சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இதனால் தான் சென்னையில் கடல் அலைகள் திடீரென நீல நிறத்திற்கு மாறியதா.. அறிவியலாளர்கள் ஷாக் விளக்கம்

Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னை கடலில் நீல நிறத்தில் ஒளிர்ந்த அலைகள்!

    சென்னை: சென்னை சுற்றுவட்டாரப் பகுதியில் அண்மையில் கடல் அலைகள் திடீரென நீல நிறத்துக்கு மாறியதற்கான காரணத்தை கண்டுபிடித்து தேசிய கடல் ஆராய்ச்சி மைய அறிவியலாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

    சென்னையில் பெசன்ட் நகர், ஈஞ்சம்பாக்கம் உள்ளிட்ட கிழக்கு கடற்கரை பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன் கடல் அலைகள் திடீரென நீல நிறத்திற்கு மாறியது. இதைக்காண மக்கள் ஆர்வமுடன் கடற்கரை பகுதிகளுக்கு குவிந்தனர்.

    இது குறித்து அறிந்த தேசிய கடல் ஆராய்ச்சி மைய அறிவியலாளர்கள் சென்னை நகரின் பல்வேறு கடல் பகுதிகளுக்கு சென்று நீர் மாதிரிகளை எடுத்துச் சென்னர். பின்னர் ஆய்வு மேற்கொண்ட அவர்கள் அதற்கான காரணங்களை தற்போது உறுதிபடுத்தியுள்ளனர்.

    ஆஹா.. தமிழகம் முழுவதும் சூப்பரா மழை பெய்யுமாம்.. குறிப்பா இந்த 2 மாவட்டத்துல பிச்சுக்கிருமாம்!ஆஹா.. தமிழகம் முழுவதும் சூப்பரா மழை பெய்யுமாம்.. குறிப்பா இந்த 2 மாவட்டத்துல பிச்சுக்கிருமாம்!

    ஒளியுமிழும் நுண்ணுயிரிகள்

    ஒளியுமிழும் நுண்ணுயிரிகள்

    இதன்படி, நோக்டிலுகா சைன்ட்டில்லன்ஸ் (Noctiluca Scintillans) எனப்படும் இந்த நுண்ணுயிரிகள், சுற்றுப்புற சூழல் பாதிக்கப்படும் போது ஒளியுமிழும் தன்மை உடையவை என்று கூறிய அறிவியலாளர்கள், கடல் நீலநிறமாக மாறிய குறிப்பிட்ட அந்த இரண்டு நாள்களில் ஒளியுமிழும் நுண்ணுயிரிகள் கடற்பரப்பில் அதிகரிதது காணப்பட்டுள்ளது என உறுதிபடுத்தியுள்ளனர்.

    ஆய்வு நடந்து வருகிறது.

    ஆய்வு நடந்து வருகிறது.

    பொதுவாக பயோலுமினசென்ஸ் ஆர்கானிசம் (bioluminescence Organism) எனப்படும் ஒளியுமிழும் உயிரினங்களால் கடற்பரப்பில் நிற மாற்றங்கள் நிகழ்வது இந்த உலகம் முழுவதுமே இயல்பான ஒன்றுதான் என்றும் அவர்கள் விளக்கம் அளித்தனர். ஆய்வு தொடர்ந்து நடந்து வருவதாகவும், கடலில் நச்சுத் தன்மை அதிகரித்ததற்கான காரணங்களை ஆய்வு செய்து வருவதாகவும் அறிவியலாளர்கள் தெரிவித்தனர்.

    வளர்ந்த நுண்ணுயிர்கள்

    வளர்ந்த நுண்ணுயிர்கள்

    நீலநிறமாக கடல் மாறிய அன்று ஈஞ்சம்பாக்கம் முதல் திருவான்மியூர் வரையும் பின்னர் எலியட்ஸ் கடற்கரை முதல் பெசன்ட்நகர் கடற்கரை வரை நுண்ணுயிர்கள் நகர்ந்ததது என்றும் வை 240 மைக்ரோ மீட்டர் முதல் 300 மைக்ரோ மீட்டர் வரை வளர்ந்தது என்றும் அறிஞர்கள் கூறினர்.

    கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசுபாடு

    கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசுபாடு

    சமீபத்திய மழை காரணமாக கடலி உப்புத்தன்மை குறைந்தது மற்றும் கடலில் கலக்கும் கழிவு நீரில் சில மூலக்கூறுகளால் ஒளியுமிழும் இந்த நுண்ணுயிரிகள் வளர்வதற்கான சத்துக்கள் கிடைத்திருப்பதை அறிவியலாளர்கள் உறுதி செய்துள்ளனர். நைட்ரேட், பாஸ்பேட் ஆகிய வேதிப் பொருட்களின் தன்மை அதிகரித்துள்ளது என்றும் கடல் நீரில் கழிவுகளும் நைட்ரஜன் சார்ந்த நச்சுச் சத்துகளும் அதிகரிக்கும் போது நச்சு கடற்பூண்டுகள் அதிகரித்து பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றார்கள்.

    மோசமான அறிகுறி

    மோசமான அறிகுறி

    இதனிடையே தமிழ்நாடு ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழக துணைவேந்தர் பிளக்ஸ் கூறுகையில், நோக்டிலுகா சைன்ட்டில்லன்ஸ் எனப்படும் இந்த வகை நுண்ணுயிர்கள் வளர்வது என்பது அந்த பகுதியில் மீன்வளத்தின் வீழ்ச்சிச்க்கு மோசமான அறிகுறி என தெரிவித்தார்.

    English summary
    why the blue glow on Chennai beaches? explain national Centre for Coastal Research scientist
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X