சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஓஹோ... எடப்பாடியாரே நேரில் சென்று அழைத்தும்.. பிரதமர் வராததற்கு இதுதான் காரணமாமே..!

நினைவு மண்டபம் திறப்புக்கு ஏன் பாஜக தலைவர்கள் கலந்து கொள்ளவில்லை

Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் அழைத்தும், பிரதமர் ஏன் ஜெயலலிதா நினைவுமண்டப திறப்புவிழாவுக்கு வரவில்லை? பாஜக மேலிட தலைவர்களும் கலந்து கொள்ளவில்லையே ஏன் என்ற சந்தேகங்கள் எழுந்து வருகின்றன.

மறைந்த ஜெயலலிதாவுக்கு நினைவுமண்டபம் ஜரூராக ரெடியாகி கொண்டிருந்தபோதே, இதை பிரதமர் திறந்து வைப்பார் என்ற தகவலும் சேர்ந்தே வெளியானது..

பிறகு திடீரென முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த வாரம் டெல்லி செல்லவும், நினைவிடம் திறப்புக்கு, பிரதமரை நேரில் சென்று அழைக்க உள்ளதாகவும் சொல்லப்பட்டது.

பிரதமர்

பிரதமர்

அதன்படியே முதல்வரும் அழைத்துள்ளார்.. ஆனால் பிரதமர் பங்கேற்க போவதில்லை என்று அப்போதே செய்திகள் கசிந்துவிட்டன.. இதற்கு பிறகுதான் அன்றைய தினமே, முதல்வரே 27-ம் தேதி திறந்து வைப்பார் என்று அரசு சார்பாக அறிவிப்பு வெளியானது. அதன்படியே நேற்று நினைவு மண்டபமும் சிறப்பாக திறக்கப்பட்டது..

பாஜக தலைவர்கள்

பாஜக தலைவர்கள்

பல கோடி ரூபாய் செலவில், ஜெயலலிதாவுக்கு மண்டபத்தை திறந்து, அவரது லட்சக்கணக்கான தொண்டர்களை முதல்வர் குளிர்வித்து விட்டார்.. மறுப்பதற்கில்லை. ஆனால், உண்மையில் முதல்வர் அழைத்தும் பிரதமர் ஏன் இந்த விழாவுக்கு வரவில்லை.. பிரதமர் என்றில்லை, பாஜக தரப்பில் தேசிய தலைவர்கள் யாருமே கலந்து கொள்ளவில்லையே ஏன்? அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வந்து போகும் நட்டா கூட, இதில் பங்கேற்கவில்லையே ஏன்? என்ற கேள்விகள் பரபரத்து காணப்படுகின்றன. இது குறித்து சிலரிடம் பேசினோம்..

ஊழல்கள்

ஊழல்கள்

அவர்கள் அனுமானத்தில் சொன்னதாவது: பாஜகவை பொறுத்தவரை ஊழலுக்கு எதிரான கட்சி.. அந்த முழக்கத்தை முன்வைத்துதான் ஆரம்பத்தில் இருந்து அரசியல் செய்து வருகிறது.. அந்த வகையில், அதிமுகவில் ஊழல் செய்துவிட்டு ஜெயிலுக்கு போனவர்தான் ஜெயலலிதா.. அவர்தான் ஏ1 குற்றவாளி.. ஆனால், அவர் திடீரென இறந்துவிட்டதால், அந்த வழக்கில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என்பதுதான் தீர்ப்பு.. மற்றபடி ஜெயலலிதா குற்றமற்றவர் என்று இதுவரை நிரூபிக்கப்படவில்லை..

பாஜக தலைவர்கள்

பாஜக தலைவர்கள்

இன்னமும் அவர் ஒரு குற்றவாளி என்பதால், பாஜக தலைவர்கள் இதில் கலந்து கொள்ள தயக்கம் காட்டி உள்ளதாக தெரிகிறது.. இன்று இல்லாவிட்டாலும் என்றாது, இந்த விவகாரத்தை வேறு யார் வேண்டுமானாலும் கிண்டக்கூடும்.. ஒரு குற்றவாளிக்கு மணிமண்டபம் கட்டுவதே தவறு.. அதிலும் அரசு பணத்தில் இவ்வளவு செலவழிப்பது தேவையா என்பது அடுத்த அதிருப்தியாக உள்ளது..

விழா

விழா

இதில் பாஜக தலைவர்களும் கலந்து கொண்டால், அவர்களும் ஜெ.செய்த தவறுகளுக்கு மறைமுகமாக உடந்தையாகிவிடக்கூடும் என்பதாலேயே, இந்த விழாவை தவிர்த்திருக்கக் கூடும்.. மேலும் அவரது மரணமே இன்னும் மர்மமாக இருக்கிறது.. அது சம்பந்தப்பட்ட விசாரணையின் தீர்ப்பும் வரவில்லை.. இதுபோன்ற தேவையில்லாத சர்ச்சைகளை தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே இப்படி செய்திருக்கலாம்" என்கின்றனர்.

English summary
Why the PM Modi did not attend the Jayalalithas Memorial inauguration
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X