சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரே ஒரு விளம்பரம்.. கடும் எதிர்ப்புகளை சந்திக்கும் சர்ப் எக்சல்.. ஏன் இந்த பிரச்சனை.. பின்னணி என்ன?

பிரபல சோப் நிறுவனமான சர்ப் எக்சல் நிறுவனம் வெளியிட்ட ஒரு விளம்பரம் இந்தியா முழுக்க வைரலாகி உள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: பிரபல சோப் நிறுவனமான சர்ப் எக்சல் நிறுவனம் வெளியிட்ட ஒரு விளம்பரம் இந்தியா முழுக்க வைரலாகி உள்ளது. இந்த விளம்பரத்திற்கு நிறைய பேர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இந்துக்கள் - இஸ்லாமியர்கள் இடையிலான மனக்கசப்பு எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த வருடம்தான் மிக அதிகமாக இருக்கிறது. பாகிஸ்தான் மீதான கோபம், இந்தியாவில் இருக்கும் முஸ்லீம்களையும் பாதிப்பிற்கு உள்ளாக்கி இருக்கிறது.

இந்த நேரத்தில்தான் சர்ப் எக்சல் அந்த விளம்பரத்தை வெளியிட்டது. இந்துஸ்தான் யூனிலிவர் நிறுவனத்திற்கு சொந்தமானது சர்ப் எக்சல் நிறுவனம். இந்து இஸ்லாமியர்கள் ஒற்றுமை கருதி அந்த வீடியோவை சர்ப் எக்சல் நிறுவனம் வெளியிட்டது.

அட முதல் நாளே டிரெண்டான டார்ச் லைட்.. கொண்டாடும் மநீம தொண்டர்கள்..கிண்டலுக்கும் குறைவில்லை! அட முதல் நாளே டிரெண்டான டார்ச் லைட்.. கொண்டாடும் மநீம தொண்டர்கள்..கிண்டலுக்கும் குறைவில்லை!

என்ன விளம்பரம்

என்ன விளம்பரம்

வண்ணங்கள் மக்களை இணைக்கிறது என்ற பெயரில் (Rang Laaye Sang) இந்தியில் அந்த வீடியோ எடுக்கப்பட்டு இருந்தது. ஒன்றுமில்லை, ஹோலி பண்டிகையின் போது இந்து சிறுமி ஒருத்தி இஸ்லாமிய சிறுவனை எப்படி தொழுகை செய்ய அழைத்து செல்கிறாள். வண்ணப்பொடிகள் அந்த இஸ்லாமிய சிறுவனின் உடையில் படாமல் எப்படி பாதுகாக்கிறாள் என்பதே இதன் கரு.

நன்றாக இருக்கும்

இந்த கருவை சிறுவர்களை வைத்து மிக அழகாக படம் பிடித்து இருந்தனர். ஹோலி பண்டிகை எவ்வளவு வண்ணமயமானது, எவ்வளவு அழகானது, கொண்டாட்டமானது என்று காட்டி இருப்பார்கள். அதேபோல் அந்த இஸ்லாமிய சிறுவனை இந்துப்பெண் அழைத்து செல்வதை வைத்து மத நல்லிணக்கம் எவ்வளவு முக்கியம் என்பதை மிக அருமையாக காட்டி இருப்பார்கள்.

என்ன பிரச்சனை

என்ன பிரச்சனை

ஆனால் இந்த வீடியோ சிலருக்கு மட்டும் பிடிக்கவில்லை. தொழுகை முக்கியமா, ஹோலி முக்கியமா, இது இஸ்லாமியர்களுக்கு ஆதரவான வீடியோ, ஹோலியை இது கிண்டல் செய்கிறது என்றெல்லாம் வைத்து இது குறித்து கமெண்ட் செய்ய தொடங்கினார்கள். இதனால் இணையம் முழுக்க இந்த வீடியோ வைரலானது.

பாஜக என்ன செய்தது

பாஜக என்ன செய்தது

பாஜகவினர் பலர் சர்ப் எக்சல் குறித்து டிவிட் செய்தனர். சர்ப் எக்சல் பொருட்களை வாங்க கூடாது. அவர்களின் நிறுவன பங்குகளை வாங்குவது தவறு என்று டிவிட் செய்து வந்தனர். இதற்கு போட்டியாக மற்றவர்கள் சர்ப் எக்சல் நிறுவனம் செய்தது சரிதான். இதுதான் நாட்டுக்கு தேவை என்று டிவிட் செய்தனர்.

விளக்கம் இல்லை

விளக்கம் இல்லை

இந்த விளம்பரம் மிக அதிகம் பார்க்கப்பட்ட விளம்பரங்களில் ஒன்றாக மாறியுள்ளது. இதற்கு ஆதரவாக குரல்கள் வர தொடங்கி இருக்கிறது. அதனால் இந்த வீடியோவை சர்ப் எக்சல் நிறுவனம் நீக்குவதற்கு வழியில்லை, ஆனால் இதுகுறித்து விளக்கம் அளிக்க வாய்ப்புள்ளது என்று தகவல்கள் வருகிறது.

English summary
Here is the real reason Why Surf Excel is trending on Twitter?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X