சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

செம ஃபார்ம்.. ரஜினி ஆலோசனைக்கு இதுதான் காரணமா.. 234 தொகுதிகளிலும்.. அதிரடி!

ரஜினி அரசியல் கட்சி ஆரம்பிக்க போவதாக தகவல்கள் கூறுகின்றன

Google Oneindia Tamil News

சென்னை: 234 தொகுதிகளிலும் ரஜினி ரத யாத்திரை மேற்கொள்ள போவதாக ஒரு தகவல் கசிந்து வருகிறது.. மன்ற நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தி முடித்துள்ள நிலையில், இப்படி ஒரு செய்தி தீயாக பரவி வருகிறது.

ரஜினிகாந்த் அரசியலை பொறுத்தவரை, அது முடிந்து போன ஒரு அத்தியாயம்.. மீண்டும் தலைநிமிரா வரலாறு.. எழுதப்படாத தேர்வு.. துவங்கப்படாமலேயே அஸ்தமனம்.. என்றெல்லாம் கருதப்பட்டு வருகிறது.

அதற்கேற்றபடி, சோஷியல் மீடியாவில் வலம் வந்த கடிதம் குறித்த ரஜினியின் விளக்கமும் ஏற்றுக் கொள்ளும்படியாகவே இருக்கவும், அரசியல் வருகை சூன்யமாகி போன ஒன்றாகவே முடிவு செய்யப்பட்டுவிட்டது.

தூத்துக்குடி சமூக விரோதிகள், யார் அந்த 7 பேர், பத்து பேரும் பலசாலியும்-சர்ச்சை நாயகனாக ரஜினிகாந்த் தூத்துக்குடி சமூக விரோதிகள், யார் அந்த 7 பேர், பத்து பேரும் பலசாலியும்-சர்ச்சை நாயகனாக ரஜினிகாந்த்

ஆலோசனை

ஆலோசனை

இப்படிப்பட்ட சூழலில்தான், ரஜினி தன்னுடைய ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை செய்கிறார் என்ற செய்தி நேற்றில் இருந்து சூடுபிடித்து கொண்டிருக்கிறது.. எதற்காக ரஜினி இந்த ஆலோசனை செய்ய வேண்டும்? ஒருவேளை கட்சி ஆரம்பிக்க போகிறாரா? அல்லது அரசியலே இல்லை என்று அறிவித்து விட்டு போகிறாரா என்று தெரியாமலேயே இந்த செய்தி சூடு பிடித்தது.

சாத்தியக்கூறு

சாத்தியக்கூறு

ஆனால், கட்சி ஆரம்பிக்க வாய்ப்பு முழுமையாக உள்ளதாகவே கருதப்படுகிறது.. அதற்கு 100 சதவீதம் சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் சொல்கிறார்கள்.. கொரோனா பரவல் காரணமாகவும், உடல் நலம் கருதியும், நடிகர் ரஜினி, அரசியல் கட்சி துவங்க மாட்டார் என்று நம்பியவர்களுக்கு எல்லாம் இந்த தகவல் அதிர்ச்சியை தந்து வருகிறது.

விளக்கம்

விளக்கம்

இதற்கு 3 காரணங்கள் உள்ளன... ஒன்று, கட்சி ஆரம்பிப்பது குறித்து ரசிகர்களுடன் கலந்து பேசி சொல்வேன் என்று ரஜினியே விளக்கி இருந்ததால், அதற்கான அறிகுறியின் முதல் குறியாகவே இன்றைய கூட்டம் இருக்கும் என்கிறார்கள்.

அமித்ஷா

அமித்ஷா

இரண்டாவதாக, அமித்ஷா வந்தபோது, ரஜினியுடன் எந்த சந்திப்பும் நடக்கவில்லை.. மாறாக, ரஜினி பண்ணை வீட்டில் ஜூரத்தில் இருப்பதாக போலியாக ஒரு செய்தி வந்து, அமித்ஷா சென்றவுடனேயே மறைந்தும் போனது.. ஆனால், குருமூர்த்திதான் அமித்ஷாவை சந்தித்து பேசியதன் அடிப்படை காரணியாக ரஜினியே இருப்பதாகவும் சொல்லப்பட்டது.. அதன்படி, ரஜினி அரசியல் வருகை குறித்து அமித்ஷாவுக்கு பாசிட்டிவ் சமிக்ஞை ஒன்று தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.. அதாவது பாஜகவுக்கு மறைமுகமாகவாவது ரஜினி உதவுவார் என்கிறார்கள்.

யாத்திரை

யாத்திரை

மூன்றாவதாக, இன்றைய ஆலோசனையை தொடர்ந்து 234 சட்டசபை தொகுதிகளிலும் ரத யாத்திரை நடத்தவும், ரஜினி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கட்சியை துவக்க முடிவெடுத்தால், 234 தொகுதிகளுக்கும், வேனில் ரத யாத்திரை செல்லவும் வாய்ப்புள்ளதாம். ஒருவேளை இதுதான் அவர் சொன்ன அந்த "ஆன்மீக அரசியலா" என்றும் தெரியவில்லை.

எல்.முருகன்

எல்.முருகன்

யாத்திரையை பொறுத்தவரை, ஏற்கனவே பாஜகவின் முருகன் கையில் எடுத்தது அந்த அளவுக்கு வெற்றியை தரவில்லை.. இந்து ஓட்டுக்களை அள்ளவே என்ற முத்திரை குத்தப்பட்டதே தவிர, அனைத்து தரப்பினராலும் அந்த யாத்திரை ஏற்றுக் கொள்ளப்படவும் இல்லை.. ஒருவேளை ரஜினி யாத்திரை மேற்கொண்டால், அது எல்லா தரப்பு மக்களாலும் ஈர்க்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

திமுக

திமுக

இதனிடையே, ரஜினியின் இன்றைய ஆலோசனை கூட்டம் குறித்து ஒருசில நடுநிலைவாதிகளிடம் பேசினோம்.. அவர்கள் சொன்னதாவது: "அநேகமாக ரஜினி கட்சி ஆரம்பிக்கவே கூடும் என்று தெரிகிறது.. பாஜக-அதிமுக கூட்டணி முடிவாகிவிட்ட நிலையில், ஒருவேளை ரஜினி கட்சி ஆரம்பித்தால், இந்த கூட்டணிக்கு வாய்ஸ் தர நிறையவே வாய்ப்பு உள்ளது.. ஏற்கனவே திமுக தரப்பில் அவருக்கு நிறைய அழுத்தங்கள் தரப்பட்டுள்ள நிலையில், ரஜினி திமுகவுக்கு எதிரான காய்களையும் நகர்த்தக்கூடும்.

கமல்

கமல்

நேற்றுகூட, "ஆள்பவர்கள் முதல் ஆள நினைப்பவர்கள் வரை கண்டு அஞ்சும், அரசியல் ஞானி ரஜினி" என்ற போஸ்டர் அறிவாயலம் முன்பு ஒட்டியிருக்கிறார்கள்.. அதனால் திமுகவே ரஜினியின் குறியாக இருக்கும்.. கமலை பொறுத்தவரை திமுக ஓட்டுக்களை ஓரளவு பிரிப்பார் என்றாலும், அதிமுக-பாஜக கூட்டணியுடன் ரஜினி இணையும்போது, திமுகவுக்கு நிச்சயம் ஒரு ஜெர்க்கை அது ஏற்படுத்தும். பாஜகவின் கணக்கும் திமுக என்பதால், அதை முறியடிக்க ரஜினியால்தான் முடியும் என்ற நம்பிக்கை இன்னும் குறையவில்லை.

புதிர்

புதிர்

ரஜினி இன்று என்ன முடிவு எடுக்க போகிறார் என்று தெரியவில்லை.. என்ன முடிவு எடுத்தாலும், அதை எப்படி செயல்படுத்துவார் என்றும் தெரியவில்லை.. ரஜினியை யாராலும் அவ்வளவு சீக்கிரம் புரிந்து கொள்ளவும் முடியாது.. எப்படி இருந்தாலும் ரஜினியின் "வாய்ஸ்" இந்த தேர்தலில் அறிவாலயத்துக்கு எதிராகவே எதிரொலிக்கும் என்று மட்டும் தெரிகிறது" என்றனர்.

English summary
Why Rajinikanth consulting District Secretaries
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X