சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெல்லி வன்முறை: நடுத்தெருவுல ரஜினியே பேசிட்டாரு.. இன்னும் முதல்வர் எடப்பாடியாரின் மவுனம் ஏனோ?

Google Oneindia Tamil News

சென்னை: தலைநகர் டெல்லியில் இஸ்லாமியர்களை குறிவைத்து வன்முறை கும்பல் நடத்திய வெறியாட்டத்தில் 34 உயிர்கள் பலியாகி இருக்கின்றன. சந்தை நிலவரம் போல மரித்து போன உயிர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்வது குலைநடுங்க வைக்கிறது. ஆனால் சிறுபான்மை மக்களுக்கு அரணாக இருப்போம் என கூட்டறிக்கை வெளியிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமியோ துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வமோ இதுவரை மவுனத்தை கலைக்காமல் இருக்கின்றனர்.

மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்தை ஆதரிக்கிறோம் என்ற பெயரில் வீதிக்கு வந்த வன்முறை கும்பல் டெல்லியில் இஸ்லாமியர்களை நரவேட்டையாடி இருக்கிறது. வடகிழக்கு டெல்லியில் இஸ்லாமியர்களின் மதவழிபாட்டு தலங்கள், வர்த்தக நிறுவனங்களைத் தீக்கிரையாக்கி ருத்ர தாண்டவமாடியிருக்கிறது.

இத்தனை வன்முறைக்கும் காரணமே பாஜக தலைவர்களின் இடைவிடாத வன்முறை பேச்சுகள்தான் காரணம். இதனை சுட்டிக்காட்டிதான் இந்த பாஜக தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் உத்தரவிட்டார். அவரை உடனடியாக இடம்மாற்றம் செய்துவிட்டது மத்திய அரசு. சென்னை: தலைநகர் டெல்லியில் இஸ்லாமியர்களை குறிவைத்து வன்முறை கும்பல் நடத்திய வெறியாட்டத்தில் 34 உயிர்கள் பலியாகி இருக்கின்றன. சந்தை நிலவரம் போல மரித்து போன உயிர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்வது குலைநடுங்க வைக்கிறது. ஆனால் சிறுபான்மை மக்களுக்கு அரணாக இருப்போம் என கூட்டறிக்கை வெளியிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமியோ துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வமோ இதுவரை மவுனத்தை கலைக்காமல் இருக்கின்றனர்.

மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்தை ஆதரிக்கிறோம் என்ற பெயரில் வீதிக்கு வந்த வன்முறை கும்பல் டெல்லியில் இஸ்லாமியர்களை நரவேட்டையாடி இருக்கிறது. வடகிழக்கு டெல்லியில் இஸ்லாமியர்களின் மதவழிபாட்டு தலங்கள், வர்த்தக நிறுவனங்களைத் தீக்கிரையாக்கி ருத்ர தாண்டவமாடியிருக்கிறது.

இத்தனை வன்முறைக்கும் காரணமே பாஜக தலைவர்களின் இடைவிடாத வன்முறை பேச்சுகள்தான் காரணம். இதனை சுட்டிக்காட்டிதான் இந்த பாஜக தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் உத்தரவிட்டார். அவரை உடனடியாக இடம்மாற்றம் செய்துவிட்டது மத்திய அரசு.

கிட்னி பெயிலியர்... மனைவி மரணம்... மகன் தற்கொலை... கே.பி.பி.சாமியின் சோக கதைகிட்னி பெயிலியர்... மனைவி மரணம்... மகன் தற்கொலை... கே.பி.பி.சாமியின் சோக கதை

ரஜினி விமர்சனம்

ரஜினி விமர்சனம்

தேசத்தின் ஆன்மாவை உலுக்கிக் கொண்டு இருக்கும் இந்த விவகாரத்தில் கேரளா முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனத்தையும் எதிர்ப்பையும் பதிவு செய்திருக்கின்றனர். இஸ்லாமியர்களுக்கு பிரச்சனை என்றால் முதல் ஆளாக குரல் கொடுப்பேன் என்று கூறிவிட்டு மவுனமாக இருந்து வந்தார் ரஜினிகாந்த். அவர் கூட நேற்று வழக்கம் போல போயஸ் கார்டனில் நடுத்தெருவில் இன்று மத்திய அரசை விமர்சித்திருக்கிறார்.

தமிழக முதல்வர் மவுனம்

தமிழக முதல்வர் மவுனம்

ஆனால் தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசு இதுவரை வாய் திறந்து ஒரு வார்த்தை கூட இந்த வன்முறை சம்பவம் குறித்து பேசாதது சிறுபான்மை மக்களிடம் இருந்து அக்கட்சியை வெகுதூரம் விலக்கிக் கொண்டுதான் போக வைக்கிறது. சி.ஏ.ஏ.வை ஆதரித்து நாடாளுமன்றத்தில் வாக்களித்தது முதலே அதிமுக கடும் எதிர்ப்பை சம்பாதித்துக் கொண்டிருக்கிறது.

அரணாக இருப்போம் என அறிக்கை

அரணாக இருப்போம் என அறிக்கை

இந்த எதிர்ப்புகளை உணர்ந்துதான் முதல்வர் எடப்பாடியாரும் துணை முதல்வர் ஓபிஎஸ்ஸும் கூட்டாக ஒரு அறிக்கை வெளியிட்டனர். அதில், சிறுபான்மை மக்களுக்கு அரணாக அதிமுக இருக்கும் என கூறியிருந்தனர். இதோ டெல்லியில் இத்தனை உயிர்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டுள்ளனவே! வடகிழக்கு டெல்லியின் வீதிகளில் ரத்த ஆறையே வன்முறை கும்பல் ஓடவிட்டிருக்கிறதே!

 ஒற்றை வார்த்தை கூட இல்லையே

ஒற்றை வார்த்தை கூட இல்லையே

3 நாட்கள் கழித்தாவது பிரதமர் மோடி வாய் திறந்துவிட்டார்... காங்கிரஸை விமர்சிக்கிறோம் என்ற பெயரிலாவது மத்திய அமைச்சர்கள் மவுனத்தை கலைத்திருக்கிறார்கள். ஆனால் சமூக நீதியின் தாய் மண்; சிறுபான்மையினரை தாயாக பிள்ளையாக அரவணைக்கும் தமிழ் மண்ணை ஆட்சி செய்யும் முதல்வர் எடப்பாடியார் கிஞ்சித்தும் ஒற்றை வார்த்தையை கூட உதிர்க்காமல் இருக்கிறாரே!

மிரட்டலுக்கு அச்சமா?

மிரட்டலுக்கு அச்சமா?

பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜாதான், சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தீர்மானம் போட்டால் ஆட்சியையே கலைப்போம் என மிரட்டுகிறார். அந்த மிரட்டல்களுக்கு கூடவா ஆளும் அதிமுக அரசு அஞ்சி அமைதி காக்கிறது? ஏன் இந்த கனத்த மவுனம் என்பது யாரோ ஒருவரது கேள்வி அல்ல.. இந்த மண்ணின் ஒவ்வொரு குடிமகனும் எழுப்புகிற கேள்வி.. உங்களது மனசாட்சியை இப்போதாவது ஆகக் குறைந்தது ரஜினிகாந்த் அளவுக்காவது திறந்து வைத்து பேச வாருங்கள் முதல்வர் எடப்பாடியார் அவர்களே!

English summary
Tamilnadu Chief Edappadi Palanisamy yet to comment on Delhi Violences.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X