சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எல்லாம் சரி.. மாமல்லபுரத்தை ஏன் தேர்வு செய்தார்கள் மோடியும், ஜின்பிங்கும்.. இது மட்டும் புரியலையே!

இரு தலைவர்களும் மாமல்லபுரத்தை ஏன் தேர்வு செய்தார்கள் என்று தெரியவில்லை

Google Oneindia Tamil News

Recommended Video

    PM Modi - Xi Jinping Meet | மோடி- ஜி ஜின்பிங் சந்திப்பால் லாபம் யாருக்கு? | Oneindia Tamil

    சென்னை: எல்லாம் சரிதான்.. நாட்டில் எவ்வளவோ இடம் இருக்க.. தமிழ்நாட்டில்.. அதுவும் மாமல்லபுரத்தை அதிபரும், பிரதமரும் ஏன் செலக்ட் செய்தார்கள் என்பதற்கு பதிலே கிடைக்காமல் உள்ளது!

    மாமல்லபுரம் நமக்கு புராதனமான இடம்.. வரலாற்று நிகழ்வுகள் நடந்தேறிய இடம்.. அதன் சிறப்பம்சங்கள் நமக்கு தெரியும்.. எனினும் சந்திப்புக்கு என்ன காரணம் என்பது முழுவதுமாக நமக்கு தெரியாவிட்டாலும், மாமல்லபுரத்தைத் தேர்வு செய்தது ஏன் என்பதும் தெரியவில்லை. இதை பற்றி வெளியுறவுத்துறையும் இதுவரைக்கும் மூச்சு விடவில்லை.

    ஆனால் 2, 3 காரணங்கள் சொல்லப்படுகின்றன. 2017-ல் இந்தியா - சீனாவுக்கு இடையே ஒரு பிரச்சனை எழுந்தது. இரு நாட்டின் எல்லைப் பகுதியான டோக்லாமில் இரு நாடுகளுமே தங்களது ராணுவத்தை குவித்து.. போர் பதட்டத்தை ஏற்படுத்தி.. உலகம் முழுக்க ஒரு பரபரப்பை தந்துவிட்டன.

    பொருளாதாரம் மோசமாகிவிட்டது.. மன்மோகன்தான் பெஸ்ட்.. பாஜக மீது நிர்மலா சீதாராமனின் கணவர் பகீர் புகார்பொருளாதாரம் மோசமாகிவிட்டது.. மன்மோகன்தான் பெஸ்ட்.. பாஜக மீது நிர்மலா சீதாராமனின் கணவர் பகீர் புகார்

    மோடி அழைப்பு

    மோடி அழைப்பு

    பிறகு படைகள் விலக்கி கொள்ளப்பட்டது.. அடுத்த வருஷமே இந்த எல்லைக்கோடு குறித்து அதிபரை நேரில் சந்தித்து நம் பிரதமர் பேசி.. கொஞ்சம் சமாதானம் ஆனது. அப்போது, இந்தியாவுக்கு வாங்க என்றும் அதிபரை மோடி அழைத்திருந்தார். அதனால்தான் இப்போது அதிபர் வந்து போயிருக்கிறார்கள் என்கிறது ஒரு சோர்ஸ்.

    சூஎன்லாய்

    சூஎன்லாய்

    இன்னொரு காரணம் போதி தர்மரை சொல்கிறார்கள். காஞ்சிபுரத்தை சேர்ந்த போதிதர்மர்தான் இன்றைக்கு சீனாவின் முக்கிய கடவுள்.. ஆதர்சபுருஷர்.. இதற்கு முன்பு 1956-ல்தான் அப்போதைய அதிபர் சூஎன்லாய் வந்து இந்த மாமல்லபுரத்தை பார்த்துவிட்டு போனார். புத்த மதம் சம்பந்தப்பட்ட நிறைய குறிப்புகளை அவர் நாட்டுக்கு அப்போது கொண்டு சென்று பரப்பினார். அதற்கு பிறகு வேறு யாருமே அங்கிருந்து வரவில்லை. அதனால்தான் இப்போது ஜின்பிங் வந்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

    ட்விட்டர்

    ட்விட்டர்

    மற்றொரு காரணம், மோடிக்கு தமிழகம் மீதான அளவுக்கு அதிகமான பாசமும், ஈர்ப்பும் என்று கூறப்படுகிறது. கொஞ்ச நாளாகவே மோடி தமிழையும், தமிழ்நாட்டையும் பற்றி புகழாரம் சூட்டி வருகிறார். ட்விட்டர் முதல் ஐநா சபை வரை தமிழின் புகழ் மோடியால் பாடப்பட்டு வருகிறது. அதனால் தான் வரலாற்று சிறப்பு மிக்க இடமான மாமல்லபுரத்தை பிரதமர் தரப்பு தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    பல்லவ நகரம்

    பல்லவ நகரம்

    ஆக மொத்தம் குத்துமதிப்பாகத்தான் நம்மால் காரணங்கள் அறியப்படுகிறதே தவிர, மாமல்லபுரத்தை இவர்கள் 2 பேரும் ஏன் தேர்வு செய்தார்கள் என்பது முழுமையாக விளங்கவில்லை. ஏன் தேர்வு செய்தார்கள் என்று மண்டையை நாம் பிய்த்து கொள்வதைவிட, அன்றைய தினம் பல்லவ நகரமே பளபளத்தது என்பதும், ஈசிஆர்., ஓஎம்ஆர் ரோடுகள் மினுமினுத்தன என்பதுதான் நமக்கு சந்தோஷமான விஷயம்.

    சுத்தம்

    சுத்தம்

    இது எல்லாவற்றிற்கும் மேலாக, சாக்கடை அடைச்சிக்கிட்டு.. நாள் கணக்கா நாறிட்டு இருந்தாலும்.. உடனே வந்து எட்டிப்பார்க்காத கார்ப்பரேஷன் ஊழியர்கள் இரு தலைவர்களும் வருகிறார்கள் என்பதால், பம்பரமாக சுற்றி சுழன்று வேலை பார்த்ததும் நமக்கு மகிழ்ச்சிதான்!

    English summary
    PM Modi and Xi Jinping met in Mamallapuram but why they chose this place actually
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X