சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னதிது.. சைலன்டா இருந்த ஜீயர்கள் எல்லாம் இப்படி வயலன்ட்டா பேச ஆரம்பிச்சுட்டாங்களே

Google Oneindia Tamil News

Recommended Video

    நான் கூறியது சரித்திர உண்மை... சர்ச்சை பேச்சு குறித்து கமல் விளக்கம்

    சென்னை: அகிம்சையை வலியுறுத்தி வந்த ஜீயர்கள் தற்போது கலவரத்தை உண்டு செய்யும் அளவுக்கு பேசுகிறார்களே என்று எண்ணத் தோன்றுகிறது.

    பொதுவாக எந்த மதத்தின் போதகர்களும் ஒரு உயிரை துன்புறுத்துவது குறித்து பேசவே மாட்டார்கள். பொறுமை, சாந்தி, புண்ணியம் என்ற ரூட்டில் பயணிப்பர்.

    ஆனால் தற்போது ஜீயர்கள் எல்லாம் வயலன்ட்டாக பேச தொடங்கிவிட்டார்கள். கடந்த ஆண்டு வைரமுத்து ஆண்டாள் குறித்து பேசிய சர்ச்சை பேச்சுக் கூட சில நாட்கள் மட்டுமே இருந்திருக்கும்.

    வன்முறையை தூண்டி விடுகிறார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி... சென்னை போலீசில் புகார் வன்முறையை தூண்டி விடுகிறார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி... சென்னை போலீசில் புகார்

    சோடா பாட்டில்

    சோடா பாட்டில்

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் பிரஸ் மீட் என்ற பெயரில் பேசினார் பாருங்கள். அவர் பேசும் போது வைரமுத்து ஆண்டாள் சன்னதியில் வந்து மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் தொடரும். என கூறி போராட்டம் நடத்தியவர் அவர், ஒரு கட்டத்தில் எங்களுக்கும் சோடா பாட்டில் வீச தெரியும் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

    கமல்ஹாசன்

    கமல்ஹாசன்

    நல்லவற்றை போதிக்கும் ஜீயர் ஒருவர் இப்படி பேசலாமா என பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பை தெரிவித்தனர். இதையடுத்து தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார். இந்த நிலையில் மன்னார்குடி ஜீயர் ஒருவர் கமல்ஹாசன் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

    ஜீயர்கள் பேசும் பேச்சா

    ஜீயர்கள் பேசும் பேச்சா

    அவர் பேசுகையில் இந்துக்களை அவதூறாக பேசி வரும் கமல்ஹாசனை நடமாட விட மாட்டோம் என ஜீயர் பேசியுள்ளார். அந்த ஜீயர் சோடா பாட்டில் வீசுவோம் என்கிறார். இந்த ஜீயர் நடமாட விட மாட்டோம் என்கிறார். மக்களுக்கு நல்ல கருத்துகளை போதிக்கும் ஜீயர்கள் பேசும் பேச்சா இது.

    தவறு

    தவறு

    பொதுவெளியில் நாவடக்கத்துடன் பேச வேண்டும் என அறிவுறுத்தும் ஜீயர்கள் தங்கள் நாவை அடக்காமல் புதிய சர்ச்சைக்கு வழி வகுப்பது சரியா. கருத்து சுதந்திரம் அனைவருக்கும் உண்டு. அதற்காக வன்முறையை தூண்டும் தொனியில் யார் பேசினாலும் தவறு தவறுதான் என்பதை உணர வேண்டும்.

    English summary
    Jeeyars are talking rubbishly. Here is the story how Srivilliputhur Jeeyar and Mannargudi Jeeyar talked to condemn a person.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X