந்த வண்ணம் உள்ளனர்.

    இதே நிலையில் பாமக குரு மரணம் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை அவரது குடும்பத்தினர் முன் வைத்தனர். இதனால் குரு ஆதரவாளர்களும் பாமக பரம எதிரிகளாய் மாறினர். இதன் விளைவு தருமபுரி உள்பட 7 தொகுதிகளிலும் பாமகவை தோற்கடிக்க வேண்டும் என உறுதிமொழி ஏற்றனர்.

    டிரம்ப் vs மோடி.. முதல்முறை அமெரிக்காவை எதிர்க்க துணியும் இந்தியா.. ஈரானுக்கு கைகொடுக்க பிளான்! டிரம்ப் vs மோடி.. முதல்முறை அமெரிக்காவை எதிர்க்க துணியும் இந்தியா.. ஈரானுக்கு கைகொடுக்க பிளான்!

    வேதனை

    வேதனை

    இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையின் போது தருமபுரி எம்பி தொகுதியில் அன்புமணி முன்னிலை வகித்து வந்தார். எனினும் இறுதியில் அவர் தோல்வி அடைந்ததால் பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் வேதனை அடைந்துள்ளார்.

    ராமதாஸ்

    ராமதாஸ்

    விழுப்புரம் தொகுதியிலாவது திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட ரவிக்குமாரை பாமகவின் வடிவேல் ராவணனும் பின்னடைவு ஏற்பட்டதை அறிந்த ராமதாஸ் மிகவும் மனம் உடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது.

    அதிருப்தி

    அதிருப்தி

    இதற்கு காரணம் என்னவென்று ஆராயப்பட்டது. அதில் பாமகவுக்கு பயங்கர ஷாக் தகவல் கிடைத்தது. அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால் அதிருப்தி அடைந்த பாமகவினரே அக்கட்சி வேட்பாளர்கள் தோற்கடித்ததாக கூறப்படுகிறது.

    அதிமுக

    அதிமுக

    மேலும் திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் திமுக கடுமையாக பாடுபட்டு வெற்றியை குவித்து கொடுத்தது. ஆனால் அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் வெற்றிக்கு அதிமுக கடுமையாக உழைக்கவில்லை என்றும் வேண்டுமென்றே தோற்கடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனாலேயே தேமுதிக, பாமக, பாஜக, புதிய தமிழகம், தமாகா உள்ளிட்ட கட்சிகள் தோல்வியுற்றதற்கு காரணம் என சொல்லப்படுகிறது. இதை கேட்டு ராமதாஸ் மிகவும் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது.

    English summary
    Here are the reasons for why PMK and other parties lose in election?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X