சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆக, இதற்காகத்தான் ராதாரவியை சஸ்பெண்ட் செய்ததா திமுக?... பரபரப்பு பின்னணி!

Google Oneindia Tamil News

Recommended Video

    Radha Ravi Insults Nayanthara : நயன்தாராவை அசிங்கப்படுத்திய ராதாரவி-வீடியோ

    சென்னை: நடிகர் ராதாராவியை திமுகவிலிருந்து சஸ்பெண்ட் செய்ததன் பின்னணியில் ஒரு பலே காரணம் இருப்பதாக கூறுகிறார்கள்.

    நயன்தாராவை கொச்சையாகப் பேசிய விவகாரத்தில் ராதாரவி திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். ராதாரவி நயன்தாராவை கொச்சையாக பேசிய விவகாரம் பரவியதை விட திமுகவில் இருந்து ராதாரவி நீக்கப்பட்ட விவகாரம் தற்போது வைரலாகி வருகிறது.

    நீண்ட நெடுநாட்களாக தயாரிப்பில் இருந்த படம் கொலையுதிர்காலம். இந்த படத்தில் நயன்தாரா நடிக்க சக்ரி டோலட்டி என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஆடியோ லாஞ்ச் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட நடிகர் ராதாரவி இப்போது சீதா வேடத்தில் யார் வேண்டுமானாலும் நடிக்கிறார்கள் என்று ஆரம்பித்து கொச்சையாக பேசினார். இதற்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களும் கைதட்டினர். இதன் பின்னர்தான் வில்லங்கமே ஆரம்பித்தது

    செந்தில்பாலாஜியை நெஞ்சில் கை வைத்து நிறுத்திய டி.எஸ்.பி.. கரூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்புசெந்தில்பாலாஜியை நெஞ்சில் கை வைத்து நிறுத்திய டி.எஸ்.பி.. கரூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

    விக்கி டென்ஷன்

    விக்கி டென்ஷன்

    இந்த சம்பவம் குறித்து டிவிட்டரில் பதிவிட்ட நயனின் காதலன் விக்னேஷ் சிவன் நடிகர் ராதாரவியை வறுத்தெடுத்தார் அதோடு ராதாரவி பேசிய வீடியோவும் வைரலானது. வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் ராதாரவியை வறுத்தெடுக்க ஆரம்பித்தனர். கூடவே திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழிக்கும் வேண்டுகோள் விடுத்தும் விக்னேஷ் சிவன் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். மீ டூ இயக்கத்தை ராதாரவி இழிவான முறையிலும் உள்நோக்கத்துடனும் கிண்டல் செய்து வருகிறார்.

    கடும் கண்டனம்

    கடும் கண்டனம்

    பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை தூண்டும் ராதாரவி போன்ற ஆண்கள் புனிதப்படுத்தப் படுகிறார்கள். பொள்ளாச்சி விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், கனிமொழி எம்.பி ஆகியோர் குரல் கொடுத்தனர். இவர்கள் பெண்களுக்கு எதிராக செயல்படும் ராதாரவிக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தொனியில் ட்விட்டரில் பதிவொன்றை இட்டிருந்தார்.

    திமுக நடவடிக்கை

    திமுக நடவடிக்கை

    இதனையடுத்து பலரும் ராதாரவியை சமூக வலைதளங்களில் கழுவி கழுவி ஊற்றி வருகிறார்கள். திமுகவும் கட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட ராதாரவியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பதவியில் இருந்தும் தற்காலிகமாக நீக்கியுள்ளது.

    இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள ஸ்டாலினும் பெண்ணுரிமையை முன்னிறுத்தி வரும் திராவிட முன்னேற்ற கழகத்தில் அங்கம் வகிக்கும் நடிகர் ராதாரவி அவர்களின் திரைத்துறை சார்ந்த பெண் கலைஞர்கள் குறித்த கருத்தை ஏற்க இயலாது. இது கடும் கண்டனத்திற்குரியது. கழகத்தினர் யாவரும் கண்ணியம் குறையாத வகையில் கருத்துகளை தெரிவிக்க வேண்டும். மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    உதயநிதி மூலமாக

    உதயநிதி மூலமாக

    நடிகர் ராதாரவி திமுகவில் இருந்து நீக்கப்பட்டதன் பின்னணியில் நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் இருப்பதாக கூறப்படுகிறது. டிவிட்டரில் திமுக தலைவருக்கு வேண்டுகோள் விடுத்த விக்னேஷ் சிவன் உதயநிதி ஸ்டாலினை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். உதயநிதி ஸ்டாலினும் நயன்தாராவும் ஏற்கனவே நன்பேண்டா, இது கதிர்வேலன் காதல் போன்ற படங்களில் இணைந்து நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிட தக்கது. உதயநிதியிடம் பேசிய விக்னேஷ் சிவன் ராதாரவி மீது உடனடியாக நடவடிக்க எடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். திமுக நடவடிக்கை எடுக்க தயங்கினால் நயன்தாரா அதிமுக அணிக்கு பிரச்சாரம் செய்ய செல்வார் என்றும் கூறியதாக கூறுகிறார்கள் உள்விவரம் அறிந்தவர்கள்.

    உதயநிதி பரிந்துரை

    உதயநிதி பரிந்துரை

    இதனையடுத்து உதயநிதி ஸ்டாலின், அவரது தந்தை ஸ்டாலினிடம் பேசியுள்ளார். இந்த நிலையில் இதற்காகவா திமுகவில் நடவடிக்கை எடுத்தார்கள் என்று திமுக வட்டாரத்தில் விசாரித்தோம். அப்போது சில நாட்களுக்கு முன்னதாக சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும் நடிகருமான சரத்குமார் தனது கட்சி 40 தொகுதிகளிளும் தனியாக போட்டியிடப் போவதாக அறிவித்தார். இப்படியிருக்கையில் துணை முதல்வர் ஓபிஎஸ் சரத்குமாரோடு தொலைபேசியில் பேசியுள்ளார்.

    சரத்குமார், ராதாரவி

    சரத்குமார், ராதாரவி

    அப்போது சரத்தை நீங்கள் அதிமுகவோடு வந்து விடுங்க என்று கூறியுள்ளார். அந்த உரையாடலின்போது தனது நண்பரும் உறவினருமான ராதாரவியை பற்றியும் பேச்சு வந்துள்ளது. அவரும் திமுகவுக்கு தேர்தல் பணிகளில் பெரிய ஆர்வம் காட்டாமல் இருப்பது குறித்து சரத்குமார் குறிப்பிட்டுள்ளார். இதை கேட்ட ஓபிஎஸ் அப்படியானால் அவரையும் அழைத்து வந்து விடுங்கள் என்று கூறியுள்ளாராம்.

    முந்திக் கொண்ட திமுக

    முந்திக் கொண்ட திமுக

    நேற்று கொட்டிவாக்கத்தில் சரத்குமாரின் வீட்டுக்கே சென்று ஓபிஎஸ் சரத்தோடு பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். இந்த தகவல் அப்படியே ஸ்டாலின் காதுக்கு சென்றுள்ளது. இந்த தகவல் வந்ததுமே ராதாரவி அதிமுகவுக்கு போன பிறகு அவரை நீக்கம் செய்வதை விட நயன்தாரா விவகாரத்தை வைத்து நாமே நீக்கியது போல் இருக்கட்டும் என்று உடனடியாக முரசொலியில் செய்தி வெளியிட்டுள்ளனர்.


    ஆக, வெகு விரைவில் ராதாரவியை அதிமுக மேடைகளில் காணலாம். இந்நிலையில் ராதாரவி மீது நடவடிக்கை எடுத்ததற்காக நயன்தாரா திமுக தலைவருக்கு நன்றி கூறியுள்ளார்.

    English summary
    Sources say that Radharavi is planning to join ADMK soon.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X