சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆமா.. எப்பவுமே லேட்டாதானே ரஜினி கருத்து சொல்வார்.. இதில் மட்டும் மின்னல் வேகம் ஏன், எப்படி, எதற்கு??

Google Oneindia Tamil News

சென்னை: என்ன நடக்கிறது.. திமுகவும், ரஜினிகாந்த்தும் ஒன்று சேர போகிறார்களா? இப்படித்தான் கிளம்பியுள்ளது ஒரு டாக்.. எல்லாத்துக்கும் காரணம்.. ரஜினிகாந்த் சொன்ன அந்த ஒத்த வார்த்தை!

அவர் சொல்லி விட்டு போய் விட்டார்.. இப்போது ஆளாளுக்கு அதை வைத்து ஒவ்வொரு விதமாக அர்த்தம் கற்பித்துக் கொண்டு வருகிறார்கள். ரஜினியிடம் ஒரு விசேஷம் இருக்கிறது.. எப்போவாவதுதான் அவர் பேசுவார்.

சூடான பிரச்சினையாக இருந்தாலும் கூட அது ஆறி அவலாகிப் போன பிறகுதான் கமெண்ட் விடுவார்.. அது கொஞ்சம் வைரலாகும்.. அப்படியே அமைதியாகிப் போய் விடுவார்.. அடுத்த பிரச்சினை வரும்.. ஆனால் அவர் வர மாட்டார்.. லேட்டாதான் வருவார்.. அது வைரலாகும்.. இப்படியேதான் போய்க் கொண்டிருக்கிறது ரஜினியின் "அரசியல்".

ரஜினிகாந்த் வாழ்த்தால்...திமுகவுக்கு எந்த வரவும் இல்லை...ஆர்எஸ் பாரதி!! ரஜினிகாந்த் வாழ்த்தால்...திமுகவுக்கு எந்த வரவும் இல்லை...ஆர்எஸ் பாரதி!!

ரஜினி

ரஜினி

பாஜக தரப்பு ரஜினியை கூப்பிட்டு கொண்டுதான் இருக்கிறது. அமித்ஷா அழைத்துவிட்டார்.. தமிழிசையும் அழைப்பு விடுத்தார்.. பொன்.ராதாவும் கூப்பிட்டார்.. எச்.ராஜா இன்னமும் கூப்பிட்டு கொண்டேதான் இருக்கிறார்.. ஆனால் ரஜினி பக்கம் சத்தமே இல்லை. அவர் பாட்டுக்குத்தான் அமைதியாக இருக்கிறார்.

மா.செக்கள்

மா.செக்கள்

கடந்த ஏப்ரல் மாசமே கட்சியை ஆரம்பிக்க போவதாக தகவல்கள் வந்த நிலையில், இப்போது மறுபடியும் அந்த பேச்சு எழுந்து வருகிறது.. அன்று மா.செ.க்களுடன் ரஜினியே நேரடியாக பங்கேற்று பேசியபோது, அரசியல் குறித்த அவர்களின் கருத்தையும் கேட்டிருந்தார்.. "எப்படி இரு தேசிய கட்சிகளுடன் கூட்டணி இல்லையோ, அதுபோலவே திமுக, அதிமுகவுடனும் கூட்டணி இல்லை" என்று ரஜினி பேசியதாக தகவல்களும் வந்தன.

லீலா பேலஸ்

லீலா பேலஸ்

துக்ளக் விழாவில் சோ-வை பற்றி மட்டும் புகழ்ந்து பேசிவிட்டு வராமல் திமுகவை ஒரு வாரு வாரியிருந்தார்.. இன்னும் ஓபனாக சொல்லப்போனால் திமுக-வை இந்துக்களுக்கு எதிரான ஒரு கட்சியாகவே சித்தரித்து பேசியது போல இருந்தது.. அதே போல, லீலா பேலஸில் பேசும்போது ஸ்டாலின் மீதான காழ்ப்புணர்ச்சி நேரடியாகவே வெளிப்பட்டது.. வாழ்வா, சாவா என்ற கேள்வியை கேட்டு மிக மோசமாக ஸ்டாலினை அசிங்கப்படுத்தி கேள்வி எழுப்பியிருந்தார் ரஜினி.

சாணக்யா

சாணக்யா

இதோடு விட்டாரா என்றால் இல்லை.. சாணக்யா விழாவிலும் திமுகவை சாடியிருந்தார். இப்படி கடந்த சில மாதங்களாகவே திமுகவுடன் ரஜினிக்கு இருந்த அதிருப்தி அதிகமாகவே வெளிப்பட்டது.. "திமுகவை வீழ்த்த மாஸ் லீடர் நீங்கள்தான்" என்று சொல்லி இந்த லாக்டவுன் சமயத்தில், மிக முக்கியமான கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்தியதாகவும் சொல்லப்பட்டது.

சந்தேகங்கள்

சந்தேகங்கள்

இந்த நிலையில்தான் ரஜினி போட்ட ஒரு லேட்டஸ்ட் டிவீட் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.. கூடவே பல்வேறு சந்தேகங்களையும் சேர்த்து எழுப்பியிருக்கிறது. வழக்கமாக எந்த விஷயமாக இருந்தாலும் லேட்டாக கருத்து சொல்வதுதான் ரஜினியின் ஸ்டைல். அதை அவர் மறக்காமல் கடைப்பிடித்தும் வருகிறார். ஆனால் இந்த விஷயத்தில் எல்லோருக்கும் முந்தியாக, அதாவது சம்பந்தப்பட்டவர்களை விட படு வேகமாக அவர் கருத்து சொல்லியிருக்கிறார்.. இதுதான் சந்தேகங்களை கிளப்பியுள்ளது.

துரைமுருகன்

துரைமுருகன்

திமுக பொதுச் செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர். பாலு தேர்வானதையடுத்து ரஜினி படு வேகமாக இருவருக்கும் வாழ்த்து சொல்லி அசத்தியிருக்கிறார் ரஜினிகாந்த். என்ன காமெடின்னா.. திமுகவின் கூட்டணிக் கட்சிகளே வாழ்த்து சொல்ல அவசரப்படாத நிலையில் ரஜினி ஆளுக்கு முந்தியாக வாழ்த்து சொல்லி அதிர வைத்திருக்கிறார். இதுதான் பல்வேறு வகையான சந்தேகங்களை எழுப்பி விட்டது.

அரசியல் நாகரீகம்

அரசியல் நாகரீகம்

இதைத்தான்.. ரஜினி வாழ்த்து சொல்லி எங்களுக்கு எதுவும் ஆகப் போவதில்லை என்று சூடாக உணர்த்தியிருக்கிறார்.. அதாவது திமுகவுக்கே கூட ரஜினியின் வாழ்த்தில் சந்தேகம் வந்திருக்கிறது போலும். ரஜினி வாழ்த்தை முரசொலியில் கட்டம் கட்டிப் போட்டது, அரசியல் நாகரீகமாக கருதினாலும் கூட ரஜினி வாழ்த்தை திமுக ஒரு பொருட்டாக கூட எடுக்கவில்லை என்பதே ஆர்.எஸ். பாரதியின் பேச்சு உணர்த்தும் உண்மையாக தெரிகிறது.

என்ன காரணம்?

என்ன காரணம்?

ரஜினி ஏன் படு வேகமாக வாழ்த்து தெரிவித்தார் என்று தெரியவில்லை. மூத்த கட்சியின் மூத்த தலைவர்கள்.. அதிலும் திமுக என்ற மாபெரும் இயக்கத்தின் பொதுச் செயலாளராக துரைமுருகன் வருகிறார் என்பதால் வாழ்த்து தெரிவித்திருக்கலாம் அல்லது.. வேறு என்ன காரணம் என்று தெரியவில்லை. ரஜினி வாழ்த்து சொன்ன பிறகுதான் காங்கிரஸே வாழ்த்து தெரிவித்தது.. மறுபக்கம் என்னவென்றால் துரைமுருகனுக்கு மட்டும் தொலைபேசியில் மு.க.அழகிரி வாழ்த்து சொன்னதாக ஒரு தகவல் வெளியானது. அவர் டி.ஆர்.பாலுவை தொடர்பு கொள்ளவில்லை என்றும் சொல்கிறார்கள். இது உண்மையா பொய்யா என்றும் தெரியவில்லை.

Recommended Video

    SPB உடல்நிலையில் முன்னேற்றம் • SP Charan
    யூகங்கள்

    யூகங்கள்

    ஆக, ரஜினி பகிரங்கமாக வாழ்த்துகிறார்.. ரஜினியுடன் நெருக்கமாக இருப்பவராக அறியப்படும் மு.க.அழகிரி தொலைபேசியில் வாழ்த்துகிறார் என்று அடுத்தடுத்து வந்த செய்திகளால் அரசியல் அரங்கில் பல்வேறு கேள்விகள் எழுந்து விட்டன.. இது இயல்பானதுதான். ரஜினி, அழகிரி வாழ்த்துகள் திட்டமிட்டதா அல்லது எதார்த்தமானதா என்பதும் விவாதத்துக்குரியதே. இதை வைத்து இப்போது காது மூக்கு பொருத்தி உருவகப்படுத்த ஆரம்பித்து விட்டனர் சிலர்.. ஆனால் ஆர்.எஸ். பாரதியின் கமெண்ட்.. அந்த மெனக்கெடல் தேவையில்லை.. ரஜினி வாழ்த்துக்கு எங்களது கருத்து இதுதான் என்ற பதிலைக் கொடுத்து விட்டது.

    தேர்தல் நெருங்க நெருங்க இதுபோல நிறைய "குப்பாச்சு குழப்பாச்சு" வேலைகள் நடக்கலாம் போலத் தெரிகிறது!

    English summary
    Why Rajinikanth wishes Duraimurugan and TR Balu immediately
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X