சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சரத்குமார்- பாரிவேந்தரின் புதிய கூட்டணி.. பின்னணி என்ன?.. மதியாதார் வாசல் மிதியார்தான் காரணமா?

Google Oneindia Tamil News

சென்னை: சரத்குமார்- பாரிவேந்தர் அமைத்துள்ள புதிய கூட்டணி மதியாதார் வாசல் மிதியார் என்ற பழமொழியை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது. இதை சரத்குமாரே தெரிவித்தும் விட்டார்.

Recommended Video

    சென்னை: கமலை திடீரென சந்தித்தது ஏன்…? விஷயத்தை விளக்கிய சரத்குமார்!

    தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என அதிமுக, திமுக மநீம, நாம் தமிழர், அமமுக உள்ளிட்ட கட்சிகள் வியூகம் அமைத்து பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்த நிலையில் தமிழக அரசியலில் திடீர் திருப்பமாக அதிமுக கூட்டணியிலிருந்து சரத்குமாரும், திமுக கூட்டணியிலிருந்து பாரிவேந்தரும் வெளியேறி புதிய கூட்டணியை அமைத்தார்கள், இன்னும் வலுவான கட்சிகள் இணைந்தால் இது கிட்டத்தட்ட மூன்றாவது அணியாகவே இருக்க வாய்ப்புள்ளது. 10 ஆண்டுகளாக அதிமுகவுடன் பயணித்து வரும் சரத்குமார் அக்கூட்டணியிலிருந்து திடீரென விலக காரணம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.

    கமல்ஹாசன் செய்தியாளர் சந்திப்பு:சக்கர நாற்காலி' சர்ச்சைக்கு விளக்கம் - மநீம கூட்டணியில் சரத்குமார் கமல்ஹாசன் செய்தியாளர் சந்திப்பு:சக்கர நாற்காலி' சர்ச்சைக்கு விளக்கம் - மநீம கூட்டணியில் சரத்குமார்

    மனப்போக்கு

    மனப்போக்கு

    தேர்தல் தேதி அறிவித்தவுடன் பொதுவாக அதிமுக, திமுக போன்ற கட்சிகள் தங்களுடன் உள்ள பெரிய கட்சிகளை கூட்டணியில் வளைக்க பார்க்கும். தொகுதி பங்கீடு, சீட்டுகளின் எண்ணிக்கை, தொகுதி நிலவரம் இவற்றை பேசி முடித்துவிட்டே சிறிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும். சில நேரம் சிறிய கட்சிகளை கடைசி நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்ற மனப்போக்கில் இருக்கும்.

    காத்திருக்க வேண்டுமா

    காத்திருக்க வேண்டுமா

    ஏதோ ஓரிரு சீட்டுகளை கொடுக்கலாம் என நினைக்கும். ஆனால் சிறிய கட்சிகளுக்கு இது கவுரவப்பிரச்சினையாகவே இருக்கும். ஓரிரு சீட்டுகளுக்காக காத்திருக்க வேண்டுமா என்ற கருதத் தொடங்கும். இதனால் சிறிய கட்சிகள் அந்த கூட்டணியிலிருந்து வெளியேற முடிவு செய்யும், அதைத்தான் சரத்குமாரும் பாரிவேந்தரும் செய்துள்ளார்கள்.

    கமல்ஹாசன்

    கமல்ஹாசன்

    இவர்கள் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை சேர்ந்து சந்தித்துள்ளார்கள். இதனால் மநீம தலைமையில் புதிய அணி அமைய வாய்ப்பிருக்கிறது. இதில் இரு தரப்பும் கணிசமான தொகுதிகளை கேட்டுப் பெற முடியும். அதிருப்தியில் உள்ள கட்சிகள் மநீம அணியில் ஒன்று திரளும். அது போல் அமமுகவும் மற்றொரு அணியாகவே செயல்படும்.

    ஓட்டு பிரிப்பு

    ஓட்டு பிரிப்பு

    இந்த இரு அணிகளும் இணைந்து ஓட்டுகளை பிரிக்கும் பணியில் ஈடுபடும். எனவே இந்த புதிய இருகூட்டணிகளால் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி ஆகியவற்றில் எந்த கூட்டணிக்கு இது பெரும் குடைச்சலாக இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதுவரை கட்சித் தாவல்கள் எல்லாம் அரசியலில் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கும்.

    English summary
    Why Sarathkumar and Pachamuthu left from AIADMK and DMK alliance? Here are the reasons.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X