சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கந்த சஷ்டிக்கு துடிக்காதவர்கள் இப்ப துடிப்பது ஏன்? ஹெச் ராஜா கேள்வி!!

Google Oneindia Tamil News

சென்னை: கந்த சஷ்டி கவசத்தை ஈ.வெ.ரா. கும்பல் அவமதித்த போது ஏன் இவர் துடிக்கவில்லை. இவர் ஒரு கலப்படமற்ற இந்து விரோதி என்ற காரணத்தால். இவர்களில் யாராவது கந்த சஷ்டி கவசத்தை இழிவாக பேசிய ஈனப் பிறவிகளை கண்டித்தார்களா? என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

Recommended Video

    ஸ்டாலின் இதற்கு மட்டும் பேசுகிறார்? | சி.என். அண்ணாதுரையே இந்து விரோதிதானே..! - ஹெச்.ராஜா
    H Raja

    தமிழகத்தில் தற்போது கொரோனா மீதான பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் பின்னுக்குத் தள்ளப்பட்டு பிரதானப்படுத்தி இருப்பது கந்த சஷ்டி கவசம் அவமரியாதை செய்யப்பட்டது, பெரியார் சிலை மீது காவிச் சாயம் பூசியது என்று அரசியல் வேறு பாதை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.

    H Raja

    தமிழக அரசியலில் ரஜினிகாந்த் சொன்ன ஆன்மீக அரசியல் கலந்து வருகிறதோ என்ற எண்ணத்தை அதிகமாக்கி இருக்கிறது. கறுப்பர் கூட்டம் என்ற யூ டியூப் சேனல் கந்த சஷ்டி கவசத்தை அவமானப்படுத்தி, இந்துக்களின் உணர்வுகளையும் கொச்சைபடுத்தி இருப்பதாக அந்த சேனல் மீது சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அந்த சேனல் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே அந்த சேனல் அந்த வீடியோவை யூ டியூபில் இருந்து நீக்கியது.

    இந்த வழக்கின் கீழ் இதுவரை செந்தில் வாசன் என்பவரை சென்னை வேளச்சேரியில் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து நேற்று இந்த சேனலைச் சேர்ந்த சுரேந்திரன் புதுச்சேரி காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வரும் 30 ஆம் தேதி வரை அவருக்கு நீதிமன்றக் காவல் விதித்து மாஜிஸ்திரேட் உத்தரவு பிறப்பித்தார்.

    சோனியாவை சந்திக்க பிரியங்காவிடம் ஒற்றை கண்டிஷன் போட்ட சச்சின் பைலட்.. இன்று உள்ளதும் போச்சு நிலை! சோனியாவை சந்திக்க பிரியங்காவிடம் ஒற்றை கண்டிஷன் போட்ட சச்சின் பைலட்.. இன்று உள்ளதும் போச்சு நிலை!

    இந்த நிலையில் நேற்று கோயம்புத்தூரில் இருக்கும் சுந்தராபுரத்தில் பெரியார் சிலை மீது காவிச் சாயம் வீசப்பட்டது. இதற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.

    H Raja

    இதுகுறித்து ட்விட்டரில் பதிவு செய்து இருக்கும் பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா, ''கந்த சஷ்டி கவசத்தை ஈ.வெ.ரா. கும்பல் அவமதித்த போது ஏன் இவர் துடிக்கவில்லை. இவர் ஒரு கலப்படமற்ற இந்து விரோதி என்கிற காரணத்தால். இவர்களில் யாராவது கந்த சஷ்டி கவசத்தை இழிவாக பேசிய ஈனப் பிறவிகளை கண்டித்தார்களா?

    H Raja

    கந்தன் கருணையே கருணை. 4 நாட்களில் 2 சம்பவங்கள். 4 நாட்களாக முதல் சம்பவத்திற்கு வாயே திறக்காத தலைவர்கள் இன்றைய சம்பவத்திற்கு கண்டனம். அனைவரும் இந்துக்கள் முன்பு தோலுரித்துக் காட்டப்பட்டு விட்டனர். வெற்றி வேல் வீர வேல். இந்துக்கள் வணங்கும் தெய்வங்களின் விக்ரகத்தை வீதியில் போட்டுடைத்தவர் பெரியாரா? மக்கள் சிந்திக்கத் துவங்கிவிட்டனர்'' என்று தெரிவித்துள்ளார்.

    பெரியார் சிலை மீது காவிச் சாயம் பூசிய சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த அனைத்து தமிழக அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.

    சோனியாவை சந்திக்க பிரியங்காவிடம் ஒற்றை கண்டிஷன் போட்ட சச்சின் பைலட்.. இன்று உள்ளதும் போச்சு நிலை!

    English summary
    Why Tamil Nadu leaders not reacted to Kantha sasti kavasam but reacting now to periyar statue asks BJP H Raja
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X