சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மத்திய அரசுக்கு எதிரான போராட்டம்....முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்காததற்கு இதுதான் காரணம்!

Google Oneindia Tamil News

சென்னை: மத்திய பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க.) அரசுக்கு எதிராக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் இன்று தமிழகம் முழுவதும் கறுப்புக் கொடி போராட்டம் நடத்தின. ஆனால் இந்த போராட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் பலர் பங்கேற்காததன் பின்னணி குறித்த தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன.

வெறும் 24 மணி நேரம்தான்.. சென்னையில் கடத்தப்பட்ட 3 வயது சிறுவன் நாக்பூரில் மீட்பு! வெறும் 24 மணி நேரம்தான்.. சென்னையில் கடத்தப்பட்ட 3 வயது சிறுவன் நாக்பூரில் மீட்பு!

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு, பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு, நீட் தேர்வுக்கு எதிர்ப்பு ஆகியவற்றை முன்வைத்து திமுக கூட்டணி கட்சிக தலைவர்கள் அனைவரும் இன்று கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி எம்.எல்.ஏ., கனிமொழி எம்.பி. உள்ளிட்ட திமுக எம்.பி.க்கள் மற்றும் மூத்த தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

முதல்வர் பங்கேற்காத போராட்டம்

முதல்வர் பங்கேற்காத போராட்டம்


ஆனால் இந்த கறுப்புக் கொடி போராட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவில்லை. அதேபோல் தமிழக அமைச்சர்கள் பலரும் பங்கேற்கவும் இல்லை. இது தொடர்பாக தலைமை செயலக வட்டாரங்களில் நாம் விசாரித்தோம்.

சட்ட சிக்கல்தான் காரணம்

சட்ட சிக்கல்தான் காரணம்

அதாவது மத்திய அரசின் சட்டங்களுக்கு எதிராக மாநில அரசே கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டால் சட்ட சிக்கல் வரும். அதுவும் அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையில் பதவி பிரமானம் செய்துகொண்ட முதல்வர், அமைச்சர்கள் கலந்து கொண்டால் சிக்கல் எழுமாம்.

உச்சநீதிமன்ற உத்தரவு

உச்சநீதிமன்ற உத்தரவு

2006-2011 ஆட்சி காலத்தில் மத்திய அரசுக்கு எதிராக திமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் முதல்வராக கருணாநிதி கலந்து கொண்டார். அப்போது வழக்கு ஒன்றில், மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்களில் மாநில அரசுகள் கலந்து கொள்ளக்கூடாது என உத்தரவிட்டது. இந்த உத்தரவு அன்றைக்கு மேடையில் இருந்த கருணாநிதியிடம் சொல்லப்பட்டதும் ஆர்ப்பாட்ட களத்தில் இருந்து அவர் உடனடியாக கிளம்பிச் சென்றார்.

சர்ச்சை தவிர்ப்பு

சர்ச்சை தவிர்ப்பு

இதையெல்லாம் அதிகாரிகள் தரப்பில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சொல்லப்பட்டதாம். இதனால் தேவையில்லாத சட்ட சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டாம் என முடிவு செய்து முதல்வர், போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்கின்றனர் தலைமை செயலக அதிகாரிகள்.

English summary
Here is the reasons for Tamilnadu Chief Minister MK Stalin not participate the DMK party Allies protest agains Centre Govt.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X