சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சின்னதா புள்ளி வைத்து விட்டுபோன பொன். ராதாகிருஷ்ணன்.. மண்டை காய்ந்து போன திராவிட கட்சிகள்.. பாஜக செம

பொன் ராதாகிருஷ்ணனின் கூட்டணி பற்றிய பேட்டியால் திராவிட கட்சிகள் திணறியே விட்டன

Google Oneindia Tamil News

சென்னை: பாஜக - திமுக கூட்டணி சாத்தியமா என்ற கேள்விதான் தற்போதைய அரசியலை கவ்வி வருகிறது.. இதுக்கெல்லாம் காரணம் பொன்.ராதாகிருஷ்ணன் தந்த அந்த ஒற்றை பேட்டிதான்... இதையடுத்து, திராவிட அரசியலே மண்டை காய்ந்து போயுள்ளது.

நேற்று பொன்ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசும்போது, "2021-ல் தமிழகத்தில் பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணி ஆட்சி அமையும்... அதில் அதிமுக இருக்கலாம் திமுக இருக்கலாம் அல்லது பிற கட்சிகள் இருக்கலாம். பாராளுமன்றத் தேர்தல் கூட்டணி இப்போதும் தொடர்கிறது.. சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் எந்த கட்சியோடு கூட்டணி சேர்வது என்பது குறித்து தலைமை முடிவு எடுக்கும்" என்றார்.

Why Pon Radhakrishnan talks like that

இதுதான் விவாத பொருளாக உருவெடுத்துள்ளது.. இதை பற்றி சில அரசியல் நோக்கர்களிடம் கருத்து கேட்டோம்.. அவர்கள் சொன்ன உத்தேச கருத்து இதுதான்:

"பொன்னார் ஏன் இப்படி சொன்னார் என்று தெரியவில்லை.. கடந்த சில மாதங்களாகவே எல்.முருகன் அதிமுகவுடன்தான் கூட்டணி என்று உறுதியாக சொல்லி வருகிறார்.. நேற்றும்கூட சொன்னார்.. 60 சீட்டுக்கு வலை வீசியும், அதிமுகவின் பாராமுகம் இப்போது வரை இருந்தும், முருகன் தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார்.

ஆனால், பொன்னாரிடம் ஏன் அந்த உறுதி தென்படவில்லை... அதிமுக என்று மட்டுமே அவர் சொல்லி இருக்க வேண்டுமே தவிர, திமுகவை பேட்டியின்போது உள்ளே கொண்டு வந்தது சற்று குழப்பமாகவே இருக்கிறது.. ஒருவேளை அது அவரது தனிப்பட்ட கருத்தாகவும் இருக்கலாம்.. இதுபோலவே துரைமுருகனும் ஜாடைமாடையாக பேசுவதும் சந்தேகத்தை கிளப்பி உள்ளதாக தெரிகிறது.

ஆனால், இதே பொன்னார் இன்னொரு பேட்டியில், கூட்டணி தொடர்பாக நான் கூறியது பொதுப்படையானது. நான் எந்த இடத்திலும் பாஜக கூட்டணி மாறும் என்று சொல்லவில்லை.. அது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது.. திமுகவுடன் இருக்கும் சிறிய கட்சிகள் அதிமுகவுக்கு செல்லலாம், அதிமுகவுடன் இருக்கும் சிறிய கட்சிகள் திமுகவுக்கு செல்லலாம். இப்படித்தான் மாற்றம் இருக்கும் என்றும் தடாலடியாக சொல்கிறார்.

ஏன் முதலில் அப்படி சொல்ல வேண்டும், பிறகு ஏன் பின் வாங்க வேண்டும்? ஒருவேளை திமுக - பாஜக கூட்டணி என்று சொல்லி அதன்மூலம் பல்ஸ் பார்க்கும் நடவடிக்கையா இது?ஆனால், ஒன்று திமுக ஒருவேளை பாஜகவுடன் இணைந்தால், அது அத்துடன் தலையெடுக்கவே முடியாது.. இப்போதுதான் திமுக வளர்ந்து வந்து கொண்டிருக்கிறது.. பாஜகவுடன் கூட்டணி என்றால், வெல்வது கடினம்.. தமிழர்களை அழிக்க துடிக்கும் பாஜகவும் வேண்டாம்.. இந்து மதத்தை இழிவுபடுத்தும் திமுகவும் வேண்டாம் என்ற ஆபத்தான முடிவுக்கு மக்கள் வந்துவிடக்கூடும்.. அதனால், தேவையில்லாமல் யார் குழப்பத்தை ஏற்படுத்தினாலும் அது ஏற்க முடியாதது.

இதில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டி உள்ளது.. தங்களை அதிமுக கண்டு கொள்வதே இல்லை, 60 சீட் பற்றியும் வாய் திறக்கவில்லை என்பதால், ஒருவேளை அதிமுகவை திசைதிருப்ப கூட பாஜக ஏதாவது பிளான் செய்யக்கூடும்.. அதாவது அதிமுகவுக்கு விடுக்கும் மறைமுக மிரட்டலாகவும் இது இருக்கலாம்.. இதில் திமுக தரப்புதான் உஷாராக இருக்க வேண்டும்!" என்றனர்.

English summary
Why Pon Radhakrishnan talks like that
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X