• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

யூடியூப் முழுக்க "ரித்து" பற்றிதான் பேச்சு.. ஒரே நாளில் உலக புகழ்.. யார் இந்த 7 வயசு கோவை சிறுவன்?

Google Oneindia Tamil News

சென்னை: சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார் ஒரு "பொடியர்" வயசு 7தான். ஆனால் இன்றைக்கு நிலவரத்தில் இவர்தான் இன்டர்நெட் சென்சேஷன்.

  Breaking News-ஐ கலாய்த்து தள்ளிய News Reader Rithu Interview | Rithvik | Oneindia Tamil

  பார்க்க க்யூட்டாக, இருக்கும் இந்த சிறுவன் பெயர் ரித்விக். கோவைதான் சிறுவனின் ஊர். ரித்து ராக்ஸ் என்ற பெயரில் இந்த குட்டிப் பையனுக்கு ஒரு யூடியூப் சேனலும் இருக்கிறது.

  டிஎன்பிஎஸ்சி-க்கு 4 புதிய உறுப்பினர்கள் நியமனம்.. 6 ஆண்டுகள் பதவியில் இருப்பார்கள் என அறிவிப்புடிஎன்பிஎஸ்சி-க்கு 4 புதிய உறுப்பினர்கள் நியமனம்.. 6 ஆண்டுகள் பதவியில் இருப்பார்கள் என அறிவிப்பு

  பாவைக்காய் பொரியல் செய்வது எப்படி, வெண்டைக்காயில் விளக்கெண்ணை தடவுவது எப்படி என்று சமையல் செய்து யூடியூப்பில் போடுவது போன்ற சேனல் இல்லை இது. வித்தியாசமாக எதையாவது யோசித்து வீடியோ போடுகிறார்கள்.

   1 லட்சம் சப்ஸ்கிரைபர்கள்

  1 லட்சம் சப்ஸ்கிரைபர்கள்

  இதுவரை 8 வீடியோக்கள்தான் போட்டுள்ள இந்த சேனலில் சப்ஸ்கிரைபர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்கப்போகிறது. இன்று காலை நிலவரப்படி 86 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சப்ஸ்கிரைபர்கள் ரித்து ராக்ஸ் சேனலுக்கு உள்ளனர். காஞ்சனா படத்தை ஃபன் செய்வது, சிட்டி பையன் vs கிராமத்து பையன் என பல ஆங்கிள்களில் யோசித்து, அதை சிறப்பாக நடித்து வீடியோவாக போட்டுள்ளார் ரித்விக்.

   பல கெட்அப் சேஞ்ச்

  பல கெட்அப் சேஞ்ச்

  7 வயசில் இப்படி ஒரு ஆக்டிங் திறமையா என்று ஆச்சரியப்படும் அளவுக்கு இருக்கிறது ரித்விக் நடிப்பு. சும்மா நடித்தால் கூட பரவாயில்லை. பல கெட்அப்களில் வந்து கலக்குகிறார். வயதான தோற்றமும் பொருந்துகிறது, அதைவிட பெண் குழந்தை வேடமும் பக்காவாக பொருந்துகிறது இந்த சிறுவனுக்கு.

  செம வரவேற்பு

  இதற்கு முன்பு நகரம் மற்றும் கிராமம் என்ற தலைப்பில் போட்ட வீடியோ 1 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது. மற்ற வீடியோக்களும் பல ஆயிரங்களை தொட்டுள்ளது. இதில் லேட்டஸ்டாக அவர் அப்லோடு செய்த பிரேக்கிங் நியூஸ்-ரிப்போர்டர்ஸ் கலாட்டா என்ற வீடியோ 4 நாட்களில் சுமார் 2.5 லட்சம் பார்வையாளர்களை ரீச் செய்துள்ளது. குறும்பு, யதார்த்தம், அழகான தமிழ் உச்சரிப்பு என இந்த வீடியோவில், கலவை கட்டி கலக்கியுள்ளார் அந்த சிறுவன்.

  சின்ன டீம்

  சின்ன டீம்

  இத்தனைக்கும் பெரிய தொழில்நுட்பம் கொண்ட டீம் இவர்கள் பின்னாடி இல்லை. ரித்விக் நடிப்பார், அவரது தந்தை மற்றும் தாய் இருவரும்தான், எடிட்டிங் உள்ளிட்ட வேலைகளை செய்து அப்லோடு செய்கிறார்கள். கான்செப்ட் யோசனையில் எல்லோரும் பங்கெடுக்கிறார்களாம். மேக்அப்பில் அவரது அம்மாதான் முக்கியமாக பங்கெடுக்கிறார்.

   குட்டிப் பையன்கள் கலக்கல்

  குட்டிப் பையன்கள் கலக்கல்

  உலக அளவிலும் குட்டிப் பையன்கள், சுட்டி வேலை பார்த்து யூடியூப்பில் பிரபலமாகியுள்ளார்கள். 9 வயது யூடியூபர் ரியான் காஜி (Ryan Kaji) என்ற சிறுவனின் யூடியூப் சேனலுக்கு 12 பில்லியனுக்கும் அதிகமான பார்வைகள் (views) மற்றும் 27 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். இந்த குட்டிப்பையன் 2020 ஜூன் 1ம் தேதி வரையிலான நிலவரப்படி, யூடியூபில் அதிக சம்பளம் வாங்கும் யூடியூப் நட்சத்திரமாக உருவெடுத்ததாக குறிப்பிட்டது ஃபோர்ப்ஸ் இதழ். புது பொம்மைகளை ரிவ்யூ செய்யும் வீடியோக்களை அப்லோடு செய்து இவ்வளவு வருமானம் ஈட்டுகிறார் அந்த சிறுவன். மாற்றி யோசித்தால் சக்சஸ் நிச்சயம் என்பதற்கு இதுபோன்ற சிறுவர்கள் பெரியவர்களுக்கு வழிகாட்டுகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

  English summary
  Rithu rocks rithvik: Rithu Rocks Youtube channel is become famous suddenly among net users, a small boy acting in many get ups. Why the video is become so popular? here is the reason.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X