சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வருமான வரி விவகாரம்: எங்க சசிகலாவுக்கு ஒரு நீதி? உங்க ரஜினிகாந்துக்கு ஒரு நீதியா?- சீமான்

Google Oneindia Tamil News

சென்னை: வருமான வரித்துறை விவகாரத்தில் சசிகலாவுக்கு ஒரு நீதி? ரஜினிகாந்துக்கு ஒரு நீதி ஏன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

Recommended Video

    Why tax relief for only Rajinikanth, asks seeman

    சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பாசறை சார்பாக நேற்று ஒன்று கூடல் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது:

    Why tax relief for Only Rajinikanth? asks Seeman

    குடியுரிமை சான்றிதழ்களை நாம் தமிழர் கட்சியினர் எவரும் தர மாட்டோம். எங்களை முகாம்களில் அடைத்தாலும் அதை ஏற்போம். குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக இஸ்லாமியர்கள் போராடுகின்றனர்.

    இது இஸ்லாமியர்களுக்கு மட்டுமான பிரச்சனை அல்ல; நாளை நமக்கும் இந்த பிரச்சனை வரும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த ரஜினிகாந்திடம் விளக்கம் கேட்க வேண்டும் என்று நீதிபதி அருணா ஜெகதீசன் கமிஷனிடம் நான் வேண்டுகோள் வைத்தேன்.

    அதை ஏற்றுதான் தற்போது ரஜினிகாந்துக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அன்று தூத்துக்குடிக்கு செல்ல முடிந்த ரஜினியால் இன்று ஏன் செல்ல முடியவில்லை? வருமான வரித்துறை ரஜினிகாந்துக்கு ரூ66 லட்சம் விலக்கு அளிக்கிறது.

    அப்படியானால் சசிகலாவுக்கு ஒரு நீதி? ரஜினிகாந்துக்கு ஒரு நீதியா? ஏன் எனில் சசிகலா எங்க ஆள்.. ரஜினிகாந்த் உங்க ஆள் என்பதால்தானே.. மாநில சுயாட்சி பேசிய நாம், ஜம்மு காஷ்மீருக்கான 370-வது பிரிவு நீக்கம் குறித்து பேசவில்லை. சந்திரபாபு நாயுடு, கெஜ்ரிவால் போன்றவர்கள் இதை ஆதரிக்கிறார்கள்.

    ராஜீவ் வழக்கில் 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும். மத்திய அரசு என்பது மாநிலங்களின் நிதியில் இயங்குகிறது. மத்திய அரசுக்கு என்று அதிகாரம் எதுவும் இல்லை. மாநிலங்களின் உரிமைகளை மதிக்க தவறினால் உள்நாட்டு யுத்தம் வரும் என்று அம்பேத்கர் ஏற்கனவே எச்சரித்துள்ளார். இவ்வாறு சீமான் கூறினார்.

    English summary
    Naam Tamilar Party Chief Co-ordinator Seeman asked that Why tax relief for Only Rajinikanth?.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X