• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

"அமாவாசை கால் இடிக்குது".. தடதடக்க வைத்த அரசியல் படங்கள்.. ஒரு அலசல்!

|

சென்னை : தமிழ் சினிமாவில் பராசக்தி படம் துவங்கி லேட்டஸ்டாக வந்த படங்கள் வரை பலவற்றிலும் தற்கால அரசியலை நேரடியாகவும், மறைமுகமாகவும் தாக்கும் வசனங்கள் அதிகம் இடம்பெற்றுள்ளன. தமிழகத்தில் திராவிட கட்சிகள் மிகப் பெரிய சக்தியாக வளர்ச்சி அடைந்ததற்கு சினிமா ஒரு முக்கிய காரணம் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு சினிமாவில் அரசியல் அமற்றும் ரசியல்வாதிகளின் தாக்கம் அதிகம் இருந்துள்ளது. கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா என 3 முதல்வர்களை தமிழகத்திற்கு தந்தது சினிமா தான்.

கிட்டதட்ட 60 வருட தமிழக அரசியல் வரலாற்றில், 40 ஆண்டுகள் தமிழ் சினிமாவை சேர்ந்தவர்கள் தான் தமிழகத்தை ஆண்டுள்ளனர். ஆளும் கட்சியினரையும், அரசியல்வாதிகளையும் கடுமையாக தாக்கி பல சினிமாக்களில் பல வசனங்கள், பாடல்கள் இடம்பெற்றள்ளன. இதனால் பல படங்கள் வெளியே வர முடியாத அளவிற்கு பல நெருக்கடிகளை சந்தித்துள்ளன. சில படங்களில் அரசியல் தலைவர்களை நேரடியாக தாக்கும் வசனங்கள் சென்சாரில் நீக்கப்பட்ட பிறகே திரைக்கு வந்துள்ளன.

சமீப காலமாக அரசியல், சாதிய பிரச்னைகளை பேசும் படங்கள் தமிழில் அதிகம் வெளி வந்து கொண்டிருக்கின்றன. தற்போது எடுக்கப்பட்டும் வருகின்றன. இவற்றில் பல படங்கள் மிகப் பெரிய அளவில் ஹிட்டாகி உள்ளன. சில படங்களும், அதில் வரும் கேரக்டர்கள் பேசும் வசனங்களும் சமூகத்தில் பெரிய அளவில் பேசப்பட்டு, கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன.

 அரசியல் பேசிய தமிழ் சினிமாக்கள்

அரசியல் பேசிய தமிழ் சினிமாக்கள்

இருவர், மக்களாட்சி, அமைதிப்படை, முதல்வன், சர்க்கார், உரியடி, என்ஜிகே, நோட்டா, கோ, கோ 2, எல்கேஜி, தலைவி, தலைவா உள்ளிட்ட பல படங்கள் அரசியலையும், அரசியல் தலைவர்களையும் மையமாக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் அமைதிப்படை அரசியல்வாதிகளை கலாய்க்கும் நையாண்டி படமாகவும், முதல்வன் அரசியல் தலைவர்களை கேள்வி கேட்கும் படமாகவும் அமைந்தன. உரியடி படம் ஸ்டெர்லைட் பிரச்சனையை பேசுவதாக அமைந்தது. 2 ஆண்டுகளுக்கு முன் அஜித் நடித்து வெளிவந்த, நேர் கொண்ட பார்வை படம் இந்தியில் ரிலீசான பிங்க் படத்தின் ரீமேக்காக இருந்தாலும் பொள்ளாச்சி விவகாரத்தை பேசும் படமாக அமைந்தது.

சினிமாவை பயன்படுத்திய ஹீரோக்கள்

சினிமாவை பயன்படுத்திய ஹீரோக்கள்

எம்ஜிஆர் அரசியலில் அடியெடுத்து வைத்த காலத்தில், தான் சார்ந்த கட்சியின் கொள்கைகளை மக்களிடம் பரப்பவும், தன்னை ஒரு தலைவராக மக்களிடம் கொண்டு செல்ல தான் நடிக்கும் படத்தில் வரும் பாடல்கள், வசனங்கள், சினிமாவில் தனக்கு இருக்கும் புகழ் ஆகியவற்றை பயன்படுத்திக் கொண்டார். அதற்க பிறகு ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய் என பலரும் தங்கள் படங்களில் நடப்பு அரசிலை கடுமையாக விமர்சிக்கும் பஞ்ச் டயலாக்குகளை பேச துவங்கினர். சினிமா மட்டுமின்றி சினிமா நிகழ்ச்சிகளின் மேடைகளிலும் ரஜினி, விஜய் போன்றோர் பேசிய வசனங்கள் அவர்கள் அரசியலுக்கு வர போவதாக மறைமகமாக அறிவிப்பதாக அமைந்தன.

யு டர்ன் அடித்த நடிகர்கள்

யு டர்ன் அடித்த நடிகர்கள்

ஜெயலலிதா ஆட்சியில் இருந்த காலத்திலேயே அவரை எதிர்த்து பல பேட்டிகளை, அறிக்கைகளை வெளியிட்டவர் ரஜினி. இதனால் அவர் எப்போது அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமின்றி, பலருக்கு வர துவங்கியது. கிட்டதட்ட 1990 களில் இருந்தே இந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ஆனால் இத்தனை ஆண்டுகள் மழுப்பி வந்த ரஜினி, 2020 டிசம்பரில் கட்சி துவங்க போவதை அறிவித்தார். ஆனால் 2021 ஜனவரியிலேயே அந்த முடிவை கைவிடுவதாக அறிவித்து, நடிக்க போய் விட்டார். தலைவா படத்திற்கு பிறகு விஜய் அரசியலுக்கு வர போவதாக அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் கூறி வருகிறார். 2021 சட்டசபை தேர்தலுக்கு முன் விஜய் தனிக்கட்சி துவங்குவார் என கூறப்பட்டது. ஆனால் இதுவரை அது பற்றி விஜய் வாய்திறக்காமல் உள்ளார்.

துணிந்து களமிறங்கிய டைரக்டர்கள்

துணிந்து களமிறங்கிய டைரக்டர்கள்

விஜயகாந்த், சரத்குமார், கமல் போன்றோர் சினிமாவில் பஞ்ச் டயலாக் பேசியதுடன் விடாமல் கட்சி துவங்கி, அரசியலில் களமிறங்கினர். நமக்கேன் வம்பு பல முன்னணி நடிகர்கள், நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வந்தாலும், டைரக்டர்கள் பலர் துணிச்சலாக அரசியல், சமூக பிரச்னைகளை மையமாக கொண்ட படங்களை எடுக்க துவங்கி உள்ளனர். பா.ரஞ்சித், ராஜு முருகன் போன்ற டைரக்டர்கள் அரசியலுக்காக சாதிகளை அரசியல்வாதிகள் எவ்வாறு பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை கடுமையாக விமர்சிக்கும் படங்களை எடுத்து வருகின்றனர். காலா, ஜிப்சி போன்ற படங்கள் இந்த வரிசையில் குறிப்பிடத்தக்கவை.

நேரடி அரசியல் பேசும் லேட்டஸ்ட் படங்கள்

நேரடி அரசியல் பேசும் லேட்டஸ்ட் படங்கள்

பெரிய டைரக்டர்கள் மட்டுமின்றி சிறிய டைரக்டர்களும் நேரடி அரசியல் மற்றும் அரசியல்வாதிகளை தாக்கும் படங்களை எடுக்க துவங்கி உள்ளனர். பலர் இதில் வெற்றியும் கண்டு வருகின்றனர். அந்த வரிசையில் லேட்டஸ்டாக இருப்பது மாநாடு, தலைவி, கொலைகாரன் ஆகியன. இதே போல் சர்க்கார், நோட்டா, என்ஜிகே போன்ற படங்கள் தேர்தல் சமயத்தில் வெளியிடப்பட்டு, பெரும் பரபரப்பை கிளப்பின. ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் இந்தியன் 2 படமும் தற்கால அரசியலை கடுமையாக தாக்கும் படம் என்றே கூறப்படுகிறது.

அதிக அரசியல் படங்கள் வர காரணம்

அதிக அரசியல் படங்கள் வர காரணம்

அரசியல், சமூக பிரச்னை என எதுவானாலும் அது தொடர்பாக தகவல்கள் உடனடியாக சமூக வலைதளங்களில் வெளியாகி விடுகின்றன. இதில் கருத்துக்கள், விமர்சனங்கள், மீம்ஸ் என பதிவிடுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமூக வலைதளங்களில் மிகவும் பரபரப்பை கிளப்பும் விவகாரங்களை மையமாக வைத்து, அந்த சம்பவம் நடைபெற்று குறுகிய காலத்திற்குள்ளாகவே சினிமாக்கள் எடுக்கப்பட்டு விடுகின்றனர். இதனால் அந்த விவகாரத்திற்கு சமூக வலைதளங்களில் கிளம்பிய பரபரப்பு, சினிமாக்களுக்கு வரவேற்பாக மாறுகிறது. இதன் அடிப்படையிலேயே அரசியலை மையமாகக் கொண்ட படங்கள் அதிகம் எடுக்கப்பட்டு வருகின்றன.

மற்ற மொழிகளில் எப்படி

மற்ற மொழிகளில் எப்படி

தமிழ் சினிமாவில் மட்டுமல்ல தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் இதே நிலை தான். மலையாளத்தில் மோகன்லால் நடித்து வெளிவந்த லூசிஃபர் படம் மிகப் பெரிய பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது. ஒரு மாநிலத்தின் முதல்வர் இறந்த பிறகு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற நடக்கும் அரசியல் தந்திரங்கள் பற்றியது தான் இந்த படம். அதே போல் தெலுங்கில் ஸ்ரீமந்துடு, பரத் அனே நேனு, மகரிஷி போன்ற படங்கள் நேரடி அரசியல் பேசி, ஹிட்டான படங்கள் ஆகும்.

English summary
Kollywood filmmakers are increasingly taking on the system in their star vehicles
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X