சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இவங்க 2 பேருமா? அதுவும் தோனி பற்றி கமெண்டா?.. நம்ப முடியலையே.. எதிர்பார்க்காத மாற்றம்!

Google Oneindia Tamil News

சென்னை: தோனி குறித்து ஹர்பஜன் மற்றும் சேவாக் இருவரும் செய்திருக்கும் கமெண்ட் வைரலாகி வருகிறது. 2021 ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

மும்பைக்கு எதிரான இரண்டாவது லீக் ஆட்டத்தில் சென்னை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 156 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்கு 136 ரன்கள் எடுத்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் சிஎஸ்கே அணி மிக மோசமான நிலையில் தோல்வி அடையும் என்றே கருதப்பட்டது.

ஆனால் தோனியின் சிறப்பான கேப்டன்சி காரணமாகவும், ஓவர் ரொட்டேஷன் மற்றும் பீல்டிங் செட்டப் காரணமாகவும் சிஎஸ்கே வெற்றிபெற்றது. சிஎஸ்கேவின் வெற்றி காரணமாக தோனியின் கேப்டன்சியை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப தடை.. தாலிபான்கள் போட்ட திடீர் உத்தரவு.. காரணம் கேட்டால் பெரிய ஷாக்ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப தடை.. தாலிபான்கள் போட்ட திடீர் உத்தரவு.. காரணம் கேட்டால் பெரிய ஷாக்

சேவாக் பாராட்டு

சேவாக் பாராட்டு

முக்கியமாக தோனியை பாராட்டி சேவாக் கருத்து தெரிவித்துள்ளார். தோனியின் கேப்டன்சியை பாராட்டிய சேவாக்.. தோனி சிறப்பாக திட்டங்களை வகுத்தார். அவரின் கேப்டன்சி கொஞ்சம் கூட எதிர்ப்பார்க்காத அளவிற்கு இருந்தது. அவர் ஆட்டத்திற்கு முன் பிளான் செய்ததை விட ஆட்டத்தின் போதுதான் புதிய திட்டங்களை வகுத்தினார். நிலைமைக்கு தகுந்தபடி அவர் திட்டங்களை வகுக்கிறார்.

திட்டம்

திட்டம்

ஆட்டம் கைவிட்டு போகும் போதும் அவர் சிறப்பாக திட்டங்களை வகுத்து போட்டியை மாற்றுகிறார். முக்கியமாக இருக்கிற பவுலர்களை தோனி சிறப்பாக பயன்படுத்துகிறார். முக்கியமாக இஷான் கிஷானுக்கு பிராவோ பவுலிங் செய்த போது செய்யப்பட்ட பீல்டிங் செட்டப் மிகவும் சிறப்பாக இருந்தது. யாருக்காவது இந்த தொடரில் மிகவும் ஷார்ப் மூளை இருக்கிறது என்றால் அது கண்டிப்பாக தோனி என்று நான் அடித்து கூறுவேன் என்று சேவாக் பாராட்டி உள்ளார்.

Recommended Video

    Dhoniயின் வெறித்தனமான Net Practice Session | IPL 2021 | CSK | OneIndia Tamil
    ஹர்பஜன்

    ஹர்பஜன்

    அதேபோல் தற்போது கொல்கத்தா அணியில் இருக்கும் ஹர்பஜன் சிங்கும் தோனியை பாராட்டி உள்ளார். சிஎஸ்கே அணியை எதிர்கொள்வது மிகவும் கடினம். அந்த அணியை எதிர்கொள்ள தனி திட்டங்களை வகுக்க வேண்டும். நாங்கள் ஒரு சாம்பியன் போல ஆடினால் மட்டுமே சிஎஸ்கேவை வெற்றிபெற முடியும். தோனியின் கேப்டன்சிக்கு எதிராக திட்டம் வகுப்பது கடினம். தோனி இந்த முறை கண்டிப்பாக கோப்பை வெல்ல முயற்சி செய்வார். கடைசி சீசனாக அவருக்கு இது இருக்கும் என்பதால் கோப்பை மீது குறி வைப்பார். இதனால் சென்னையை எதிர்கொள்வது கடினம் என்று ஹர்பஜன் குறிப்பிட்டுள்ளார். இரண்டு பேருமே தோனியை பாராட்டியது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பாராட்டு ஏன்?

    பாராட்டு ஏன்?

    பொதுவாக சேவாக், தோனி என்று வந்தால் கடுமையாக கமெண்ட் செய்வது வழக்கம். உலகக் கோப்பை 50 ஓவர் போட்டிகளில் தோனி பேட்டிங் சரியாக இல்லாத போது அதை சேவாக்தான் கடுமையாக அதை விமர்சனம் செய்து இருந்தார். தோனியின் பேட்டிங்கில் இன்டென்ட் இல்லை. அவர் டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடுகிறார் என்று சேவாக் கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். அதோடு கடந்த ஐபிஎல் சீசனிலும் தோனியின் பேட்டிங்கையும், கேப்டன்சியையும் சேவாக் கடுமையாக சாடி இருந்தார்.

    விமர்சனம்

    விமர்சனம்

    ஒரு போட்டியில் தோனி துபாய் வெயில் காரணமாக ஓட முடியாமல் திணறினார். இதை சேவாக் கிண்டல் செய்து இருந்தார். அதோடு தோனியின் பேட்டிங் ஆர்டர் தொடங்கி அவர் கீப்பிங் செய்யும் விதம், பவுலிங் ரொட்டேஷன் செய்யும் விதம், அவரின் வயது உட்பட பலவற்றை விமர்சனம் செய்து இருந்தார். இன்னொரு பக்கம் ஹர்பஜன் சிங்கும் தோனியை சில இடங்களில் மறைமுகமாக விமர்சனம் செய்தார்.

    மோதல்

    மோதல்

    தோனி துபாயில் ஓட முடியாமல் திணறியதை இர்பான் பதான், தோனிக்கு வயதாகிவிட்டது என்று கிண்டல் அடித்தார். அதை ஹர்பஜன் வழி மொழிந்து ட்வீட் செய்தார். தோனியைத்தான் பதான் கிண்டல் செய்கிறார் என்று தெரிந்தும் ஹர்பஜன் அதை ஆதரித்து பேசினார். சேவாக், ஹர்பஜன் உள்ளிட்ட சீனியர்கள் ஓய்விற்கு காரணம் தோனி என்று கூறப்பட்ட நிலையில் இருவருமே தோனியை கடுமையாக விமர்சித்து வந்து இருக்கிறார்கள்.

    திடீர் என்று பாராட்டு

    திடீர் என்று பாராட்டு

    ஆனால் இப்போது திடீரென இரண்டு பேருமே தோனியை பாராட்டி உள்ளனர். திடீர் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. தோனி மீண்டும் பிசிசிஐ மூலம் மீண்டும் கவனத்திற்கு உள்ளாகி இருக்கிறார். இந்திய டி 20 உலகக் கோப்பை அணியின் ஆலோசகராக தேர்வாகி உள்ளார். இப்படிப்பட்ட நேரத்தில் திடீரென தோனியை புகழ்ந்து இருவரும் பேசி உள்ளது கவனம் பெற்றுள்ளது. அதுவும் சேவாக் தோனியின் கேப்டன்சியை பாராட்டி இருப்பது வைரலாகி வருகிறது.

    English summary
    Why Sehwag and Harbhajan Singh praising CSK captain Dhoni all of a sudden?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X