சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வாய் திறக்காத மற்ற மாநிலங்கள்.. இந்தி.. நீட்.. புதிய கல்வி கொள்கைக்கு தமிழகத்தில் எதிர்ப்பு ஏன்

Google Oneindia Tamil News

Recommended Video

    நீட் தேர்வு தற்கொலைகள் பற்றி தெரியாது - ஷாக் தரும் மத்திய அரசு

    சென்னை: நீட் தேர்வுக்கு எதிர்ப்பு, இந்திக்கு எதிர்ப்பு, தபால் தேர்வுகளை ஆங்கிலம் இந்தியில் மட்டுமே நடத்தப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு, புதிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு என கல்வி சார்ந்த அனைத்து விஷயங்களிலும் மற்ற மாநிலங்கள் வாய் திறக்காத நிலையில் தமிழகம் மட்டும் இப்படி ஒரு எதிர்ப்பை தெரிவிக்க பல காரணங்கள் இருக்கின்றன.

    எம்பிபிஸ், பிடிஎஸ் படிப்பிற்கு நீட் நுழைவுத்தேர்வு நடத்த மத்திய அரசு கடந்த 2017ம் ஆண்டு முடிவு செய்தது. அப்போது தமிழகம் மற்றும் புதுவையை தவிர எந்த மாநிலமும் நீட் தேர்வில் விலக்கு வேண்டும் என கேட்கவில்லை. ஏனெனில் மற்ற மாநிலங்களில் பாடத்திட்டங்கள் கிட்டத்தட்ட மத்திய அரசின் பாடத்திட்டங்களை ஒட்டித்தான் இருக்கிறது.

    ஆனால் தமிழகத்தில் மட்டும் பாடத்திட்டம் முற்றிலும் வேறுமாதிரியானவை.. இதனை திடீரென பாடத்திட்டத்தை மாற்ற முடியாது என்பதால் தமிழக கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மாணவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மும்பையில் சற்று முன்பு இடிந்து விழுந்தது 4 மாடி கட்டடம்.. 50 பேர் சிக்கியுள்ளதால் பதற்றம் மும்பையில் சற்று முன்பு இடிந்து விழுந்தது 4 மாடி கட்டடம்.. 50 பேர் சிக்கியுள்ளதால் பதற்றம்

    சிபிஎஸ்இ மாணவர்கள்

    சிபிஎஸ்இ மாணவர்கள்

    சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் மட்டுமே இப்போது வரை கேள்விகள் கேட்கப்படுவதால் அதை எதிர்கொள்வது என்பது தமிழக அரசு பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு சவாலாக உள்ளது. அதனால் தான் நீட் தேர்வுக்கு இங்கு எதிர்ப்பு கடுமையாக இருக்கிறது.

    மாநில மொழிகள்

    மாநில மொழிகள்

    நீட் தேர்வைப்போலவே இந்தியை கட்டாயமாக்கும் மத்திய அரசின் முயற்சிகளை மற்ற மாநிலங்கள் பெரிதாக கண்டித்தனவோ இல்லையோ தமிழகம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இப்போது வட மாநிலங்களில் இந்தியின் ஆதிக்கம் கொடிகட்டி பறக்கிறது. அங்கு ஒரு காலத்தில் வலிமையாக இருந்த மாராத்தி, ஒடியா, குஜராத்தி, பேஜ்பூரி, பஞ்சாபி, பெங்காலி மொழிகள் இப்போது இந்தியின் ஆதிக்கத்தால் மிகப்பெரிய அளவில் தன் இயல்பை இழந்து வருகின்றன. இதேபோல் தமிழும் அழிந்துவிடும் அபாயம் இருப்பதாக எண்ணியே தமிழகத்தில் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. இதேபோல் எனக்கு வேண்டும் என்றால் நான் படித்துக்கொள்வேன், அதை கட்டாயமாக்க வேண்டிய அவசியம் என்ன என்ற கோணத்திலும் பலர் இந்தியை இங்கு எதிர்க்கிறார்கள்.

    இந்தி ஆங்கிலம்

    இந்தி ஆங்கிலம்

    தபால் தேர்வை இனி இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்துவோம் என மத்திய அரசு வெளியிட்ட சுற்றறிக்கைக்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால் தமிழ் மட்டுமே தெளிவாக தெரிந்தவர்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் வினாத்தாளை புரிந்து பதில் எழுதுவது கடினம் என்பதால் எதிர்ப்பு எழுந்துள்து. இன்னொரு காரணம் சுயமரியாதை உணர்வு இங்கு அதிகம் என்பால்.. என்மொழி என் உரிமை, அதை தடுப்பதற்கு உங்களுக்கு என்ன உரிமை என்று பலரும் கேள்வி எழுப்புகிறார்கள்.

    தமிழகம் எதிர்ப்பு

    தமிழகம் எதிர்ப்பு

    புதிய கல்வி கொள்கையில் சிறு வயதில் இருந்தே மும்மொழி திணிக்கப்பட உள்ளது. 3 வயதிலேயே பள்ளிக்கு செல்ல வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் உயர்கல்விகள் அனைத்துக்கும் நுழைவுத்தேர்வு நடத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 5வது, 8வது, 10வதுகளில் பொதுத்தேர்வுகளை கட்டாயமாக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஓராசிரியர் பள்ளிகளை மூட பரிந்துரை செய்யப்பட்டுள்து.

    மும்மொழி கட்டாயம்

    மும்மொழி கட்டாயம்

    இவற்றால் கடுமையான பாதிப்புகள் ஏழை மாணவர்களுக்கு ஏற்படும் என்பதால் இங்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. சிறுவயதில் மும்மொழி கற்பது, அடிக்கடி நுழைவுத்தேர்வு உள்ளிட்ட விஷயங்களுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. இதேபோல் கிராம புறங்களில் வசதி இல்லாத ஏழைகள் ஓராசிரியர் பள்ளிகளில் படித்து வருகிறார்கள்.அவைகள் மூடப்பட்டால் அந்த மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என தமிழகத்தில் எதிர்ப்பு எழுந்துள்ளது. இப்படி கல்வி சார்ந்த பல்வேறு விஷயங்களை தமிழகத்தில் எதிர்ப்பு எழ மேற்கண்டவை முக்கிய காரணம் என்றால், இனம் சார்ந்த மொழி சார்ந்த ஒற்றுமை தமிழகத்தில் மிக அதிகம் எனவே அவற்றுக்கு ஆபத்து வந்தால் உடனே எதிர்ப்பு எழுகிறது.

    English summary
    why tamil nadu peoples only object like neet exam, hindi imposition, new education policy. because some reason behind the objections
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X