சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நான் சொன்னதை "இன்று மட்டும் இருந்தால் போதும்" என்று தவறாக புரிந்து விட்டனர்.. ரஜினி மீண்டும் டிவீட்!

என் ட்வீட் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என ரஜினிகாந்த் விளக்கம் தந்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: நான் ஒன்னும் அப்படி பேசவில்லை.. தவறாக புரிந்து கொண்டார்கள்... 12-14 மணி நேரம் நடமாடாமல் இருந்தாலே 3வது சூழலுக்கு செல்லாமல் தவிர்க்கலாம் என்றுதான் பேசியிருந்தேன் என்று நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்து "மறுபடியும்" ட்விட் போட்டுள்ளார்!

Recommended Video

    யார் ரிப்போர்ட் செய்தது? டிவிட்டரில் ரஜினி வீடியோ நீக்கப்பட்டது இப்படி தான்

    கொரோனா வைரஸ் விழிப்புணர்வு குறித்த வீடியோ ஒன்றினை ரஜினிகாந்த் அவரது ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். அதில், "12-14 மணி நேரம்வரை கொரோனா பரவாமல் தடுத்துவிட்டால், இந்தியாவில் மூன்றாம் நிலை பரவலைத் தடுத்துவிடலாம்" என்ற கருத்தையும், வேறு சில கருத்துகளையும் தெரிவித்திருந்தார்.

     why twitter deleted my post, actor rajinikanth explains

    ஆனால் தவறான தகவல்கள் உள்ளதாக கூறி உள்ளதாகவும், தங்களது விதிமுறைகளை மீறி இருப்பதாகவும்கூறி அவரது ட்விட்டர் பக்கங்களில் இருந்து அந்த வீடியோ நீக்கப்பட்டது. ட்விட்டரில் ரஜினிகாந்தை 57 லட்சம் ஃபாலோயர்ஸ் உள்ளதாக தெரிகிறது.

    இந்த ட்விட்டர் பதிவை நீக்கியதற்கு யார் காரணம் என்று ரஜினி ரசிகர்கள் குடுமிப்பிடி சண்டையில் சோஷியில் மீடியாவில் இறங்கிவிட்டனர்.. மற்றொரு பக்கம் ரஜினிகாந்த் பதிவு நீக்கத்தை வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ்களில் இறங்கி கலாய்க்க ஆரம்பித்துவிட்டனர்.

    இந்த நிலையில், தன்னுடைய ட்வீட் தொடர்பாக ரஜினிகாந்த் ஒரு விளக்கம் அளித்துள்ளார்... அந்த விளக்கத்தையும் ட்வீட் மூலமாகவே தெரிவித்துள்ளார். அதில், "நேற்று பதிவு செய்த காணொளியில் 12 -14 மணி நேரம் மக்கள் வெளியில் நடமாடாமல் இருந்தாலே கொரோனா வைரஸ் பரவுவது தடைபட்டு, சூழல் மூன்றாம் நிலைக்குச் செல்வது தவிர்க்கப்படலாம் என்று நான் கூறியிருந்ததால், அது, "இன்று மட்டும் அப்படி இருந்தாலே போதும்" என்று பரவலாகப் புரிந்து கொள்ளப்பட்டு அதிகம் பகிரப்பட்டது. இதனால் ட்விட்டர் நிர்வாகம் அதை நீக்கியுள்ளது.

    நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அரசு பரிந்துரைக்கும் காலம் வரை இன்றைப் போலவே சுய தனிமைப்படுத்துதலை நாம் கவனமாகப் பின்பற்றி இந்த கொடிய வைரஸை வீழ்த்துவதற்கான முயற்சியில் கவனத்தை செலுத்துவோம்... இவ்வேளையில் என்னுடைய காணொளியின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு ஆதரித்து மக்களிடம் பதிவை சரியான முறையில் கொண்டு சேர்த்த அனைவருக்கும் நன்றி" என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

    இந்த ட்வீட்டினை ரஜினி ரசிகர்கள் வரவேற்று கொண்டாடி வருகின்றனர்... "நன்றியெல்லாம் எதுக்கு தலைவா.. வீடியோவ நீக்குனதுனால ஆயிரக்கணக்கான வீடியோ Upload ஆகியிருக்கு... நீங்க எது சொன்னாலும் குற்றம் கண்டுபிடிக்கிற காமாலை கண் நோயாளிகளுக்கு அப்படி தான் தலைவா தெரியும். இவனுங்களையெல்லாம் ஒரு மனுஷனாவே மதிக்காதிங்க... நாங்க எப்பவும் உங்களோட இருப்போம்" என்று நம்பிக்கை தந்து வருகின்றனர். மேலும் சிலரோ "அடக்கினா அடங்கிற ஆளா நீ தலைவா.." என்றும் "யாராவது மண்டபத்துல எழுதி கொடுத்ததை படிச்சா இப்படி தான் அசிங்கப்படனும்" என்றும் கமெண்ட்களை போட்டு வருகின்றனர்!

    English summary
    why twitter deleted my post, actor rajinikanth explains and tweet about it
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X