சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வேலூர் தேர்தலை ரத்து செய்ய குடியரசு தலைவர் அனுமதி பெறப்பட்டது ஏன்? இதுதான் காரணம்

Google Oneindia Tamil News

Recommended Video

    வேலூர் மக்களவை தொகுதிக்கு மட்டும் தேர்தலை ரத்துசெய்து உத்தரவு

    சென்னை: வேலூர் லோக்சபா தொகுதியில் கட்டுக்கட்டாக, கோடி கோடியாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அங்கு தேர்தலை ரத்து செய்ய குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்திய தலைமை தேர்தல் ஆணையமே இந்த முடிவை அறிவிக்காமல், ஏன் குடியரசுத் தலைவர் இதை அறிவிக்க வேண்டிய தேவை வந்தது என்ற கேள்வி பொதுவாக எழக்கூடும்.

    இதுகுறித்து தேர்தல் ஆணைய வட்டாரத்தில் விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் இதுதான்:

    Why president acceptance required for cancelling Vellore Lok Sabha elections?

    லோக்சபா தேர்தலை பொறுத்தளவில் அதை நடத்துவது தலைமை தேர்தல் ஆணையமாக, இருந்தாலும், அதற்கும் மேலான அதிகாரம் படைத்தவர் குடியரசுத் தலைவர் தான்.

    லோக்சபா பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பு, குடியரசுத் தலைவரால் பிறப்பிக்கப்படுகிறது. எனவே ஏதாவது ஒரு தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்றாலும், அவரது அனுமதி அவசியம். இந்த விஷயத்தில் பரிந்துரை செய்யும் பொறுப்பு மட்டுமே, தேர்தல் ஆணையத்திற்கு உள்ளது.

    தமிழிசை வீட்டில் கோடி, கோடியாக பணம் இருக்கு... அங்கு ஏன் சோதனை நடத்தல... ஸ்டாலின் சரமாரி கேள்வி தமிழிசை வீட்டில் கோடி, கோடியாக பணம் இருக்கு... அங்கு ஏன் சோதனை நடத்தல... ஸ்டாலின் சரமாரி கேள்வி

    அதேநேரம், லோக்சபா இடைத்தேர்தல்களுக்கோ அல்லது சட்டசபை பொதுத்தேர்தல்களுக்கோ, அல்லது சட்டசபை இடைத்தேர்தல்களுக்கோ இந்த விதிமுறை பொருந்தாது. அப்போது, தேர்தல் ஆணையமே இறுதி முடிவு எடுத்துக் கொள்ளலாம்.

    அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய இரு சட்டசபைத் தொகுதிகளிலும், பொதுத்தேர்தலை பணப்பட்டுவாடாவை காரணமாகக் கொண்டு ரத்து செய்ய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது இதற்கு ஒரு சான்று.

    இவ்வாறு தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

    English summary
    Why president Ram Nath Kovind acceptance our order required for cancelling Vellore Lok Sabha elections?, here is the detail.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X