சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வந்துடக் கூடாதுன்னு நினைக்கிறாங்க.. விஜய் வீட்டில் ரெய்டு ஏன்.. சீமான் பரபரப்பு குற்றச்சாட்டு

Google Oneindia Tamil News

சென்னை: நடிகர் விஜய்யை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகரின் வீட்டில் (ரஜினியை மறைமுகமாக குறிப்பிட்டு) வருமான வரித்துறை அதிகாரிகள் ஏன் சோதனை நடத்தவில்லை என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று சீமான் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தைப்பூசத்திற்கு பொது விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்தோம். அதை பரிசீலிப்பதாக கூறினார்.

தஞ்சை மாவட்டத்தை ஒருங்கிணைந்த பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைத்தோம்.. அதையும் பரிசீலிப்பதாக முதல்வர் தெரிவித்தார். இதையடுத்து அவரிடம் விஜய் வீட்டில் நடந்த ரெய்டு குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து சீமான் பேசுகையில்,

விஜய் வீட்டில் ரெய்டு.. எச். ராஜாவுக்கு செம ஹேப்பி போல.. வீரராச்சே என்று சீண்டி ஒரு டிவீட்! விஜய் வீட்டில் ரெய்டு.. எச். ராஜாவுக்கு செம ஹேப்பி போல.. வீரராச்சே என்று சீண்டி ஒரு டிவீட்!

ரஜினி வீட்டில்

ரஜினி வீட்டில்

"விஜய்யை விட அதிக சம்பளம் வாங்குற நடிகர் யார்ன்னு உங்களுக்குத் தெரியும். ஒரு படத்திற்கு மட்டும், ஜிஎஸ்டியுடன் சேர்த்து ரூ.126 கோடியை ஒருவர் சம்பளமாக வாங்கி உள்ளார்.. அடுத்த படத்துக்கும் வாங்கியிருக்கிறார். அவர் வீட்டுக்கு ஏன் வருமான வரித்துறை அதிகாரிகள் செல்லவில்லை? 66 லட்சம் வரி பாக்கி கட்டணும் என்று அந்த நடிகருக்கு இருந்தது. அதையும் வேண்டாம்னு சொல்லிட்டாங்க.

வட்டி தொழில்

வட்டி தொழில்

விஜய்யை இதன் மூலம் மிரட்டி அச்சப்படுத்த நினைக்கிறார்கள். இவர் நல்லவர், அவர் கெட்டவர் என்று நினைக்க வைக்கின்றார்கள் . வரி பாக்கி வைத்திருந்தவர், 3 ஆண்டுகள் எனக்குப் படவாய்ப்பில்லை என்றார். அவர் ஓய்வுக்காக நடிக்காமல் இருந்தாரா? பணத்தை வட்டிக்கு விட்டதாகத் தெரிவித்திருந்தாராம். 18% என்பது அநியாய வட்டியில்லையா? எனக்குத் தெரிந்து அன்புச்செழியன் இப்போது திரைப்படம் எடுக்க வட்டிக்குப் பணம் கொடுப்பதில்லை. நான் எடுக்கும் படத்திற்கு பணம் தரக் கேட்ட போது மறுத்து விட்டார்.

போட்டியே கூடாது

போட்டியே கூடாது

நடிகர் விஜய்க்கு அரசியலில் ஆர்வம் உள்ளது. அவருக்கு இளைஞர்கள், மக்களிடம் செல்வாக்கு உள்ளது. அவரை அச்சப்படுத்த நினைக்கிறார்கள். ஏனென்றால், அவர்கள் இறக்கிவிடும் ஆளுக்கு விஜய் போட்டியாக வந்து விடக்கூடாது என நினைக்கிறார்கள்" இவ்வாறு கூறினார்.

நம்பித்தானே ஆகணும்

நம்பித்தானே ஆகணும்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் யாருக்கும் பாதிப்பில்லை என ரஜினி கூறியிருக்கிறாரே? என்ற கேள்விக்கு பதில் அளித்த சீமான். அவர் சொன்னால் சரியாகத்தானே இருக்கும். நாம் நம்பித்தான் ஆக வேண்டும். இது முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல, மனித குலத்திற்கே எதிரானது. காடுகளில் வாழும் பழங்குடியினர் என்ன ஆவணங்களை வைத்திருப்பார்கள்? நாடு முழுவதும் உள்ள பிச்சைக்காரர்கள், சந்நியாசிகளிடம் ஆவணங்கள் எப்படி இருக்கும்? என்று கேள்வி எழுப்பினார்.

English summary
why raid in vijay house: naam tamilar party leader seeman accuses central govt, he ask why not raid in rajini house
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X