சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அந்த ஒரு வாசகம்.. அதனால்தான் அதிகாரிகள் ஆத்திரம்.. ஜெர்மனி மாணவர் நாட்டை விட்டு வெளியேற்றம் ஏன்?

Google Oneindia Tamil News

Recommended Video

    போராட்டத்தில் பங்கேற்ற ஜெர்மன் மாணவர் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு

    சென்னை: குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற ஐ.ஐ.டி-மெட்ராஸில் (பரிமாற்றத் திட்டம்) பயின்ற, ஜெர்மன் மாணவர் ஜாகோப் லிண்டெந்தால், குடிவரவு அதிகாரிகளால் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார். இது நாடு முழுக்க பேசு பொருளாக மாறியுள்ளது.

    டிரெஸ்டன் தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவரான ஜாகோப் லிண்டெந்தால் ஜூலை முதல் இந்தியாவில் தங்கி இருந்தார், ஐ.ஐ.டி.யில் இயற்பியல் துறை மாணவராக இருந்தார். அவரது எக்சேஞ்ச் திட்டம் 2020ம் ஆண்டு மே மாதத்தில் நிறைவடைவதாக இருந்தது.

    ஆனால், அவர் உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேற பணிக்கப்பட்டுள்ளார். தனது நண்பர்களை பார்க்க கூட அவகாசம் தராமல் உடனடியாக வெளியேற உத்தரவிட்டது தனக்கு வேதனை அளிப்பதாக ஜோகோப் கூறியுள்ளார். டெல்லி சென்று அங்கேயிருந்து ஜெர்மனிக்கு அவர் விமானத்தில் கிளம்பிவிட்டதாக கடைசியாக கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

    தீவிர விசாரணை

    தீவிர விசாரணை

    முன்னதாக, அவரிடம் நேற்று காலை முதல் மதியம் வரை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி உள்ளனர். இந்திய அரசியல் குறித்த அவரது கருத்து என்ன? இந்த போராட்டத்தில் அவரை ஈடுபட தூண்டியது எது? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை அதிகாரிகள் முன்வைத்துள்ளனர். இதன் பிறகுதான் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

    தீவிர விசாரணை

    தீவிர விசாரணை

    முன்னதாக, அவரிடம் நேற்று காலை முதல் மதியம் வரை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி உள்ளனர். இந்திய அரசியல் குறித்த அவரது கருத்து என்ன? இந்த போராட்டத்தில் அவரை ஈடுபட தூண்டியது எது? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை அதிகாரிகள் முன்வைத்துள்ளனர். இதன் பிறகுதான் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

    விசா விதிமுறை என்ன சொல்கிறது

    விசா விதிமுறை என்ன சொல்கிறது

    இதுகுறித்து அதிகாரிகள் வட்டாரத்தில் கேட்ட போது, "ஒவ்வொருவருக்கும் விசா வழங்கும் போது, அதில் நீங்கள் எந்த நோக்கத்திற்காக வந்துள்ளீர்களோ, அந்த பணிகளை மட்டும் தான் செய்ய வேண்டும். அதை தாண்டி வேறு நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கும். அந்த வகையில், கல்வி கற்கும் நோக்கத்துடன் வந்த ஜெர்மனி மாணவர், உள்நாட்டுப் பிரச்சினை தொடர்பான போராட்டங்களில் பங்கேற்றது, விசா விதிமுறைகளுக்கு எதிரானது என்பதால், அவரது விசா ரத்து செய்யப்படுகிறது" என்று தெரிவித்தனர்.

    எழுத்துப்பூர்வ விளக்கம்

    எழுத்துப்பூர்வ விளக்கம்

    அதேநேரம், ஜாகோப் லிண்டெந்தால் அளித்துள்ள விளக்கத்தில், மனிதாபிமான அடிப்படையில் நடைபெற்ற போராட்டம் என்பதால்தான் பங்கேற்றதாக கூறியுள்ளார். இதை அதிகாரிகள் ஏற்க மறுத்துள்ளனர். இருப்பினும், இது தொடர்பாக எழுத்துப் பூர்வமான விளக்கம் எதையும் அதிகாரிகள் ஜெர்மன் மாணவருக்கு வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.

    பதாகை

    இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான மற்றொரு விஷயம் என்னவென்றால், ஜாகோப் லிண்டெந்தால் ஏந்தியிருந்த பதாகையில் இடம்பெற்றிருந்த ஒரு வாசகம் அதிகாரிகள் தரப்பை ரொம்பவே கோபப்படுத்தி விட்டதாம். அப்படி என்ன எழுதி இருந்தார் என்கிறீர்களா..? "1933 முதல் 1945 நாம் அங்கே இருக்கிறோம்" என்று அந்த பதாகையில் கூறப்பட்டிருந்தது. ஜெர்மனியை ஹிட்லர் ஆட்சி செய்த காலகட்டம் தான் இந்த பதாகையில் குறிப்பிடப்பட்ட ஆண்டு ஆகும். இதன் மூலம் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியை, ஹிட்லர் ஆட்சியுடன், ஜாகோப் லிண்டெந்தால் ஒப்பிட்டது போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

    இருவேறு கருத்துக்கள்

    இருவேறு கருத்துக்கள்

    அதிகாரிகள் எடுத்த நடவடிக்கையை, கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான செயல் என்று கூறி சமூக வலைத்தளத்தில், கண்டனங்கள், எழுந்துள்ளன அதே நேரம் பிற நாடுகளிலும் நமது மாணவர்கள் அந்த நாட்டு விவகாரங்களில் இப்படி போராட்டம் நடத்தினால், இதே போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும், எனவே அரசு எடுத்த நடவடிக்கை சரிதான் என்று ஆதரவு தெரிவித்தும், கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

    English summary
    Why the German student Jakob Lindenthal, at IIT-Madras who took part in a protest against the Citizenship Amendment Act, asked to leave India?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X