சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கல்விக் கடன் தள்ளுபடி.. திமுக, அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்.. தாக்கத்தை ஏற்படுத்துமா?

Google Oneindia Tamil News

Recommended Video

    DMK Manifesto List: திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கை - முழுவிவரம்

    சென்னை: தமிழ்நாட்டில் ஆளும் அதிமுக மற்றும் எதிர்க்கட்சியான திமுக இரண்டுமே கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துள்ளன. இளைஞர்களின் வாக்கு வங்கியை குறி வைத்தே இந்த அறிவிப்பினை இரு கட்சிகளும் வெளியிட்டுள்ளன.

    நேற்று காலை திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில் நீட் தேர்வு ரத்து, மாணவ மாணவிகள் வங்கிகளில் பெற்றுள்ள கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி கொடுக்கப்பட்டிருந்தது.

    இதேபோல் அதிமுக நேற்று வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலும், மாணவ மாணவிகள் வங்கிகளில் பெற்ற கல்வி கடனை ரத்து செய்ய வலியுறுத்துவோம் என கூறப்பட்டிருந்தது. இரு கட்சிகளுமே இளைஞர்களின் வாக்குவங்கியை குறிவைத்து இந்த கவர்ச்சி அறிவிப்பினை வெளியிட்டுள்ளன.

    தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையை விமர்சிப்போம்... கனிமொழிக்கு தமிழிசை பதிலடி தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையை விமர்சிப்போம்... கனிமொழிக்கு தமிழிசை பதிலடி

    லட்சம் மாணவர்கள்

    லட்சம் மாணவர்கள்

    தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஒருலட்சம் என்ஜினியரிங் பட்டதாரிகள் 530 கல்லூரிகளில் இருந்து படித்து முடித்து வெளியேறுகிறார்கள். இவர்களில் பலர் கல்விக்கடன் வாங்கி படித்தவர்கள். ஆனால் அவர்கள் அத்தனை பேருக்கும் சரியான வேலை கிடைப்பதில்லை.

    20 ஆயிரம் கோடி

    20 ஆயிரம் கோடி

    தமிழகத்தில் ஒவ்வாரு 5 கல்வி கடன்களில் ஒரு கடன் பொதுத்துறை வங்கிகளில் வாங்கப்பட்டவை ஆகும். பொறியியல் மாணவர்களே அதிகம் கடன் வாங்கி படிக்கிறார்கள். தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.20 ஆயிரம் கோடி அளவுக்கு மாணவர்கள் கல்வி கடன் வாங்கியுள்ளனர்.

    வாரக்கடன்

    வாரக்கடன்

    தமிழகத்தில் உள்ள வங்கி கடன்களில் 17 சதவீதம் கல்வி கடன்கள் இருப்பதாக வங்கியாளர்கள் கூறுகிறார்கள். தமிழகத்தில் பெரும்பாலான மாணவர்கள் கல்வி கடன்களை கட்ட முடியாத நிலையில் இருப்பதால் அந்த கடன்கள் வாரக்கடனாக இருக்கிறது.

    அரசியல் ஆதாயம்

    அரசியல் ஆதாயம்

    இந்நிலையில் தமிழகத்தில் முதல் தலைமுறை வாக்களார்கள் 9 லட்சம் என்ற அளவில் இருக்கிறது. மொத்தம் உள்ள 3.84 கோடி வாக்களர்களில் 20 முதல் 50 வயதுக்குள் உள்ளவர்கள் ஆவார். எனவே இளைஞர்களின் வாக்குகளை கவர கல்வி கடன் தள்ளுபடியை வாக்குறுதிகளாக ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.

    ஆர்பிஐ எதிர்க்கும்

    ஆர்பிஐ எதிர்க்கும்

    இதனிடையே பெரும்பாலான கல்லூரிகளை நடத்துவது அரசியல்வாதிகள் என்ற சூழலில் கல்லூரிகளில் கட்டணங்களை குறைக்காமல், பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து இளைஞர்களை ஏமாற்ற முயற்சிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. ஏனெனில் ரிசர்வ் வங்கி அல்லது மத்திய அரசு கல்வி கடன் தள்ளுபடியை நிச்சயம் அனுமதிக்காது என்கிறார்கள்.

    English summary
    why TN political parties gives The promise of an education loan waiver in lok shaba election
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X