2000 மீ உயரம்.. இமயமே வியக்கும் "தமிழ்நாடு".. இத்தனை சிறப்புகளா! வியக்க வைக்கும் சுவாரசிய தகவல்கள்!
சென்னை: இமயமலையே வியக்கும் அளவிற்கு தமிழ்நாட்டில் ஏகப்பட்ட சிறம்பம்சங்கள் இருக்கின்றன. எண்ணிலடங்கா இயற்கை வளங்களும், நினைத்து பார்க்க முடியாத அதிசயங்களும், தமிழ்நாட்டிற்கே உரித்தான பிரத்யோக சிறப்பம்சங்கள் பலவும் நம் மாநிலத்தில் உள்ளன.
தமிழ்நாடு அரசியல் ரீதியாகவும் சரி, இயற்கை வளங்கள் ரீதியாகவும் சரி.. எப்போதுமே மற்ற மாநிலங்களை விட பல மடங்கு வேறுபட்டு இருக்கும். இந்தியாவில் உள்நாட்டு சுற்றுலாவில் இப்போதும் நம்பர் 1 ஆக இருப்பது தமிழ்நாடுதான். காரணம் தமிழ்நாட்டில் இருக்கும் தனித்துவமான சுற்றுலா தளங்களும், இயற்கை எழில் கொஞ்சும் இடங்களும்தான்!
ஓ பன்னீர் செல்வம் திமுகவின் பி டீமா?.. நிருபர்களின் கேள்விக்கு உதயநிதி ஸ்டாலின் இப்படி சொல்லிட்டாரே!
இப்படிப்பட்ட தமிழ்நாட்டில்.. இமயமலைக்கு அடுத்தபடியாக சில சுவாரசிய இடங்களும்.. சுற்றுலா அதிசயங்களும் உள்ளன. அந்த வகையில் தமிழ்நாட்டிற்கே உரித்தான சில தனித்துவங்களை @TNGeography என்ற ட்விட்டர் பக்கம் பட்டியலிட்டுள்ளது.

சுவாரசிய அம்சங்கள்
இந்த பட்டியலில் பல சுவாரசிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தியாவிலேயே இமயமலைக்கு அடுத்தபடியாக அதிக உயரத்தில் நிலப்பரப்பு கொண்டு இருக்கும் ஒரே தென்னிந்திய மாநிலம் தமிழ்நாடுதான் (கேரளா என்று நினைத்தால் தப்பு பாஸ்). ஆம்.. தமிழ்நாட்டில் 1000 அடி, 2000 அடிக்கும் அதிக உயரத்தில் (கடல் மட்டத்தில் இருந்து) கூட நிலப்பரப்பு உள்ளது. 5312 சதுர கிலோ மீட்டர் பரப்புகள் 1000 அடி உயரத்திற்கு மேல் உள்ளது. 875 சதுர கிலோ மீட்டர் பரப்புகள் 2000 அடி உயரத்திற்கு மேல் உள்ளது.

வியப்பளிக்கும் விஷயம்
ஆனால் இதில் வியப்பளிக்க வேண்டிய 85 சதவிகித நிலப்பரப்பு 500 மீ உயரத்திற்கும் கீழ்தான் உள்ளது. அதேபோல் இமய மலை இருக்கும் மாநிலங்களை தவிர்த்துவிட்டு பார்த்தால், தமிழ்நாட்டில்தான் அதிக மக்கள் 2000 அடி உயரத்திற்கும் அதிகமான மலை பகுதிகளில் வாழ்கிறார்கள். ஆம் அந்த அளவிற்கு தமிழ்நாட்டில் மலை வளங்கள் உள்ளன. அங்கு மனிதர்களும் இருக்கிறார்கள். இமய மலை பகுதி உள்ள மாநிலங்களில் (பாகிஸ்தான் ஆக்கிரமித்த ஜம்மு காஷ்மீர் சேர்த்து) மொத்தம் 1,41,000 சதுர கிலோ மீட்டர் பரப்பில் 4000 அடி உயரத்தில் கூட மக்கள் வசிக்கிறார்கள்.

இயற்கை வளம்
மலை வளம் என்று மட்டுமில்லை மற்ற இயற்கை வளங்களும் தமிழ்நாட்டில் நிரம்பி வழிகின்றன. இரண்டு பக்கமும் கடல்கள் சூழ்ந்த நிலப்பரப்பு, மேற்கு தொடர்பு மலை பகுதிகள், சிறிய பாலைவன பகுதிகள், மாங்குரோவ் காடுகள், கடல் அடியில் மாபெரும் பாசி படங்கள், மாபெரும் டெல்டா பகுதி, 17 பறவை சரணாலயங்கள், ஏகப்பட்ட விலங்குகள் சரணாலயங்கள் என்று தமிழ்நாடு மாபெரும் வளங்களை தன்னிடம் கொண்டு உள்ளது.

நீலகிரி அதிசயம்
அதுமட்டுமின்றி இமயமலை தொடருக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டின் நீலகிரி மலை தொடரை அடிப்படையாக வைத்துதான் நிறைய விலங்குகளுக்கு பெயர்கள் வைக்கப்பட்டு உள்ளன. ஆம்.. ஏகப்பட்ட விலங்குகள் நீலகிரி என்ற முன்னொட்டை கொண்டு உள்ளன. உதாரணமாக
நீலகிரி லங்கூர்
நீலகிரி மார்டன்
நீலகிரி தாஹ்ர்
நீலகிரி ஃப்ளைகேட்சர்
நீலகிரி மரப் புறா
நீலகிரி ப்ளூ ராபின்
நீலகிரி சிரிக்கும் திருஷ்டி
நீலகிரி பூங்கொத்தி
நீலகிரி பிபிட்
நீலகிரி சோளக்கிளி
நீலகிரி முருங்கை
நீலகிரி காட்டுப் பல்லி
என்று ஏகப்பட்ட பறவைகள், விலங்குகள் நீலகிரி பெயரை தாங்கி உள்ளன.

வேறு எந்த மாநிலத்திற்கும் இல்லாத சிறப்பு
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திற்கும் இந்த சிறப்பு கிடையாது. அதேபோல் செடிகள், மரங்களிலும் தமிழ்நாட்டில் விதவிதமான வகைகள் உள்ளன. நீலகிரி, ஆனைமலை, அகஸ்தியமலை, மேகமலை, பழனி மலை & கிழக்கு தொடர்ச்சி மலைகள் தமிழ்நாட்டில் அதிக விதமான மரங்கள் கொண்ட பகுதிகளாகும். மற்ற பல மாநிலங்களை விட மலை, நீர், செடி, கொடி, விலங்கு, பறவை வளங்கள் தமிழ்நாட்டில் நிரம்பி கிடக்கின்றன.. இமயமலைக்கு அடுத்தபடியாக எண்ணிலடங்கா வளங்கள் நம் "குமரி" நாட்டில்தான நிரம்பி கிடக்கின்றன! இதனால்தான் சொர்க்கமே என்றாலும் அது நம்மூரை போல வருமா என்று பாடல்களிலும் இருக்கிறது போல! CREDIT - @TNGeography