சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொங்கு மண்டலத்தில் வெடித்தது பிரச்சினை.. அதிமுகவிலிருந்து விலகும் தோப்பு வெங்கடாசலம்?

Google Oneindia Tamil News

Recommended Video

    Thoppu Venkatachalam resigns | அதிமுக பொறுப்பிலிருந்து விலகுகிறார் தோப்பு வெங்கடாசலம்

    சென்னை: பெருந்துறை எம்எல்ஏ அதிமுக பதவியிலிருந்து விலகிய தோப்பு வெங்கடாசலம், அக்கட்சியிலிருந்தும் விலக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகிவுள்ளன.

    திருப்பூர் மக்களவை தொகுதிக்குள்பட்ட பெருந்துறை தொகுதி எம்எல்ஏவாக கடந்த 2016-ஆம் ஆண்டு அதிமுக சார்பில் தேர்வு செய்யப்பட்டவர் தோப்பு கே வெங்கடாசலம். ஜெயலலிதா உயிரோடு இருந்த போது இவருக்கு பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

    இவர் சுற்றுச்சூழல் துறை அமைச்சராகவும் இருந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் இவரிடம் இருந்த பொறுப்புகள் பறிக்கப்பட்டன. இந்த நிலையில் தற்போது அம்மா பேரவை மாநில இணைச் செயலாளராக உள்ளார் தோப்பு வெங்கடாசலம்.

    முக்கிய கோரிக்கைகள்.. நாளை தேர்தல் ஆணையத்தை சந்திக்கும் 21 எதிர்க்கட்சிகள்.. அதிரடி முடிவு! முக்கிய கோரிக்கைகள்.. நாளை தேர்தல் ஆணையத்தை சந்திக்கும் 21 எதிர்க்கட்சிகள்.. அதிரடி முடிவு!

    அதிமுகவிலிருந்து விலக முடிவு

    அதிமுகவிலிருந்து விலக முடிவு

    தற்போது கட்சி பொறுப்பிலிருந்து விலகுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தோப்பு வெங்கடாசலம் கடிதம் எழுதியுள்ளார். வெகுவிரைவில் அதிமுகவிலிருந்து விலகுவது குறித்து விரைந்து முடிவு எடுக்கப்படும் என தோப்பு வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.

    அமைச்சர் கருப்பண்ணன்

    அமைச்சர் கருப்பண்ணன்

    தோப்பு வெங்கடாசலத்தின் இந்த அதிரடி முடிவுக்கு காரணம் அமைச்சர் கருப்பண்ணன் என கூறப்படுகிறது. தோப்பு வெங்கடாசலம் கையில் இருந்த சுற்றுச்சூழல் துறை பறிக்கப்பட்டு கருப்பண்ணனிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் தோப்புவிடம் இருந்த பல்வேறு முக்கிய பதவிகள் கருப்பண்ணனிடம் வழங்கப்பட்டது.

    பெயரை கெடுக்க

    பெயரை கெடுக்க

    அன்று முதல் இருவருக்கும் இடையே முட்டல் மோதல்கள் உள்ளன. இந்த நிலையில் திருப்பூர் மக்களவைத் தேர்தலில் அதிமுகவை வெற்றி பெற வைக்க தோப்பு வெங்கடாசலம் பாடுபட்டு வந்தார். இந்த நிலையில் இவரது பெயரை கெடுப்பதற்காக அமைச்சர் கருப்பண்ணன் திருப்பூர் தொகுதியில் அதிமுகவின் வெற்றியை தடுப்பதற்காக உள்ளடி வேலைகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    தோப்பு புகார்

    தோப்பு புகார்

    அதிமுகவுக்கு ஓட்டு போடாதீர்கள் என பிரச்சாரம் செய்து தொகுதி மக்களுக்கு கருப்பண்ணன் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த பிரச்சினையே தோப்பு வெங்கடாசலம் கட்சி பதவியிலிருந்து விலகியதற்கு காரணம் என கூறப்படுகிறது. ஆனால் தோப்பு வெங்கடாசலமோ கட்சி பதவியிலிருந்து தான் விலகியது தனிப்பட்ட காரணங்களுக்காக என பூசி மெழுகியுள்ளார்.

    English summary
    Here is the reason for why MLA Thoppu Venkatachalam resigns his post?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X