• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

ஆர்.கே.நகர் எப்படி ஆரவாரமா இருந்துச்சு.. திருவாரூரில் ஏன் எல்லாரும் இவ்வளவு சைலண்ட்?

|
  திருவாரூர் இடைத்தேர்தல்:சைலண்டாக இருக்கும் அரசியல் கட்சிகள்- வீடியோ

  சென்னை: எப்பவுமே தேர்தல் என்றாலே தமிழகத்தில் இனம் புரியாத ஒரு பரபரப்பு தொத்தி கொள்ளும். ஆனால் இந்த முறை எதிர்பார்த்த அளவுக்கு உற்சாகம் காணப்படவில்லை. ஏன் எல்லாரும் இவ்வளவு சைலண்ட்?????

  திருவாரூர், திருப்பரங்குன்றம் இரு தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என்பது என்னவோ தடாலடியாக எடுத்த முடிவு இல்லை. தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டும் தேர்தல் கமிஷன் தேர்தலை நடத்துவதாக தெரியவில்லை.

  அதற்கு பிறகு ரெட் அலர்ட் அரசியல், அதற்கு பிறகு தேர்தல் தள்ளி வைப்பு, அதற்கு பிறகு கோர்ட்டுக்கு போய் பொதுநல வழக்கு போட்ட பிறகுதான் அனுமதி அளிக்கப்பட்டது. அப்படியும் ஒரு தொகுதிக்குதான் அனுமதி தரப்பட்டது. அதனால் இடைத் தேர்தல் என்பது அதிரடியாகவோ, யாருக்கும் தெரியாமல், அறியாமல் வந்த ஒன்றோ கிடையாது. இவ்வளவு விஷயங்கள் நடந்தும் அரசியல் கட்சிகள் ஏன் ஆர்வம் காட்டாமல் இருக்கிறார்கள்??

  திருவாரூர் தேர்தலில் ஸ்டாலின் நிற்கிறாரா? பரபர கேள்விக்கு ஸ்டாலின் அளித்த பதிலை பாருங்க! திருவாரூர் தேர்தலில் ஸ்டாலின் நிற்கிறாரா? பரபர கேள்விக்கு ஸ்டாலின் அளித்த பதிலை பாருங்க!

  ஆர்வம் இல்லை

  ஆர்வம் இல்லை

  திருவாரூரை பொறுத்தவரை திமுகதான் முதல் கட்சியாக பார்க்கப்படுகிறது.ஆனால் விருப்ப மனுவை 2, 3 தேதிகளில் செலுத்தலாம் என தலைமையால் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் 1-ம் தேதியே சிலர் மனுக்களை வாங்கி சென்றதை பார்த்ததும் திமுகவின ஆர்வம் அதிகமாக தென்பட்டது.

  சுப்ரீம் கோர்ட்

  சுப்ரீம் கோர்ட்

  ஆனால் நேற்று யாரும் மனு தாக்கலை செய்யவில்லை. நாளை மாலை நேர்காணல் அக்கட்சி சார்பாக நடக்கப்போகிறது. அதன்பிறகுதான் வேட்பாளர் அறிமுகம் என தலைமை சொல்லிவிட்டது. அதனால் விருப்ப மனு தாக்கலிலேயே திமுக இடைத்தேர்தலை ஆதரிக்கவில்லையோ என்று எண்ண தோன்றுகிறது. அதேபோலதான் கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட் முதல் ஆதரவை தெரிவித்தது. பிறகு முதல் ஆளாக சுப்ரீம் கோர்ட்டிலும் இடைத்தேர்தலை தள்ளி வைக்க சொல்லி மனு போட்டுள்ளது.

  சென்டிமென்ட் குக்கர்

  சென்டிமென்ட் குக்கர்

  திமுகவுக்கு அடுத்ததாக சொந்த மாவட்டம் என்பதால் டிடிவி தினகரன் எதிர்பார்க்கப்படுகிறார். ஆனால் நேற்று சட்டப்பேரவை முடிந்து வெளியே வந்து பேட்டி அளித்தபோதுகூட திருவாரூர் பற்றி பெரிசா ஒன்னும் சொல்லவில்லை. சென்டிமென்ட்டுக்காக குக்கர் சின்னத்தை முன்கூட்டியே வாங்கி வைத்து கொள்ளும் எண்ணம் இருக்கிறதே தவிர, திருவாரூரில் ஜெயித்தே காட்ட வேண்டும் என்று 4 மாதங்களுக்கு முன்பு இருந்த "வெறி" இப்போது குறைந்தே உள்ளது.

  சர்க்கரை பொங்கல்

  சர்க்கரை பொங்கல்

  தேர்தல் எங்களுக்கு சர்க்கரை பொங்கல் என்று ஒருபக்கம் சொல்லிவிட்டு, மற்றொரு புறம் கஜா புயல் நிவாரத்தை காட்டி இடைத் தேர்தலை தள்ளி வைக்க சொல்லுகிறது அதிமுகவும். தமிழக பாஜக சொல்லவே தேவையில்லை, தேர்தல் தேதி வந்த நாளிலிருந்தே எந்த வரவேற்பும், ஆதரவும், நிலைப்பாட்டையும் தெரிவிக்கவில்லை. செய்தியாளர்கள் பகிரங்கமாக கேட்டபோதுகூட, பிரதமர் வருவதில்தான் எங்கள் கவனம் உள்ளது என்று சொல்லிவிட்டது.

  ஒரே ஒரு தொகுதியா?

  ஒரே ஒரு தொகுதியா?

  தேர்தலே நடக்காமல் இருந்த தொகுதி, அதுவும் கருணாநிதி தொகுதியில் இப்படி தேர்தல் தேதி அறிவித்தும் எதற்காக கட்சிகள் எல்லாம் இப்படி ஆர்வம் காட்டாமல் இருக்கின்றன? வரப்போகிற எம்பி தேர்தல் முக்கியமானதுதான். அதற்காக ஒரே ஒரு தொகுதி தேர்தல் என்பதால் இதனை அலட்சியப்படுத்த முடியுமா? எந்தெந்த கட்சிகளுக்கு செல்வாக்கு எப்படி கூடியோ, குறைந்தோ உள்ளதை இந்த இடைத்தேர்தலை கொண்டு எடை போட்டு கொள்ள வேண்டாமா?

  மக்கள் மீது பயமா?

  மக்கள் மீது பயமா?

  தேர்தலை அரசியல் கட்சிகள் சந்திக்க மறுக்க காரணம் மக்கள் மீதான பயமா? அப்படியே பயந்தாலும் இது ஆளும் தரப்புக்கும், அதன் கூட்டணிகளுக்கும் உள்ள பயம்தானே? மற்ற கட்சிகள் ஏன் பின் வாங்குகின்றன? எதற்காக தேர்தலை தள்ளி வைக்க சொல்லி ஆளாளுக்கு மனு தாக்கல் செய்து வருகிறார்கள் என்று இப்போதுவரை புரியவில்லை.

  English summary
  Why political parties including ADMK, AMMK are not interested in Thiruvarur By Election?
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X